குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, May 18, 2022

வடையும் தற்போதைய நிலையும்

எது உண்மையோ, எது அறமோ அதைப் பேசலாம். அறமா, உண்மையா அப்படின்னா என்னா என்று கேட்போருக்கு பதில் ‘ஙே’.

இன்றைய செய்திதாளில் வந்த செய்திப் படங்கள் கீழே. முதல் படம் வடை சுடுவது எப்படி என்பதற்கான குறிப்பு. இரண்டாவது படம் சுட்ட வடையை வாங்க வக்கில்லாத நிலையினைக் குறிக்கும் படம்.  மூன்றாவது படம் ஜாதி. படிச்சு வையுங்க. அதற்கடுத்தது ஒரு சிறு கதை. நெட்டில் படித்தது. 

நன்றி : தினமணி


(வடை சுடுவது எப்படி என்ற குறிப்புகள்)


(சுட்ட வடையை மக்கள் வாங்க முடியுமா முடியாதா - குறிப்பு)

தினமணிக்கு நன்கு தெரியும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் தான் விலை பணவீக்கம் வரலாறு காணாத உயர்ந்தது என்று தெரியும். ஆனால் நக்கி விடுகிறது பாருங்கள்.


மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் தேவை என ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே. பிற சாதிக்காரர்கள் முதல்வராக வரக்கூடாதாம்.

இனி ஒரு நெட்டில் படித்த கதை.

டீக்கடைக்காரரை மீட்டிங்கிற்கு கூப்பிட்டார் ஒரு ஐடி கம்பெனி மேனேஜர். கான்பரென்ஸ் மீட்டிங்கில் அவர் ஒரு மாதமாக கொடுத்த டீயின் சுவை நன்றாக இல்லை என்றும், எந்தெந்த தேதிகளில் டீ கொட்டப்பட்டது, அளவுகள் குறைவாக இருந்தவை எத்தனை டீக்கள் என்ற டேட்டாக்களை அவரிடம் கொடுத்து இனி டீ நன்றாகப் போடுவது எப்படி என்ற விபரங்களை ஒரு பவர் பாயிண்ட் பிரசண்ட்டாக கொடுத்து விடுவதாக சொன்னவுடன் டீக்கடைக்காரர் மண்டை காய்ந்து போய் உட்கார்ந்திருந்தார்.

சாஃப்ட்வேர் ஊழியர்கள் டீக்கடைகாரருக்கு டிஜிட்டல் திரையில் பிரசண்டேசன்களை போட்டு காட்டி விளக்கிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த நிறுவனத்தின் முதலாளி டீக்கடைக்காரரைப் பார்த்து, “ நீ கொடுக்கும் டீ நன்றாக இல்லை, இனி நல்ல டீ கொடுத்தால் தான் காசு, கெளம்பு” என்றுச் சொன்னார்.

டீக்கடைக்காரர் சந்தோஷத்துடன் தலையாட்டி விட்டு சென்று விட்டார்.

(கதைக்கரு சுருக்கப்பட்டிருக்கிறது)

அவ்ளோ தான்.
0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.