குரு வாழ்க ! குருவே துணை !!

Thursday, April 28, 2022

இளையராஜா டிவிட்டர் பராக் அகர்வால் நிதின்கட்காரி செய்திகள் சொல்லும் உண்மை

பிரதமர் மோடி புராணம் பாடும் ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன், “சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்” (Ambedkar & Modi - Reformer's Ideas, Performer's Implementation) என்ற புத்தகத்தை வெளியிட்டது. இந்த பவுண்டேஷனுக்கு  ஃபண்ட் எப்படி வருகிறது? எத்தனை புத்தகங்கள் விற்பனை ஆயின என்ற கணக்குகளை எவரும் கேட்டு விடக்கூடாது. 

மேலும் ஒரு விசேசம் என்னவென்றால் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ப்ளுகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் தானாம். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஒரு அமைப்பு ஒருவரைப் பாராட்டிப் புகழ்ந்து புத்தகம் வெளியிடுகிறது. வேறு எவரின் புத்தகத்தையும் இந்த நிறுவனம் வெளியிடவில்லை. அவர்களின் இணையதளத்தினைச் சென்று பார்க்கவும்.

இந்தப் புத்தகத்தில் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டுத்தான் முன்னுரை எழுத முடியும். பிரதமரைப் புகழும் கட்டுரையில் தூற்றியா எழுத முடியும்?

ஆனால் ஏன் மோடியைப் பற்றி புகழ்ந்து, அம்பேத்காருடன் ஒப்பிட்டு எழுதினார்?  

காரணம் என்ன?

ஒரு காரணம் அகங்காரம்.

மதசார்பற்றவருக்கும் மதத்தின் கொள்கைகளை செயல்படுத்துவரையும் ஒப்பிட்டு எழுத ஒரு தடித்தனம் வேண்டும். 

இளையராஜா தன்னை நோக்கி கேள்வி கேட்ட ஒரு நிருபரை ”உனக்கு அறிவிருக்கிறதா என்பதை எந்த அறிவு மூலம் தெரிந்து கொண்டாய்?” என்ற தத்துவக் கேள்வியைக் கேட்டவர். அந்த நிருபர் சிரித்துக் கொண்டே நின்றார்.

உங்களுக்கு இருக்கும் அறிவை எந்த அறிவு சொன்னதோ அதே தான் எனக்கும் அறிவு இருக்கிறது என்று சொன்னது என அவர் பதில் சொல்லி இருந்தால் எவ்வளவு அசிங்கமாய் போயிருக்கும்? ஏகப்பட்ட இசைக்கோர்வைகளைக் காப்பியடிப்பதில் மன்னனான இளையராஜா ஒரு இசையமைப்பாளரை ஆண்மை அற்றவர் என்று விமர்சித்திருந்தார். 

இன்னொரு காரணம் ஜி.எஸ்.டி கவுன்சில் அனுப்பிய ஒரு கோடியே என்பது இலட்சம் வரிப் பாக்கி என்று சொல்கிறார்கள். இணையத்தில் இளையராஜாவுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் அனுப்பிய நோட்டீஸ் கிடைக்கிறது. இரண்டு கோடிக்காக இப்படியா தலையைக் கொடுப்பது? எல்லாப் புகழும் போய் விட்டதே மக்களிடம் இருந்து. பரிதாபம்.

இளையராஜாவுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

பிரதமர் மோடி யாருக்கானவர் என்று உலகிற்கே தெரியும். உயர் ஜாதி ஏழைகளுக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு செய்து ஆணையிட்டவர் நம் பிரதமர் என்பதை மறந்து போய் இப்படியா உங்களை தமிழர்களிடமிருந்து துண்டித்துக் கொள்வது?

வரி தள்ளுபடி கிடைக்குமா என்றால் கிடைக்கும் ஆனால் கிடைக்காது என்று ஆகி விட்டது. வரி கட்டாமல் இருக்க முடியாது இளையராஜா அவர்களே. இனி எல்லோரின் பார்வையும் ஜி.எஸ்.டி கவுன்சில் மீது இருக்கும். நீங்கள் ஜி.எஸ்.டியாக பெற்றதைத்தானே அரசு கட்டச் சொல்கிறது? ஏன் மாட்டேன் என்கின்றீர்கள்? 

ஒரு வழிப்பாதை மரணம் மட்டுமே. 

இது வரிப்பாதை என்பதை மறந்து போனீர்களா?

பிராமண பாடகர்களுக்கு கொடுத்த வாய்ப்பினை தமிழிசைப் பாடகர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? எவரும் துணைக்கு வரமாட்டார்கள். பாடினார்கள் பணம் கொடுத்தீர்கள் அத்தோடு முடிந்தது உங்களுக்கும் அவர்களுக்குமான கதை. தமிழன் தான் இனி உங்களுக்கு.

கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையைப் பாடிய பாவலர் வரதராஜனின் புகழுக்கு உங்களால் அசிங்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கூட உங்களால் உணர முடியாது. 

பரிதாபத்துகுரிய ஒரு இசைக் கோர்ப்பாளரின் புகழ் தூசி தூசியாகிப் போனது காலத்தின் கொடுமை. 

இதை நான் கர்ம வினை என்று சொல்வேன்.

***

டெஸ்லாவின் இலான் மஸ்க் டிவிட்டரை வாங்கி விட்டார். பனியா என்ற உயர் ஜாதியில் பிறந்த பராக் அகர்வாலுக்கு எரிகிறது. கீழே இருக்கும் செய்தியைப் படியுங்கள். 

இவரின் அப்பா அட்டாமிக் எனர்ஜியில் வேலை செய்தவர். அம்மா டீச்சர். ஐஐடியில் படிப்பு. டிவிட்டரில் வேலை. மூடிக்கிட்டு வேலையைப் பார்க்காமல் அலறிக் கொண்டிருக்கிறார்.

இலான் மஸ்க் டிவிட்டரை வாங்கினால் இவருக்கு ஏன் பதட்டம் வருகிறது? என்ன அப்படி ஒரு ஆத்திரம்? வேலைக்காரனான இவருக்கு ஏன் டென்ஷன் வருகிறது? டிவிட்டர் என்ன இவரின் அப்பாவின் கம்பெனியா? 

பிரதமர் மோடியின் டிவிட்டர் பாலோயர்கள் 80 மில்லியனுக்கும் மேல். இந்த டிவிட்டரில் உள்ள ஃபாலோயர்கள் பாட்டினால் (BOTS) உருவாக்கப்பட்டவை என்ற குற்றசாட்டு இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓவுக்கு நிறுவன ஷேர்கள் விற்பனை, உரிமை மாற்றங்கள் நடந்தால் எதற்கு பதற்றம் உண்டாகிறது என்று சித்தித்துப் பார்த்தால் பாட்ஸ்கள் வெளியாகி விடுமோ என்ற பதட்டம் காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 

அடுத்து ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரியின் செய்தி கீழே.


இணையதளங்கள், சோஷியல் மீடியாக்கள் மூலம் பிஜேபி பல செய்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடித்த கதையும், நானும் அதை நம்பி ஓட்டுப் போட்டவன் என்கிற வகையிலும் எந்தளவுக்கு சோஷியல் மீடியாக்கள் மக்களை மூளைச்சலவை செய்வதில் முன்னிலை வகிக்கின்றன என்பதை அறிவோம். டிவிட்டர் என்பது பிஜேபியின் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால் இலான் மஸ்க் வசம் டிவிட்டர் சென்றால் அவர் என்ன விதமான பாதையைத் தேர்ந்தெடுப்பார் என்பது தெரியவில்லை. அப்போது வெட்டவெளிச்சமானால் என்ன செய்வது? என்று பதறும் நிலையில் பராக் அகர்வால் அலறிக் கொண்டிருக்கிறார்.

சைனாவோடு இன்றைக்கும் ஏற்றுமதி, இறக்குமதியை இந்தியா அனுமதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இணையதளத்தில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள். 

ஏன் இந்தச் செய்தியை நிதின்கட்காரி வெளியிட்டார் என்பதற்கும், டிவிட்டரை டெஸ்லாவின் இலான் மஸ்க் வாங்கினார் என்பதற்குமான தொடர்பு என்னவாக இருக்கும் என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

***

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.