குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, May 12, 2021

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மணி மண்டப அரசியல் விவகாரம்

தளபதி முதலமைச்சர் - ஜோதிடம் பொய் - சாட்சிகளுடன் ஓர் ஆய்வு கட்டுரைக்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. தெலுங்கன் வந்தேறிக்கு தமிழகத்தில் என்ன வேலை என்று எழுதி இருந்தார் அவர்.

நாம் யாரின் வம்புக்கும் போவதில்லை. வந்த வம்பினையும் சும்மா விடுவதில்லை. இந்தப் பின்னூட்டம் போட்ட ஆள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரின் எண்ணம் சரியல்ல.

இந்து தமிழ் திசையும், விகடன் பத்திரிக்கையும் எகிப்தியபரம்பரையினர் நடத்தும் பத்திரிக்கைகள். ஆதலால் தளபதி மீது வன்மம் கொண்டு மக்களை உள்ளூர பாதிக்கும் பல வித செய்திகளை இனி வெளியிட்டுக் கொண்டே இருக்கும். இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் ஒரு நாள் வரும். 

அமெரிக்காவில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறைக்கு எதிராக பிஜேபியினர் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்தியாவைப் போல அமெரிக்காவை கபளீகரம் செய்ய முடியாது. வெளுத்து முடுக்கி விடுவார்கள் அமெரிக்கர்கள். மேற்கு வங்கத்தில் கலவரம் செய்த ஆட்கள் யாரென்று உலகிற்கே தெரியும். மேற்கு வங்கத்திலே மம்தா ஒரு எம்.ஜி.ஆர் என்றுச் சொன்னார் நண்பர். மம்தாவுக்கு உலக அளவிலே கெட்ட பெயர் வர வைக்க வேண்டுமாம். அதற்குள் லான்செட் பத்திரிக்கை கழுவிக் கழுவி ஊற்றி இருப்பது  உலகெல்லாம் தெரிந்து சிரிப்பாய் சிரிக்கிறது.

இதோ அந்தப் போராட்டச் செய்தி.

நான் பேசாது இருந்திருப்பேன். பின்னூட்டம் போட்ட ஆள் எகிப்திய ஆள் போல. டென்சன் கிளப்பி விட்டார். இனி ஆடித்தான் தீர்ப்பேன்.

என்னவென்று பார்க்கலாமா?

கன்னியாகுமரில் கலைஞர் ஏன் திருவள்ளுவர் சிலையை நிறுவினார் என்று எவருக்காவது தெரியுமா? அதன் உட்காரணம் தெரியுமா? தெரியும் என்றால் இத்துடன் படிப்பதை நிறுத்தி விடுங்கள். தெரியவில்லை என்றால் தொடருங்கள். 

சுவாமி விவேகானந்தர் துறவி. அவர் மீது கொண்ட அன்பினால் தான் என் பிள்ளைகளுக்கு அடியேன் அவரின் பெயரை இணைத்தும், அவரின் சீடர் நிவேதிதை பெயரையும் சூட்டி இருக்கிறேன். தமிழர் பண்பாட்டுக்கும், நாகரீகத்துக்கும் எதிரான கருத்து உடையவன் அல்ல. 

இங்கு உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவுக்கு பிஜேபி இப்போது தேவை என்பதில் எனக்கு எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்திய அரசில் எல்லோருக்குமான பங்களிப்பை கிடைக்க விடாமல் எகிப்தியபரம்பரையினர் நம்மை ஆள நினைப்பதும், அவர்கள் நம்மை கீழ் ஜாதியினர் என்று சொல்லிக் கொண்டிருப்பதையும் எதிர்க்கும் கருத்து கொண்டிருப்பவன். இதைத் தவிர வேறொன்றும் இல்லை.

நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கிறோம். அதை விடுத்து நாங்கள் மட்டுமே ஆள்வோம், நாங்கள் மட்டுமே உயர்வோம் என்றுச் சொன்னால் அதை தொடர நாமொன்றும் கற்காலத்தில் இல்லை. குளக்கரையில் குளித்து விட்டு எதிரே வரும் போது பாதையோரம் ஒதுங்கி நின்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. மீண்டும் அதைக் கொண்டு வரலாமென்றால் அது இனி நடக்காது. அதை தமிழகம் நடத்த விடாது.


இப்பூமி எல்லோருக்குமானது. ஒரு இனத்துக்கு மட்டும் உரித்தானது அல்ல.

சரி இனி விஷயத்துக்கு வருவோம்.

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையிலே தியானம் செய்திருக்கிறார் என்கிறது வரலாறு. நாமும் நம்பி விடலாம். வேறு வழி இல்லை. 

அதற்கும் முன்பாக அந்தப் பாறையில் சிவனை திருமணம் செய்து கொள்வதற்காக பார்வதி அம்மையார் தவம் செய்ததாக ஐதீகம். இதையும் நம்பி விடுவோம். அந்தப் பாறையில் இருக்கும் பாதம் பார்வதி அம்மையாரின் பாதம் என்ற நம்பிக்கையும் உண்டு. இதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கடவுள் மனித வடிவில் கன்னியாகுமரிக்கு வந்து சென்றார் என்பதையும் நம்பி விடுவதில் நமக்கொன்றும் பிரச்சினை இருக்காது. எனக்கும் தான்.

1963ம் வருடம் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை இந்திய அரசு கொண்டாட முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரியிலே சுவாமி தவமிருந்த பாறையிலே அவருக்கு ஒரு சிலை வைத்து விடலாமென்று ஆரம்பித்தார்கள்.

யாரோ ஒரு பாதிரியார் அப்பாறையிலே பிரார்த்தனை செய்தார் என்றுச் சொல்லி எதிர்ப்பு கத்தோலிக்க ஆட்கள் மூலம் வர அன்றைய முதல்வர் பக்தவசலம் எதுக்கு மதக்கலவரம் என்றுச் சொல்லி நினைவுச் சின்னத்தினைக் கிடப்பில் போட்டு விட்டார்.

கோல்வால்கர் அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர். அவர் ஏக்நாத் ரானடேவிடம் விவேகானந்தருக்கு குமரியிலே நினைவுச் சின்னம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற பொறுப்பினைக் கொடுத்தார்.

இனி தான் கச்சேரி ஆரம்பம்.

எப்படியெல்லாம் காரியம் சாதிக்க வேண்டுமென்பதைக் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே...!


நினைவுச் சின்னம் அமைக்க பெரிய எதிர்ப்பு யாரிடமிருந்து வருகிறது என்று பார்த்தார் ரானடே. ஒருவர் முதல்வர் பக்தவச்சலம், இன்னொருவர் அன்றைய கலாச்சாரத்துறை மத்திய அமைச்சர் ஹூமாயூன் கபீர்.

பத்திரிக்கைகள் பெரிய ஆயுதம். அவை அணுகுண்டை விட பெரிதானவை அக்காலத்தில். அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் எகிப்திய பரம்பரையினர் என்றால் மிகையில்லை.

ரானடே கல்கத்தா சென்றார். அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் வங்காளத்தின் சிங்கம் விவேகானந்தருக்கு சிலை அமைக்க அமைச்சர் தடுக்கிறார் என்ற செய்தியை பத்திரிக்கைகளிலே வெளிவரச் செய்தார். கடுமையான விமர்சனங்கள் வெளியாயின. ஏனென்றால் அமைச்சர் கல்கத்தாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹுமாயூன் கபீர் அவுட்

அடுத்த விக்கெட் முதல்வர் பக்தவச்சலம்.

லால் பக்தூர் சாஸ்திரியிடம் சென்று நேருவிடம் பேச வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கையொப்பம் பெற்றார். அன்றைய திமுக தலைவர் அண்ணாவை கமிட்டிக்குள் வரவைக்க பேசினார். அவர் வந்தாரா இல்லையா எனத் தெரியவில்லை. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி ஆட்களையும் வளைத்தார். அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நினைவுச் சின்ன விஷயத்தை, வேறு வழி இல்லாது ஒப்புக் கொள்ள வைத்தார். முதல்வர் பக்தவச்சலமும் அவுட்.  ரூட் கிளியர்.

விவேகானந்தருக்கு கன்னியாகுமரியிலே நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அவர் இந்து மதத்தின் அடையாளமாக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தில் பிறந்த விவேகானந்தருக்கு தென் தமிழகத்தில் நினைவுச் சின்னம். 

கன்னியாகுமரி அம்மன் காணாமல் போனார். விவேகானந்தர் பாறை பேசப்பட்டது. இதுதான் உள் அரசியல். இதுதான் பெரும் வேலை. விவேகானந்தருக்குச் சிலை வைப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை வைத்து இன்னொரு அடையாளத்தை எப்படி சதிராட்டத்தை பரத நாட்டியம் என்று மாற்றினார்களோ அப்படி மாற்றுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் எப்படி வேலை செய்கிறது என யோசித்துப் பாருங்கள். 

வல்லவனுக்கும் வல்லவன் இப்பூமியிலே உண்டு என்பார்கள்.

அதன் பிறகு தன் காலத்தில் கலைஞர் கன்னியாகுமரியில் செய்தது தான் ஆகப் பெரும் முத்தான செயல்.

ஏன் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களும், எச்சைகளும், ஆட்டுக்குட்டிகளும் திமுகவை எதிரி போல பாவிக்கின்றன என்று இப்போது புரிகிறதா?

உலகப் பொதுமறை எழுதிய திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியிலே ஓங்கி உயர்ந்த சிலையினை அமைத்தார் கலைஞர்.

கலைஞர் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர் தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும் செய்தது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். தமிழனாக இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தாரும் கலைஞருக்கு கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கன்னியாகுமரியில் ஓங்கி நிற்பது திருவள்ளுவர் சிலை. அது தமிழனின் அடையாளம் அல்லவா? அது தமிழின் சின்னம் அல்லவா? 

கலைஞருக்கு நிகர் வேறு ஆள் யார்? அவர் தான் ஸ்டாலின்....!

கட்டுரை எழுத உதவிய புத்தகம் பா.ராகவனின் ஆர்.எஸ்.எஸ். மதம் மதம் மதம் என்ற நூல்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஒருத்தன். அது என்னவென்றால் கோவிலில் திருடச் சென்றிருக்கிறான் அந்த ஊருக்கு வந்த வந்தேறி திருடன். அங்கிருந்த சங்கினைப் பார்த்திருக்கிறான். அது என்னவென்று தெரியாமல் எடுத்து வாயில் வைத்திருக்கிறான். சங்கு சத்தமிட, இந்த நேரம் யார் கோவிலுக்குள் இருந்து சங்கை ஊதுவது என்று ஊரார் வந்து பார்த்தால் அங்கு வந்த வந்தேறி திருடன் விழித்துக் கொண்டு நின்றிருக்கிறான். 

ஆகவே இப்போதைக்கு வணக்கம்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.