குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, May 28, 2022

பிராமண ஆதிக்கம் பிரதமர் மோடிக்குப் பின்னால் அதிகரித்திருக்கிறதா? சாட்சியுடன் சிறு ஆய்வு

இந்தப் பதிவு எழுத உதவிய மே 2022 காலச்சுவடு பத்திரிக்கைக்கு நன்றி. கர் நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா பிராமண வகுப்பைச் சார்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டில் டி.எம்.கிருஷ்ணாவுடன் ஷேக் மெஹபூப் சுபகானி மற்றும் கலீஷாபீ மெஹபூப் என்ற பெண்மணியுடன் ஒரு வீடியோ யூடியுப்பில் காணக்கிடைத்தது. 

பிராமணர் - முஸ்லிம் கலவையில் ஒரு கச்சேரி. ஆச்சரியம். 

இந்த வீடியோவை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். மதிப்பிற்குரிய பெண்மணி கலீஷாபீ மெஹபூப் நெற்றியில் குங்குமம் சுடர் விடுகிறது. பட்டுச் சேலை, வளையல்கள், மோதிரங்கள், கழுத்தில் சங்கிலி என அக்மார்க் தமிழன்னை போல அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள். 

நாதஸ்வரத்திலிருந்து வெளியேறும் காபி ராகம் - கான மழையினைப் பொழிகிறது. சங்கதிகளை நாதஸ்வரம் அனாயசமாக இசை மழையாகப்  பொழிகிறது. காணவும், கேட்கவும் கொடுப்பினை வேண்டும். என்ன ஒரு அழகான இசை மேடை?

பெயரில் மட்டும் முஸ்லிம். ஆனால் வாழ்வியலோ தமிழர் பாரம்பரியம். அழகு மிளிரும் இந்த இசை மேடையில் நாதமும் இசையும் ஒன்று சேர்ந்து பிரம்மத்தை உணர வைக்க கானமாக பொழிகிறது. இதுதான் தமிழ் நாடு.

ஆனால் தலை முடிக்குள் இருக்கும் பேன் போல பிராமணர்களின் செயல்பாடுகள் இசையிலும் சாதி வெறி கொண்டு செயல்படும் போக்கினையும், பிரதமர் மோடி பிரதமர் ஆன பின்னாலே பிராமணர்களின் ஆதிக்கமும், கொட்டமும், ஆட்டமும் அதிகரித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் டி.எம்.கிருஷ்ணாவின் ’அவர்களைப் பொறுத்தவரை நான் துரோகி” என்ற காலச்சுவடு கட்டுரை வெளிச்சம் போட்டு விட்டது.

இசைக்கு எதற்கு சாதி? தலித் சாதியைச் சார்ந்த ராசய்யாவிடம் (இளையராஜா) பிராமண சாதி பாடகர்கள் தான் அதிகம் சம்பாதித்தார்கள்.  பணம் வருகிறது என்றால் சாதி பார்க்க மாட்டார்கள்.

திராவிட அரசியல் இயக்கங்களால் மட்டுமே தமிழ் நாடு இவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. 

இறைவனின் சன்னிதியில் சாதி தீண்டாமையை இன்றும் பின்பற்றும் இனமாக இருக்கிறார்கள். 

இவர்களுக்கு திராவிட நாடுகளின் கோவில்கள் தான் குறி. வடநாட்டில் ஓரமாய் உட்கார்ந்திருக்கிறார்கள். 

ஆகமம் என்பார்கள், நியமம் என்பார்கள், இந்து தர்மம் என்பார்கள். என்னென்ன பொய்களையும் புரட்டுகளையும் சொல்ல வேண்டுமோ அத்தனை கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுவார்கள். இன்னும் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது. ஆனால் முஸ்லிம் நாட்டில் வேலைச் செய்வார்கள். இவர்களுக்கு கிறிஸ்துவர்களைப் பிடிக்காது. ஆனால் அமெரிக்காவில் வேலை செய்வார்கள். இதுதான் இவர்களின் தர்மம். இவர்கள் தான் நெற்றியில், உடையில், உணவில், மொழியில், பேச்சில் சாதியைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வேறு எந்த சாதியும் இப்படி இருப்பதில்லை. அவர்கள் எல்லோரும் உலகோடு இயைந்து வாழ்கிறார்கள். 

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆன பின்னாலே பிராமணர்களின் ஆட்டம் அதிகரித்திருக்கிறது என்கிறார் பிராமணரான டி.எம்.கிருஷ்ணா. இனி அவர் என்னென்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம். இதை நான் சொல்லவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

காலச்சுவடு மே மாதம் 2022 புத்தகத்தில் பக்கம் 45ல் டி.எம்.கிருஷ்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களில் ஒரு சில.

அவர்களைப் பொறுத்தவரை கர்நாடக இசையுலகம் அவர்களின் அதிகாரபூர்வமான வாழ்க்கை. வெளியுலகம் என்பது அதற்கு வெளியே இருக்கும் காதல் போன்றது. அவர்களின் அடையாளம் இசை, கலாச்சாரம். வெளியுலகம் உலகியல் நலன்களுக்காகத் தேவை என அவர்கள் மறைமுகமான நினைக்கின்றார்கள். ஊடகக் கவனம், பணம், புகழ் கிடைக்கும் என்று அவர்கள் வெளியுலகத்திற்கு வருகிறார்கள்.

இசையுலகில் மூன்று இந்தியர்களுக்கு தான் மகசேசே விருது வழங்கப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவிசங்கர் அதற்குப் பிறகு எனக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் இசையுலகில் எல்லாரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தனர். ஆனால் குழு வெளியிட்டிருந்த அறிவிப்பில் ‘பிராமணிய ஆதிக்கத்திலிருக்கும் கர்நாடக இசையுலகில் சாதி, வர்க்கத் தடைகளைத் தகர்த்து, சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதற்காக அவர் காட்டும் வலிமையான ஆற்றலுக்கான அர்பணிப்புக்காக’ என்னை அங்கீகரிப்பதாகச் சொன்னார்கள். அதன் பிறகு வாழ்த்தியவர்கள் எல்லாரும் தூற்றத் தொடங்கினார்கள்.

கர்நாடக இசையுலகம் ஒரு பழமைவாத இந்து பிராமண உலகம். இது உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. நரேந்திர மோடி வெற்றி பெற்ற 2014க்குப் பிறகு பிராமணர்களின் பழமைவாத இறுக்கம் இன்னும் அதிகமாகி விட்டது. 

புத்தகத்தில் இருந்து ...


இவர் எழுதிய Southern Music - A Carnatic Music, Sebastian & Sons ஆகிய இரண்டு புத்தகங்களால் இவருக்கும் பிராமணியர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உண்டாகி இருப்பதை காலச்சுவடு விரிவாக பதிவு செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல காலச்சுவட்டின் அட்டைப்படத்தில் பிராமணர்கள் இவருக்கு கொடுத்த பட்டம் “ துரோகி”

துரோகி என்ற சொல் யாருக்குப் பொருந்தும் என்று படிப்பவர்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் என்ன எழுத வேண்டி இருக்கிறது. மனித சமூகத்தை இவர்களைப் போன்றோர்களிடமிருந்து விலகிட வைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மனிதாபிமானம் மிக்க மனிதர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இசை என்பது இறை. 

நாங்கள் மட்டும் தான் பாடுவோம் என்றால் அவர்கள் இறைவனுக்கு பிடிக்காதவர்கள். இறைவனின் சன்னிதியில் சாதி பார்ப்பவர்கள் நாத்திகவாதிகள். 

மனிதாபிமானமும், அன்பும் மட்டுமே இவ்வுலகின் வாழ்வியல் சக்கரத்தின் அச்சாணி. 

முகம்மதுவும், செபாஸ்டியனும், ராமானுஜமும், கபாலியும் ஒரே மேடையில் அமர்ந்து இசைக்கச்சேரி இசைக்கும் காலம் வந்தே தீரும். 

அதற்கு முயற்சி செய்யும், செய்து கொண்டிருக்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு (எனக்குப் பிடித்த கடவுள்) மனித சமூகத்தின் சார்பாக வந்தனங்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

* * *

1 comments:

manmathan said...

TM Krishna the gem of kanatic music and very open minded

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.