குரு வாழ்க ! குருவே துணை !!

Thursday, December 2, 2021

பிஜேபி அரசின் அவசர சட்டங்கள் உருவாக்கும் பின் விளைவுகள்

சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா அவர்கள், ஒரு விழாவின் போது, ”நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்படும் போது அதன் விளைவுகள் பற்றி விவாதிக்காமல் உருவாக்கப்படுகின்றன” என்றார்.

உடனே பிஜேபியினர் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையீடு அது இதுவென்று அலறினார்கள். மோடி அரசாங்கம் அவசர கதியில் மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றியது நமக்கெல்லாம் தெரியும். 

சுதந்திர இந்தியாவில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய விவசாயிகள் முதன் முறையாக ஒரு சத்யாகிரக அமைதிப் போராட்டத்தினை முன்னெடுத்து வென்றிருக்கின்றார்கள். சுமார் 700 விவசாயிகள் போராட்டக்களத்தில் செத்தனர்.

போராட்டத்தை ஒரு வருடமாக இரும்பு மன நிலையில் பிரதமர் மோடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

அந்தப் போராட்டக் களத்தில் என்னவெல்லாம் செய்தார்கள் மோடி அரசு என்று கீழே படியுங்கள்.
 • டெல்லிக்குப் போராட சென்ற விவசாயிகள் தடுக்கப்பட்டனர்.
 • சாலைகள் வெட்டப்பட்டன
 • குளிர் காலத்தில் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டன
 • தீவிரவாதிகள் என்றார்கள் பிஜேபியினர்
 • நக்சல்கள் என்றார்கள்
 • வடக்கு டிவி மீடியாக்கள் ஒவ்வொன்றும் விவசாயிகளை குதறின
 • விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தினர்
 • வெளிநாட்டின் ஆதரவில் நடப்பதாகச் சொன்னார்கள்.
 • நாட்டை அசிங்கப்படுத்துகின்றார்கள் என்றார்கள்
 • விவசாயிகளே இல்லை இவர்கள் ஏஜெண்டுகள் என்றார்கள்
 • எதிர்கட்சிகள் பணம் கொடுக்கின்றார்கள் என்றார்கள்
இதோ தமிழகத்தின் துரோக கும்பலில் ஒருவர் தன் பத்திரிக்கையில் வெளியிட்ட படம். என்ன ஒரு வன்மம் பாருங்கள்? நன்றி உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாத ஒரு நயவஞ்சகத்தின் மனதைப் பாருங்கள். இப்படி டிவி தோறும் பத்திரிக்கை தோறும், சோஷியல் மீடியாக்கள் மூலம் பல வதந்திகளைப் பரப்பினார்கள். அவதூறு பேசினார்கள்.

தமிழகத்தின் துரோகி எட்டப்பனும் அவன் கூட்டத்தாரும் மக்களிடம் மூன்று சட்டமும் நல்லது என்று விரிவாகப் பேசினார்கள் என்று பொய் சொன்னார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். விலக்கிக் கொண்ட போது ஆதரவு தெரிவிக்கின்றார்கள் இந்த நயவஞ்சகத்தின் நரிகள். 


இப்படி இன்னும் என்னென்னவோ செய்தார்கள். ஆனால் விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் ஒற்றைத் தன்மையுடன் நின்று அமைதி வழியில் போராடினார்கள். 

உலகெங்கும் வேடிக்கைப் பார்த்தது. வேறு வழி இன்றி மோடி அரசு அச்சட்டங்களை விலக்கிக் கொண்டது.

இந்த விவசாய சட்டங்களை நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றிட என்ன அவசியம் வந்தது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்று மோடி அரசு யோசிப்பது இல்லை.

ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அச்சட்டத்தினை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு வரும். அதன் பிறகு மக்களைச் சென்று சேரும். அச்சட்டமானது அடிப்படை அரசியலமைப்புச் சட்டட்திற்கு உட்பட்டதா என்று நீதிமன்றம் பார்க்கும். முடிவில் மக்கள் அச்சட்டம் தமக்கு நல்லதா என்று பார்ப்பார்கள். இல்லையென்றால் போராட்டம் செய்வார்கள். 

மக்களைவையில் மாநிலப் பிரதிநிதிகளுடனான விவாதம் இன்றி, அவசர கதியில் சட்டத்தினை உருவாக்கினால் இந்தக் கதை தான் நிகழும். 

இந்தியா பல்வேறு தட்ப வெட்ப சூழல், கலாச்சாரம் கொண்ட மா நிலங்களின் ஒன்றியம். தன் இஷ்டம் போல சட்டமியற்றும் போக்கு சுதந்திர இந்தியாவை சர்வாதிகாரத்தினை நோக்கித் தள்ளும் செயலாகத்தான் பார்க்க தோன்றும். 

சட்டங்கள் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படுதல் ஜனநாயகத்துக்கு நல்லது. இந்தியாவின் ஜன நாயகத்தைக் கேள்விக் குறியாக்கும் எந்த ஒரு நிகழ்வும் காலப்போக்கில் அழிந்து போகும் என்பதை வரலாறு சொல்லிக் கொண்டே இருக்கிறது. இந்திரா காந்தி காலத்தில் போடப்பட்ட எமர்ஜென்சி சட்டம் உள்பட எல்லாமும் நிர்மூலமாக்கப்படும் என்பதை வரலாறு சொல்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கு இப்போது விலக்கிக் கொள்ளல் வேண்டும். நீதிமன்றத்தின் நேரம் மட்டுமல்ல மக்களின் பணமும் வீணாக்கப்படுகிறது. இது ஒன்று மட்டும் அல்ல. இன்னும் சொல்லப்படாதவை அனேகம். 

இவ்வகையான சட்டங்கள் பிஜேபி அரசின் சர்வாதிகாரத்தைத்தான் காட்டுகின்றன என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சிக்கின்றார். 

அரசியலமைப்பில் அவசர கதியில் போடப்பட்டும் இவ்வகையான சட்டங்கள் அதிகார மையங்களுக்கான சம நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றன. அது காலப்போக்கில் தெளிவற்ற தன்மையையும், மோதலையும் உண்டாக்கி விடும் ஆபத்து உள்ளது. 

கீழே பிசினஸ் ஸ்டாண்ட் பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இன்னும் தெளிவாகப் புரியும். பிஜேபி அரசாங்கம் என்னவெல்லாம் செய்து இந்திய அரசிலமைப்புச் சட்டத்தினை சிதைக்கிறது, அதிகார அமைப்புக்குள் என்ன வகையான பிரச்சினைகளை உண்டாக்குகின்றன என்று இக்கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது.

இப்போக்கினை மக்களாகிய நாம் தான் சரி செய்ய வேண்டும். நன்றி : பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கை.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.