குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, March 12, 2022

நீட் அவசியம் - பாலகுருசாமி தினமணி சூழ்ச்சிக் கட்டுரை

12.13.2022 தினமணியில் ஓய்வு பெற்ற பல்கலை துணைவேந்தர் இ.பாலகுருசாமி எழுதிய நீட் தேர்வு தவிர்க்க முடியாதது என்ற கட்டுரை வெளியாகி இருந்தது. 

தினமணி சமீப காலமாக நீட் தேர்வின் அவசியம் பற்றியும், அதன் அருமை பெருமைகளையும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அங்கணம் பாலகுருசாமி எழுதிய கட்டுரையின் சாராம்சம் கீழே.

தமிழக அரசியல்வாதிகளை உள் நோக்கம் கொண்டவர்கள் என்றும், அறிவற்றவர்கள் என்றும் விழித்திருக்கிறார். ’நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, தற்கொலையைத் தூண்டகூடியது, அறிவுத் தீண்டாமையை ஊக்குவிக்கிறது” போன்ற கருத்துக்கள் ஆதாரமற்றவை என்கிறார். அவ்வாறு அது உண்மையெனில் அது எல்லா தேர்வுக்கும் பொருந்தும் அல்லவா என்கிறார். ஏ.கே.ராஜன் கமிட்டி முன்பே நீட் தேர்வு ரத்துச் செய்ய முடிவு செய்து விட்டு, அதற்கு தேவையானவற்றை மட்டுமே அறிக்கையில் கொடுத்திருக்கிறது என்றும் சொல்கிறார். மேலும் மாநில பாடத்திட்டம் மிகவும் மோசமாக இருப்பதும், அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரம் குறைவாக இருப்பதாகவும் கிண்டல் செய்திருக்கிறார்.

நீட் தேர்வுக்கு பயிற்சிக்கு செல்கிறார்கள் என்பது எந்த வித ஆதாரமும் இல்லாதது என்கிறார். வெவ்வேறு விதமான பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்தால் சமத்துவம் ஆகும் என்று சொல்வது விந்தை என்று ஆச்சரியப்படுகிறார்.

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று சோதனை செய்துதான் படிக்க அனுமதிக்க வேண்டுமாம். பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதை நீட் தடுக்கிறதாம். நீட் வரமாம். சட்டம் போட்டு மாற்ற முடியாதாம். ஏனென்றால் அது நீதிமன்ற உத்தரவாம். இப்படியெல்லாம் தனது நயவஞ்சகத்தை கக்கி இருக்கிறார் பாலகுருசாமி.

அரசியல்வாதிகளை இப்படிப் பொதுவெளியில் ஒரு தலைப்பட்சமானவர்கள் என்றும் அறிவில்லாதவர்கள் என்றும் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று புரியவில்லை. ஓய்வுபெரும் வரை அரசியல்வாதிகளின் கால்களைப் பிடித்தவர் பாலகுருசாமி என்பது நிதர்சனம்.

அதுமட்டுமல்ல பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகளால் சட்டசபையில் கொண்டு வந்த நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை அவமானப்படுத்தி இருக்கிறார். தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளஸ் டூவில் பயாலஜி பிரிவு எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக்கல்வி பயில அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை வசதியாக மறைத்து விட்டார்.

பயாலஜி தொடர்பான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன என்பதையும் மறந்து போனார். அதுமட்டுமல்ல எத்தனை வயது ஆனாலும் நீட் தேர்வு எழுதி ரேங்க் பெற்றால் மருத்துவப்படிப்புக்கு அனுமதி பெறலாம் என்கிறது நீட். 

வருடம் தோரும் கனவுகளோடு மருத்துவம் படிக்க துடித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கனவில் இதைப் போன்ற முன்னாள் மாணவர்களின் நுழைவு என்பது வருடம் தோறும் உருவாக்கப்படும் மருத்துவ சீட்டுகளில் படிக்க இடம் கிடைக்காமல் மண்ணை அள்ளிப் போடுவதை பற்றி அவர் எழுதவில்லை. தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவப்பருவத்தில் இந்த தடை வேறு படிப்புகளை நோக்கி அவர்களைத் தள்ளி விடும். மீண்டும் அடுத்த வருடம் நீட் எழுதி வெற்றிபெறலாம் என்ற வெற்றுக்கூச்சலின் பின்னால் மருத்துவம் படிக்க விடக்கூடாது என்ற அக்கிரம எண்ணம் மட்டுமே உள்ளது.

மாணவர்களுக்கு அவர்கள் படிக்க விரும்பும் கல்வி கிடைக்க விடாமல் தடுப்பது தான் ஒரு அரசின் நோக்கமென்றால் நிச்சயம் இருக்காது. ஆனால் மருத்துவக்கல்விக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என்ற கேள்விக்கு விடை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா? பாலகுருசாமி எழுத மாட்டார். 

மருத்துவக் கல்வி என்பது முற்றிலும் முழுமையான கல்வி அல்ல என்று மெத்தப்படித்த பாலகுருசாமிக்கு தெரியாது போல. செலக்டிவ் அம்னீஷியா நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. மருத்துவர்கள் எப்போதும் பிராக்டிஸ் செய்கிறேன் என்று தான் சொல்வார்கள் என்பதை மறந்து விட்டார்.

மாணவர்களுக்கு உடலியல் பற்றிய குறைந்த பட்ச அறிவு இருந்தால் போதுமானது. மருத்துவப் படிப்பில் விரிவாக படிக்கலாம். இதைத்தவிர வேறேன்ன தகுதி வேண்டுமென்று மோடி அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று பாலகுருசாமி சொல்வாரா?

பல்வேறு கல்வித் திட்டங்கள் கொண்ட இந்தியாவில் சி.பி.எஸ்.சி திட்டத்தில் மட்டும் கேள்வித்தாள் உருவாக்கி நீட் தேர்வு வைப்பது அயோக்கியத்தனம் என்பதையும் அவர் மறக்கவில்லை. எழுத வில்லை. சூழ்ச்சிக்கார ஈனத்தன புத்தி என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்.

அகில இந்தியா கோட்டா 15 சதவீதத்தில் தமிழக மாணவர்களுக்கும் சீட் கிடைக்கும் என்கிறார். இந்த அகில இந்தியா கோட்டாவில் ரேங்க் எடுத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இரண்டாண்டுகள் நீட் கோச்சிங்கில் பயின்றவர்களுக்கும், கல்வியை மாமாங்க காலம் படித்த பார்ப்பனியர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் என்பது வரலாறு.

ஒரு சாதாரணனின் மகனோ மகளோ நினைத்தால் கூட மருத்துவம் படிக்க முடியாது. பனிரெண்டாம் வகுப்பில் கடின உழைப்பால் மதிப்பெண் பெற்று விடுவார்கள். ஆனால் சி.பி.எஸ்.சி கல்வித்திட்ட கேள்வித்தாள் என்பது அவர்களுக்கு தெரிந்திராத ஒன்று என்பதை பாலகுருசாமி மறைத்து விட்டார்.

தினசரிகளில் நீட் கோச்சிங்க் விளம்பரங்கள் அவரின் கண்ணில் தென்படவில்லை போலும். தனியார் கோச்சிங்கில் பயின்றவர்களே அதிகம் தேர்ச்சி அடைகிறார்கள் என்பதற்கும் ஆதாரமில்லையாம். இதை எந்த வித ஆதாரம் மூலம் மறுக்கிறார் என்பதை அவர் சொல்லவில்லை. 

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை என்பது போல தோற்றத்தினை உருவாக்குகிறார். மருத்துவக் கல்வி கட்டணம் உண்டு. அது ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியானவை என்பதை மறைத்து விட்டார். 

மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மருத்துவம் படிக்க வருடம் சுமார் முப்பது லட்சம் கட்ட வேண்டும். பணக்காரர் மாணவர் நினைத்தால் நீட் தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்று எளிதில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் படிக்கலாம் என்பதையும் அவர் எழுதவில்லை.

ஒரு தனியார் நீட் கோச்சிங்க் செண்டரில் பயின்றவர்களுக்கு இந்தியாவெங்கும் மருத்துவ அனுமதி கிடைத்தது என்று செய்திகள் வெளியாயின என்பதையும் மறந்து போனார் வசதியாக பாலகுருசாமி. இது பற்றிய விசாரணை கைதுகள் நடந்ததைப் பற்றி எழுதவில்லை அவர்.

உச்ச நீதிமன்றம் சட்டமியற்றும் இடமில்லை. உச்ச நீதிமன்றம் சட்டத்தின் வாயிலாகத்தான் உத்தரவிடும். அந்தச் சட்டம் வேண்டும் அல்லது வேண்டாமென்று முடிவெடுக்கும் இடம் சட்டசபைகள். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் என்ன? சட்டம் இல்லாமல் போனால் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்புச் சொல்லும்? பாலகுருசாமி அவர்களே? பதிலிருக்கிறதா உங்களிடம்?

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா கேத்தன் சேத்தாய் ஏன் கைது செய்யப்பட்டார்? 

நீட் தேர்வு எழுதும் போது ரிமோட் ஆக்சஸ் மூலம் வேறொரு இடத்தில் தேர்விற்கான பதில் எழுதப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?

ஆள்மாறாட்ட மோசடி வழக்குகள் நடக்கின்றனவே அது பற்றிய விஷயம் தெரியாதா உங்களுக்கு?

ஜெயலலிதா காலத்தில் உங்கள் உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு வழங்கியதே அது எந்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?

மக்கள் பிரதி நிதிகள் அறிவற்றவர்கள் என்கிறீர்கள். அவர்கள் ஒரு தலைப்பட்சமானவர்கள் என்று அருவருப்பான கருத்தினை முன் வைத்திருக்கின்றீர்கள்.

தமிழக சட்டசபை தீர்மானம் நீட் வேண்டாமென்கிறது. 

ஆனால் நீங்கள் வேண்டுமென்கிறீர்களே ஏன்? உங்கள் சார்பு என்ன விதமானது? 

நீங்கள் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் எதிரானவர் என்று சொல்கின்றீர்கள். சரிதானே?

ஏ.கே.ராஜன் கமிட்டி ஒரு சார்பு என்றால் இந்தக் கட்டுரை நடுநிலையானதா பாலகுருசாமி அவர்களே?

ஒரு பத்திரிக்கை – ஒரு சில நயவஞ்ச குள்ள நரித்தனம் மிக்க ஈனர்களின் கூட்டு முயற்சியினால் தமிழ் நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையை அவமானப்படுத்துகிறார்கள்.

மெக்காலே கல்வியை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் புகுத்திய போது ஆங்கிலக் கல்வியை எளிதாகக் கற்றுக்கொண்ட பிராமணியர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து இந்தியாவில் நிகழ்த்திய அழிவை எதனுடனும் ஒப்பிட முடியாது. 

மண்ணின் மைந்தர்களான இந்தியர்களின் வாழ்வியலில் ஊடுருவிய வந்தேறி பிராமணியர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக மாறி இந்தியாவைக் காட்டிக் கொடுத்தனர். அதன் காரணமாக ஆங்கிலேயர்கள் இந்தியச் சொத்துக்களை சுரண்டி மொத்தமாக பிரிட்டனுக்கு அனுப்பினர் என்று வரலாறு சொல்கிறது. நான் சொல்லவில்லை. இந்த வரலாறு கொண்டவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் மக்களிடம் நூதன சூழ்ச்சியாக பொய்களையும் புரட்டுகளையும் நம்ப வைப்பது போல செய்திகளைப் பரப்புகின்றன. 

ஒவ்வொரு தமிழனின் வரிப்பணமும் பாலகுருசாமியின் உடம்பில் ஓடுகிறது என்பதையும், தினமணியின் தற்போதைய உரிமையாளர்களின் உடம்பிலும் தமிழனின் காசு இருக்கிறது என்பதையும் அவர்கள் மறந்து விட்டார்கள். நயவஞ்சகத்தின் அத்தனை வழிகளிலும் மூழ்கிய சாணக்கியப் பரம்பரை சூழ்ச்சிக்கார வம்சாவழியில் வந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். 

தமிழர்கள் பிராமணிய பத்திரிக்கைகளை அடியோடு மறுதலிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார்கள். இல்லையெனில் காலம் காலமாக பார்ப்பனிய போலியும் பொய்யுமான புரட்டுச் செய்திகளுக்கு அடிமையாகி கிடப்பது தமிழர்களின் சந்ததியினருக்கும் தொடரும் அவலம் நடந்து கொண்டே இருக்கும்.

மருத்துவத்துறை மர்மம் நிறைந்த துறை. உலக கிரிமினல் மாஃபியாக்களால் கட்டுப்படுத்தப்படும் துறை. ஒரு மருத்துவர் நினைத்தால் எளிதில் ஒரு உயிரைப் பறித்து விட முடியும். கேள்வி கேட்பவர்களுக்குச் சிறை என்கிறது மோடி அரசாங்கம். இத்துறை மூலம் மனிதர்களின் வாழ்வியலில் சிக்கல்களை உருவாக்கிவிடலாம். மனிதர்களைக் கட்டுப்படுத்தலாம். மனிதர்களை அழிக்கலாம். 

மனிதர்கள் தேடி வரும் கோவில், ஹோட்டல்கள், வங்கிகளில் பிராமணியம் ஆதிக்கம் செய்து கொள்ளை அடிக்கிறதோ அதைப் போல பார்ப்பனீயம் மருத்துவத்துறையில் நுழைய உருவாக்கப்பட்டது நீட் என்பதில் எவருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை.

கோவில் வருமானம் – சிலை கடத்தல் – கேள்வி இல்லை. ஹோட்டல்கள் – தரம் – உணவு - வருமானம் – கேள்வி இல்லை. வங்கிகள் – இந்தியாவின் பெரும் ஊழல்கள் நிறைந்த மாபெரும் மர்ம உலகம் – கேள்வி இல்லை. கேள்வி கேட்கும் அறிவும் இங்கு எவருக்கும் இல்லை.

தீண்டாமையை வாழ்வியலாக வாழ்ந்து வரும் பிராமணியம் மருத்துவத்துறையில் உடல் பகுப்பாய்வு செய்ய மனம் ஒப்பாமல் இருந்தது. ஆனால் பணம் என்று வரும் போது பிராமணியத்திற்கு எந்த வித தயக்கமும் இருக்காது. பணத்தின் முன்பு பிராமணியம் தலைகுனியும் தன்மை கொண்டது. அதிகாரத்தினை சூழ்ச்சியின் மூலம் கைப்பற்றுதலையும், தன் தவறுகளுக்கு பிறரைப் பலி கொடுப்பதையும் பார்ப்பனீயம் கொண்டாடும் சாணக்கிய அர்த்தசாஸ்திரம் உறுதிப்படுத்துகிறது.

மாநிலக் கல்விப் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கல்வியை பிஜேபி அரசு கொண்டு சென்று பிராமணியத்திற்கு பணி செய்து கிடக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. 

நீட் – அறிவுத்தீண்டாமையை உருவாக்குகிறது என்பது உண்மை.

தகுதி என்பது தேர்வில் அல்ல என்பதை பாலகுருசாமி அறியும் காலம் இனி வராது. கல்வி கடவுளுக்கும் மேலானது. அதை தடுக்கும் இவரைப் போன்றவர்களின் வாழ்வியலை அறம் துடைத்து எறியும் காலம் வந்தே தீரும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.