குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, August 19, 2020

இந்தி திணிப்பு காலம் காலமாய் தொடரும் அவலம்

தமிழகத்திலிருந்து எவராவது ஒருவராவது பிரதமர் ஆகி உள்ளார்களா? என்றால் இதுவரையிலும் இல்லை. இது பற்றி எவராவது சிந்தித்து இருக்கின்றார்களா? பேசி இருக்கின்றார்களா என்றால் இல்லை என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால் இங்கு வெட்டிப்பேச்சும், வீராப்பும் அதிகம்.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலம் ஆகி விட்டது. இந்திய ஒன்றியத்திற்கு இது நாள் வரையிலும் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட பிரதமர் ஆக முடியவில்லை. ஏன்? இன்னும் வட நாட்டுக்காரர்கள் தான் இந்தியாவினை ஆள வேண்டுமா? இந்தியா என்பது ஒன்றியம். தென் இந்தியா ஒன்றும் வட இந்தியர்களின் அடிமை மாநிலங்கள் இல்லை. இங்கிருந்து செல்லும் ஒவ்வொரு ரூபாய் வரிப்பணமும் வட நாட்டில் செலவழிக்கப்படுகிறது. அது பரவாயில்லை. ஆனால் பிரதி நிதித்துவம் வேண்டுமல்லவா? அது எங்கே?

இனி தமிழ் நாட்டில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுத்தல் அவசியம்.  அதற்கான முன்னெடுப்புகளை இனி வரும் புதிய கட்சிகளும், புதிய சிந்தனையாளர்களும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆங்கில மொழி தமிழர்களுக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரத்தைக் கொடுத்தது. கொடுத்து வருகின்றது. அதை ஒழிக்கப்பார்க்கின்றார்கள். இந்தி படித்தால் குப்பை தான் அள்ள வேண்டும். இல்லையென்றால் பானிபூரி விற்கலாம். பக்கோடா விற்கலாம். 

புதிய கல்விக் கொலை 2020ல் மும்மொழி திட்டம் பெரும் நாசகார திட்டம் என்பதை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. சுமார் ஐந்து மாநிலத்தில் பேசப்படும் மொழியான இந்தியை ஆட்சி மொழியாக்கத் துடிக்கின்றார்கள்.

உலகப் பொதுமொழியாம் நம் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கினால் என்ன கெட்டுப் போகும். உலகெங்கும் தமிழரும், தமிழும் இல்லாத இடம் எங்கே இருக்கிறது என்று கேட்டுப்பாருங்கள். எங்கெங்கும் தமிழ் ஒலிக்காத இடம் இவ்வுலகில் இல்லவே இல்லை.

இந்தப் போராட்டம் 1967க்கு முன்பே இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் நானெல்லாம் பிறந்திருக்கவே இல்லை. வட நாட்டு பிரதமர்கள் மட்டுமில்லாமல் மினிஸ்டர்களுக்கு இதே வேலையாக இருந்திருக்கிறது.

இனி அந்தப் பேச்சை எவரும் பேசக்கூடாது. அப்படி ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமெனில் தமிழை அறிவிக்கச் செய்ய வேண்டும். தமிழுக்கு ஈடாய் ஒரு மொழியைக் காட்ட முடியுமா?

தமிழை எந்தக் கட்சிக்காரனும், அரசியல்கட்சியும் காப்பாற்ற வர மாட்டார்கள். அம்மா என்று அழைத்து வளர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் எதிர்ப்பினை காட்ட வேண்டும். மறந்து விடாதீர்கள் நண்பர்களே ....!

இதோ 1967 ஆம் ஆண்டு காஞ்சி எனும் இதழில் வெளியான தினமணியின் தலையங்கம். படித்துப் பாருங்கள். அந்தக் காலத்திலிருந்து வட நாட்டு மந்திரி பிரதானிகள் இதே வேலையாக இருந்திருக்கிறார்கள். அது இது வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

பிராயத்தில் ”ம்மா,,,அம்மா....!” என்று எவரெல்லாம் தமிழ் பேச ஆரம்பித்தீர்களோ அவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.

தமிழ் என்பது நம் வாழ்க்கை, நம் பண்பாடு, நம் சமூகம், நம் ஒழுக்கம், நம் வாழ்வு நெறி என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

வாழ்க தமிழ்....! வெல்க தமிழ்...! 

உலங்கெங்கும் தமிழ் மொழி ஓங்கி ஒலிக்கட்டும். 
நன்றி : தினமணி மற்றும் காஞ்சி இதழ் மற்றும் இதழில் வெளியிட்ட அறிஞர் அண்ணா அவர்களுக்கு0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.