குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, May 27, 2022

டெக்னாலஜியின் வளர்ச்சி - பிஜேபியின் சாதனையா?

பிரதம மந்திரி தமிழகத்துக்கு 31,500 கோடி ரூபாய் தமிழ் நாட்டின் உட் கட்டமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

அனைவருக்கும் வீடு திட்டத்தில் சென்னையில் 1152 வீடுகளை ஒன்றிய அரசும், தமிழ் நாடு அரசும் இணைந்து கட்டி அதனைப் பயனாளர்களுக்கு ஒப்படைத்த நிகழ்வு தான் உண்மையில் மிகச் சிறந்தது. ஏழைகளுக்கு வீடு திட்டத்தில் இரண்டு படுக்கை அறை, கழிவறை வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமை அடைந்ததால் பயனர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. 

டிவியில் லைவ் நிகழ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சல்லித்தனமான ஒரு செயலை பார்வையாளர்கள் செய்து கொண்டிருந்தார்கள். இதில் என்ன சந்தோஷமோ? ஆளுநர் அவர்களோ அதற்கும் மேல். 

முதலமைச்சர் ஸ்டாலின் பெயரைச் சொன்ன போதெல்லாம் சத்தம் அதிகமானது. எதற்கு இந்தச் சத்தம்? என்ன பயன்? 

பிரதமர் புதிய கல்வித் திட்டத்தில் மாநில மொழிகளில் படிக்கலாம் என்ற போது ஆளுநர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. எவ்வளவு அறிவிலித்தனமான செய்கை தெரியுமா இது? அசிங்கம் என்று தெரியாமலே சின்னப் பிள்ளைகளைப் போல நடந்து கொண்டார்கள். 

நம் பாரதப் பிரதமர், நம் முதலமைச்சர், நம் ஆளுநர், நம் மந்திரி என்ற எண்ணம் மக்களுக்குள் உருவாக வேண்டும். 

ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் போக்கு வன்மத்தை விதைப்பதாகவே உள்ளது. பிஜேபிக்கு கலவரமே கொள்கை என்கிற போது அவர்களிடம் மிருகத்தனமான பேச்சுக்களும், வெறித்தனமான கத்தல்களும் தான் வரும்.

உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று நினைவு படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒன்றிய அரசு தானாகவே வரி வசூலிப்பது இல்லை. கூட்டாட்சி முறையில் மாநிலங்கள் மூலமாக கிடைக்கும் வரி வருவாயில் நலத்திட்டங்கள் செயல்படுத்தல் அவசியம். அதற்குதான் அரசாங்கம் இருக்கிறது. 

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் 31,500 கோடி ரூபாயும் பிஜேபியினர் கடுமையாக உழைத்து தமிழ் நாட்டுக்கு கொடுத்தது போல பேசிக் கொண்டிருந்தார். பிஜேபியினர் அவரவர் மாமனார் வீட்டிலிருந்து வாங்கி கொடுத்தது போல பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

உண்மையில் அதிகாரமிக்கவர்கள் யார் தெரியுமா? 

ஒரு தாசில்தாருக்கு இருக்கும் அதிகாரம் கூட இல்லாதவர்கள் தான் பிரதம அமைச்சரும், முதலமைச்சரும், மந்திரி பிரதானிகளும். சட்டம் அதுதான். ஒரு சான்றிதழ் வேண்டுமென்றால் தாசில்தார் தர வேண்டும். முதலமைச்சரால் முடியாது. ஏன் பிரதம மந்திரிக்கும் தாசில்தார் தான் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். ஒரு பள்ளிதான் டி.சி கொடுக்க முடியும். இப்படி வெற்று ஒப்பனைக்கார பதவிகள் அவைகள். ஊழல்களில் தண்டிக்கப்படுவர்கள் அரசு அதிகாரிகளே. 

ஆட்சி நடத்த ஆலோசனைகள் மட்டுமே தரவியலும். இயக்குவது, இயங்க வைப்பது, நடமுறைப்படுத்துவது எல்லாம் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள். 

அரசாங்கம் தாயைப் போன்றது. மக்களின் தேவைகள் அறிந்து வேண்டுவன நிறைவேற்றிக் கொடுக்க பரிந்துரை செய்து, அதனை நடத்துகிறார்களா அரசு அலுவர்கள் என்று பார்ப்பது மட்டுமே இவர்கள் பணி.

பிரதமரை காவலன், கோவலன், இரும்பு மனிதர், ஆஹா, ஓஹோ என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பவர்களும், பேசிக் கொண்டிருப்பவர்களும் மடையர்களே. பூ தூவுகின்றார்கள், வாழ்த்துப் பாடுகின்றார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் இன்னும் என்னென்ன சேட்டைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதெல்லாம் தேவையா என்று கட்சிகள் யோசிக்க வேண்டும். 

பிஜேபி தமிழ் நாட்டில் செய்யும் அரசியல் கேவலமானது. அண்ணாமலைக்கு பிஜேபிக்கு தலைவனாக இருக்கும் தகுதியே இல்லை. ஆக்கப்பூர்வமான அரசியல் வேண்டும். அதைச் செய்யும் நபரை தலைவராக நியமிக்க வேண்டும். இல்லையெனில் நேற்று உலகமெங்கும் கோபேக்மோடி டிரண்டிங்கில் இருந்தது போல இன்னும் வெறுப்பு அரசியல் மேலோங்கும். தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியாது.

டிஜிட்டல் இந்தியா  பிஜேபியின் சாதனை என்கிறார்கள். இணையதளங்களிலும், டிவி குரைக்கும் ஷோக்களிலும் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எது சாதனை?

ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதா?

வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது, பான் கார்டை இணைப்பதா? 

மொபைல் போன் ஆப்பில் வங்கிப் பரிவர்த்தனை செய்வதா?

ஆன்லைனில் வரி கட்டுவதா?

இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்வதா?

டிவிட்டரில் எழுதுவதா?

ஃபேஸ்புக்கில் கமெண்ட்டடிப்பதா?

ஓடிடியில் படம் பார்ப்பதா?

இதுவெல்லாம் டெக்னாலஜியின் வளர்ச்சி. ஹெச்டிஎம் எல் வெப் டிசைன் பின்னர் சி.எம்.எஸ் ஆகி இப்போது வேறு எங்கேயே சென்று விட்டது. நொடிக்கொரு தரம் டெக்னாலஜியினை வளர்ப்பது தனியார்கள். யாரோ ஒருவரின் மூளையில் உதிக்கும் சிந்தனைதான் டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு ஆதாரம்.  

டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை பிஜேபி. ஆனால் சாதனை என்கிறார்கள். சாதனை அல்ல, இப்படி பொய் சொல்வது வேதனை. மக்களை மடையர்கள் என்று நினைத்துக் கொள்வது பிஜேபிக்கு வசதி. பிறருக்கு அல்ல.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ படியுங்கள்.

தடுப்பூசி சர்ட்டிபிகேட்டில் பயனர் படத்துக்குப் பதிலாக பிரதம மந்திரியின் புகைப்படத்தைப் போட்டது தான் சாதனை.

டீமாண்டிஷேசனின் போது ஏ.டி.எம்களில் புது இரண்டாயிரம் ரூபாய் வைக்க புதிய டிரேயைச் சொருகினார்கள். ஏற்கனவே இருக்கும் ஏ.டி.எம். டிசைனில் உள்ள பணம் வைக்கும் டிரேயின் சைஸ் என்னவென்று கூட தெரியாமல் நோட்டு அச்சடித்து மக்களைக் கொன்றதுதான் பெரும் சாதனை. எப்படி ஒரு ஆட்சி என்று பாருங்கள்.

பிளாக்‌செயின் டெக்னாலஜியை பிஜேபியா கண்டுபிடித்தது? ஒன்றையும் செய்யவில்லை.

டிஜிட்டல் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? படியுங்கள் வேதனை தான் மிஞ்சும்.

ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைக்கும் விற்பனைப் பொருட்களுக்கான வரி உயர்வு, வரி குறைப்பினை சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் சட்டம் போட்டு அமல்படுத்தாமல் தானே ஜி.எஸ்.டி சாஃப்ட்வேரில் மாற்றம் செய்து கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.

இதன் பதிவுகள் எங்கே இருக்கும்? சட்டம் எங்கே? எதுவும் இல்லை. கம்ப்யூட்டரை ஆன் செய்வது. உள்ளே வரியின் அளவைக் கூட்ட வேண்டியது. அம்புட்டுதான். (கருத்து : தமிழ் நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பேட்டியிலிருந்து)

அரசியலமைப்புச் சட்டம் என்னவென்று தெரியாத சாதனையை பிஜேபி செய்து வருகிறது.

சாதனைகளை இன்னும் தொகுத்தால் பிஜேபி அரசாங்கம் அசிங்கப்பட்டு விடும்.

இன்றைய சாதனை என்ன தெரியுமா? 

வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏன் உயர்த்தினார்கள்? யாருக்கு இதன் பயன் போகப் போகிறது? இது சாதனை.

சமீபத்தில் டோல் கேட் கட்டணம் உயர்த்தப்பட்டது? ஏன் உயர்த்தப்பட்டது? யாருக்கு இதன் பயன் செல்லப் போகிறது? இது இன்னொரு சாதனை.

இல்லத்தரசிகள் மாதம் 100 ரூபாய் கட்டணத்தில் அழுகை புராணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு என்.சி.எஃப் என்று கட்டணம் போட்டு 100 ரூபாய் பிடுங்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இது ஒரு சாதனை.

இன்னும் இருக்கிறது. மக்களிடம் இருந்து நேரடியாகப் பிடுங்கி தனியார் நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி கொடுக்கும் இமாலய சாதனையை தொடர்ந்து செய்து வருகிறது பிஜேபி அரசு.

கம்பெனிகளிடமிருந்து சுமார் 2550 கோடி ரூபாய் பிஜேபி அரசு தேர்தல் செலவுக்கு வசூலித்திருக்கிறது. கணக்கிலே இவ்வளவு என்றால்?

பின் குறிப்பு ஒன்று :

தருமபுரம்(??? பெயரைப் பாருங்கள்) ஆதினம் பல்லக்கில் நாலு பேரு பிணத்தை தூக்குவது போல தூக்கி வந்தால் தான் இந்து தர்மம் நிலை நிறுத்தப்படும் என்று ஆதீன மடாதிபதிகள் கூவினார்கள். ஒரு ஜீயர் குரைத்தான் நாய் போல. பின்னர் நாய் வாலைச் சுருட்டிக் கொள்வது போல சுருட்டிக் கொண்டான்.

தற்போதைய அரசின் அதிகாரத்தில் இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். என்ன செய்யப் போகின்றீர்கள் என்று.

”அவன் பல்லக்கில் போனால் என்ன? மல்லாக்க விழுந்தால் என்ன? அவன் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல அவன் நடிக்கிறான். இதனால் மக்களுக்கு நன்மையா நடக்கப் போகிறது? ஒரு மண்ணாங்கட்டிக்கும் பிரயோஜனம் யாருக்கும் இல்லை” என்றார்.

தருமபுரம் ஆதீனம் ஒரு சோத்து மூட்டை என்று தன்னைத் தானே நிரூபித்துக் கொண்டார். மடத்தனத்தின் அதிபதி தான் என்று நிரூபித்துக் கொண்டார் அவர். இதோ படம். பார்த்து வையுங்கள். இதெல்லாம் உள்ளே போனால் உடம்பு சும்மா இருக்குமா? என்னென்ன செய்யும்? அப்போ இந்த ஆள் மடத்துக்குள் என்னவெல்லாம் செய்வார்? யோசித்துப் பாருங்கள். அம்புட்டுதான் இதுதானிந்து தர்மம்.


மடாதிபதியின் இடது பக்கத்தில் மண்டையில் கொட்டை போட்டு உட்கார்ந்திருக்காரே மதுரை ஆதீன மடாதிபதி எப்படி வளச்சு வளச்சு உள்ளே தள்ளுகிறார் பாருங்க. தருமபுர பல்லக்கைத் தூக்கினாரா என்று இவரை யாராவது நேரில் பார்த்தால் கேளுங்கள்.

விதியைப் பார்த்தீர்களா? தருமபுரம் தனக்குத்தானே ஆப்புச் செருகி அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இனி இவரைப் பார்க்கும் போதெல்லாம் இலையும் அதிலிருந்த இரண்டு பட்டைச் சோறும் நினைவுக்கு வந்து விடும்.

* * *

1 comments:

manmathan said...

savuku adi pathivu

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.