குரு வாழ்க ! குருவே துணை !!

Property Legal Consultation||Construction||Buy-Sale Property|| Phone : 9600577755 || Email :covaimthangavel@gmail.com

Click Banner to see Properties for Sale

Friday, January 6, 2012

நண்பரின் மனைவிக்குப் பதில் - வாழ்வியல் சூட்சுமம் அனைவருக்குமானது
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்


என்ன வேண்டுமானாலும் செய் ! ஆனால் உண்மையாக இருந்தால் நீ உலகத்தாரின் மனதில் காலம் கடந்தும் நிற்பாய் என்கிறார் திருவள்ளுவர். உண்மையைப் பேசு என்கிறார். கணவன் மனைவிக்கு இடையே உண்மை அற்றுப் போகும் போதுதான் மனது வெறுத்துப் பிரிய நேரிடுகிறது.

டைவோர்ஸ் ஆன நண்பரின் மனைவி எனக்கு அனுப்பி வைக்கும்படி அவருக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார். படித்தேன். நாணயத்தின் இரண்டு பக்கமும் பாருங்கள் என்ற அர்த்தம் வரும்படியும், பிரச்சினைகளுக்கு காரணம் நான் மட்டுமே இருக்கமுடியாது என்பதாகவும் எழுதி இருந்தார்.

பெரும்பான்மை சமூகத்தின் பிரதிபலிப்பாய்த்தான் மனிதன் வாழ முடியுமே ஒழிய, தனிமனித சுதந்திரம் பற்றிப் பேச எந்த ஒரு சமூகத்திலும் வாழும் மனிதனுக்கு அருகதையே இல்லை. என் சுதந்திரம் நான் குடிக்கிறேன், சிகரெட் பிடிக்கிறேன், கூத்தியாளுடன் போவேன் என்று எவர் பேசினாலும் அவர் ஒரு அப்பட்டமான “மெண்டலாக” இருக்கலாமே தவிர மனிதனாக இருக்க இயலாது. அல்லது அவர் பிறரை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்லலாம்.

தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுவோர் சமூகத்தில் வாழ என்ன தகுதி இருக்கிறது? காட்டுக்குள் சென்று விட வேண்டியதுதானே? சாப்பிட உணவு, உடுக்க உடை என்று அனைத்தும் ஏதோ ஒரு சமூகப் பிராணியான மனிதன் மூலம் வந்ததுதான். பிற சமூகத்தின் பலனை அனுபவித்துக் கொண்டு தனி மனித சுதந்திரம் பற்றிப் பேசுபவர்களை, என்னைக் கேட்டால் “கல்லால் அடித்து துரத்த வேண்டும்” என்பேன். நான் பெண்ணீயம் பேசுபவர்களுக்கு எதிரானவன் அல்ல. பெண்ணீயக் கருத்துக்கள் தற்போது பெரியாரை கடவுள் மறுப்பாளராய் காட்டுவது போல மாறி இருப்பதற்கு மட்டுமே எதிரானவன்.

சமூகக் கட்டுப்பாடுகள் மனிதனின் வாழ்க்கைக்கு பாதுகாப்பினைத் தந்திருக்கிறது. அவ்வாறான சமூகப் பாதுகாப்புகளும், கோட்பாடுகளும் மீறப்படுகையில் எண்ணற்ற கொலைகள், கொள்ளைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களில் பக்கத்து வீடுகளுக்கான தொடர்பு அற்றுப் போய் இருப்பதால் எளிதில் துயரங்கள் வந்து சேர்கின்றன. இப்போதுதான் கம்யூனிட்டி வீடுகள் கட்டப்படுகின்றன. முற்காலங்களில் ஒவ்வொரு தெருவில் இருப்போரும் அண்ணன் தம்பியாய் பழகுவார்கள். ஆனால் நகர்ப்புற வாழ்க்கை மனிதனுக்குத் தனிமையைத் தந்தது மட்டுமே பலன். அவன் உறவுகளிடமிருந்து தானாகவே பிரிக்கப்பட்டான். அதனால் அவன் அன்பின்றி, அரவணைப்பின்றி அல்லலுற்று ஹாஸ்பிட்டல்களில் சைக்காலஜி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

நண்பரின் மனைவிக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். மனிதன் சிறு குழந்தையாக இருக்கும் போது அவனுக்கு தாய், தந்தையின் பாதுகாப்பு வேண்டும். வாலிப வயதில் அவனின் தேவையை சரி செய்து கொள்ளவும், அவனின் எதிர்கால வாழ்க்கையின் அர்த்ததிற்கும் மனைவி தேவைப்படுகின்றாள். மனைவிக்கும் கணவனுக்கும் உள்ளத்தில் ஒற்றுமை ஏற்படவும், மனம் சார்ந்த பிடிப்பும் வேண்டுமென்பதற்காக உடலுறவு இருக்கிறது. தொடர்ந்து வாழும் வாழ்க்கைக்குப் பிடிப்பு ஏற்படுத்த குழந்தைகள் வருகின்றார்கள். அவனே வயதானவன் ஆனபோது, இவனால் வளர்ந்து ஆளான குழந்தைகள் அவனுக்குப் பாதுகாப்பளிக்கின்றார்கள். இதில் யாரை விட்டும் யாரும் தனியாக வாழ இயலாது. அப்படி தனியாக வாழ்கின்றவர்களைக் கேட்டுப்பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஆயிரமாயிரம் சோகக்கதைகளை. எத்தனை வயதானவன் ஆனாலும், எத்தனை பெரிய பதவியில் இருப்பவன் ஆனாலும் தந்தையோ, தாயோ இறக்கும் போது அவனறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழியும். இதுதான் வாழ்க்கையின் அர்த்தம்.


என் நன்றி கொன்றார்க்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு


என்றார் திருவள்ளுவர்.  நன்றிக்கடன் தான் வாழ்க்கைக்கு அடி நாதமே. இது தான் வாழ்வியலின் சாரம்.

என் பிரியத்திற்கும், அன்பிற்கும் உரிய அன்புச் சகோதரியே,

உங்களுக்குத் தெரியுமா சகோதரி ! கணவன் மனைவி என்றால் சீதாராமனைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் அந்த ராமனோ சீதையை சிதை ஏறி வா என்றுச் சொன்னவன். பகவான் என்கிற நிலையில் இருக்கிற கடவுளே தவறு செய்கின்ற போது, அவனால் படைக்கப்பட்ட சாதாரண மனிதன் எவரும் தவறு செய்யமாட்டார்கள் என்று நாம் எப்படி நம்புவது? மனிதன் என்பவன் எவனும் தவறே செய்யாதவன் இல்லை. எல்லோருமே ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு சூழலில் தவறு செய்பவர்கள்தான்.

சமூகத்தின் வாழும் மனிதர்களின் ஆண்களை விட பெண்களுக்குத்தான் பாதுகாப்பும், அரவணைப்பும் வேண்டும். தனிமையான பெண்களின் நிலையும், டைவோர்ஸ் ஆன பெண்களின் நிலையும் என்னவாகின்றன என்பதற்கு எண்ணற்ற உண்மைக் கதைகள் உண்டு. நான் உங்களுக்கு ஒரு நாவலைப் படிக்கும் படி குறிப்பிடுகிறேன். திரு ஜானகிராமனின் “மரப்பசு” என்ற நாவலை படித்துப் பாருங்கள். எவ்வகையிலேனும் உங்களுக்கு ஏதாவது ஒன்றினைச் சொல்லும் அந்த நாவல்.

நீங்கள் ஒரு தாய். அள்ள அள்ளக் குறையாத அன்பினை வாரி வழங்கும் வள்ளல் நீங்கள். நீங்கள் கடவுள் தன்மை கொண்டவர்கள். இரண்டு உயிர்களைப் படைத்திருக்கின்றீர்கள். எந்த ஒரு பெண்ணுக்கு வராத துன்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை நீங்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் துடைத்து எறிந்திருக்கலாம். கணவன் தீயவனாக இருப்பின் அவனைச் சரி செய்ய முயலுங்கள். அதை விடுத்து மூன்று பிஞ்சு உள்ளங்களை வாட விட்டு விடாதீர்கள். நமக்காக வாழ்வதை விட பிறருக்காய் ஒரு ஜென்மம் வாழ்ந்து பார்ப்போமே ! விட்டுக் கொடுத்து, மன்னித்து வாழ்தலில் தான் மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்கிறார்களே முன்னோர்கள். விட்டுக்கொடுத்து, மன்னித்து வாழ்ந்து பார்க்க முயலுங்களேன். மனம் வருந்தி துன்பத்தில் உழலுவதை விட, மன்னிப்பது மேலல்லவா?
- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

(உங்களின் கடித்தத்திற்கான பதிலாய் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது உங்கள் மனம் வருந்தும்படி எழுதி இருந்தால் தயவு செய்து மன்னித்து அருளுங்கள் சகோதரி)

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.