குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 7, 2011

பொறுப்பின்மையின் பிரச்சினைகள்

இன்று காலையில் வீட்டிற்கு எதிரே இருக்கும் மின்சார போஸ்ட்டில் லாரி ஒன்று இடிக்க நெருப்பு பொறிகள் பறந்து வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஃப்ரிட்ஜ், விளக்குகள் எல்லாம் டப் டப் என்றன. வெளியில் நின்றிருந்த பையன் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

18 அடி அகலமே இருக்கும் சாலையில் பெரிய லாரி ஒன்று சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகிறது. அதுவும் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார வயர்களை தெரிந்தே அறுத்துக் கொண்டு போகிறது அந்த லாரி. அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் லாரி டிரைவர் வண்டி ஓட்டுகிறார். அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் வெடிக்கிறது. வெடிச்சத்தம் கேட்டு பலரும் வந்து பார்க்கின்றனர். 

கடையின் மேனேஜர் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஒரு மணி நேரம் பவர் கட். திரும்ப லைன் மேன் வந்து சரி செய்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு லைன் விட்டு விட்டு வருகிறது. மீண்டும் மின்சாரம் கட் செய்யப்படுகிறது. மீண்டும் லைன் மேன் வந்து சரி செய்கிறார்.

தனிப்பட்ட ஒருவரால் கிட்டத்தட்ட 100 வீடுகளுக்கான கரண்ட் கட் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல்புகள் வெடிக்கின்றன. யாரிடம் கேட்பது? யாரிடம் கம்ப்ளெயிண்ட் சொல்வது? 

தமிழக மக்களிடம் ஒரு வித எதேச்சையதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற போக்கு தெரிகிறது. சமீபகாலமாக கல்லூரிகளில் நடக்கும் கொலை, அடிதடி சம்பவங்களைப் பார்க்கும் போது ஏன் இப்படியான மன நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது என்று அனைவருக்கும் புரிகிறது.சமூகத்தின் பெரும் தாக்கத்தினை உருவாக்கும் சினிமாவில் வன்முறை வரைமுறை இன்றி காட்டப்படுவதை மாணவர்கள் தங்களுக்குள் ஈர்த்துக் கொள்கின்றனர். பெரும் ஹீரோக்கள் கொஞ்சம் கூட சமூகத்தின் பால் அக்கறையின்றி அம்மாதிரியான காட்சிகளில் நடிக்கின்றனர். இப்படியான படங்கள் விதைக்கும் விதையானது மக்களின் மனதில் ஒருவித ஹீரோயிசத்தை வளர்க்கிறது. மிகப் பெரும் சமுதாயச் சீர்கேடு இது. இது ஒன்று மட்டும் காரணமல்ல. இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

சமூகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களும், சமூகவாதிகளும் இப்பிரச்சினையை களைய முற்பட வேண்டும். கொஞ்ச நாட்கள் முன்பு வேலையாக வெளியில் சென்ற போது, பனிரெண்டு வயசுப் பையன் குவார்ட்டர் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் தாண்டிச் செல்லுகையில் வயதான பெண்மணி ஒருவர் சாக்கடையின் அருகில் குவார்ட்டர் குடித்துக் கொண்டிருந்தார். தண்ணி போடுவது ஹீரோயிசத்தின் அடையாளமாய் மீடியாக்கள் உருவகப்படுத்தி வருகின்றன.

சமூகத்தின் மீதான பிரக்ஞை, எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை எதுவும் இன்றைய நவ நாகரீக கால மனிதர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமல் போவது நல்லதல்ல. மாவட்டம் தோறும் அனாதை விடுதிகளும், முதியோர் விடுதிகளும் உருவாவதன் காரணம் சமூகத்தின் மீதான அக்கறை குறைவதால் தான்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. நமக்குத் தேவையான வசதிகளைத் தர சட்டத்தின் ஆட்சியும், நிர்வாகமும் இருக்கிறது. அதையெல்லாம் மனிதர்கள் மீற நினைக்கின்றார்கள். அதன் பிரதிபலன் மிகக் கொடுமையாய் அல்லவா கிடைக்கும்? மீடியாவில் பிக் பி என்றழைத்த அமர்சிங் கடைசியில் கிட்னி பெயிலாகி பெரும் பிரச்சினையில் மாட்டி, ஜெயிலுக்குச் செல்கிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயதில், சிறைக்குச் செல்லும்படி “விதி” விளையாடுகிறது. செய்த வினை வாசல் கதவை தட்டியே தீரும் என்பதற்கு இன்றைய உதாரணத்திற்கு அமர்சிங்கைத் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்?

சமூகப் பிராணியான மனிதன் சமூகத்தின் பால் அக்கறையும், பிடிப்பும் வைத்திருக்க வேண்டும். அது அவசியம் கூட. 

* * *

Tuesday, September 6, 2011

தர்மம் வெல்லும்


மனிதர்களுக்குத் துன்பம் ஏன் வருகிறது? கடோபனிஷ விளக்கம் எழுதியிருந்த பதிவர் மிகச் சரியாக வார்த்தைகளை எழுதி இருந்தார். இன்பம், நன்மை இரண்டில் பெரும்பாலானோர் இன்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். நன்மையை விட்டு விடுகின்ற காரணத்தால் துன்பம் வருகிறது. இன்பம் என்பது மின்னல் போன்றது. தோன்றிய உடனே மறைந்து விடும். நன்மை என்பது உண்மை போன்றது. அது எப்போதுமே இன்பத்தை வாரி வழங்கக் கூடியது.

புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் நாக்கிற்கு டேஸ்ட்டியான உணவை உண்பது இன்பம் எனலாம். அதே உடலுக்கு நன்மை தரும் உணவு உண்பது நன்மை எனலாம். 

தர்மம் என்பது எங்கே இருக்கிறது என்று சில நேரம் எண்ண வைத்து விடும். ஆனால் அது என்றைக்கேனும் ஒரு நாள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இதோ ரெட்டி பிரதர்ஸ் இன்றைக்கு ஜெயிலில் கிடக்கின்றார்கள். ஜெயில் என்பது பெரிய விஷயமல்ல என்று நினைக்கலாம். ஆனால் ரெட்டி பிரதர்ஸுக்கு ஜெயில் என்பது மிகப் பெரும் உயிர் வதை. ஏன் என்று கேட்கின்றீர்களா? இதோ விளக்கம்.

BANGALORE: From 7-star luxury to Chanchalguda prison in Hyderabad. From owning helicopters, lying in his indoor swimming pool and watching movies on an expansive 70mm screen close by, former minister and MLC G Janardhana Reddy lived like a king. 

You name it and he has it. Reddy, 44, constructed a three-storied complex next to his residence in Bellary meant only for his children to frolic around. Reddy's kids never go out for security reasons, while select children of the locality and those of his associates come and play in the complex. 

He's donated a diamond-studded crown worth over Rs 40 crore to Tirupati, and has another at his residence in Bellary. As one enters his house, the diamond-studded crown revolves on a sandalwood carving, illuminated by light. 

Reddy owns an apartment, Parijat, next to Taj West End, a 5-star hotel in Bangalore where he has a permanent room. A number of luxury cars line the Reddy homes, ranging from Bentleys and Mercs to the latest SUVs and Range Rovers. Holidaying in exotic locations around the world is his favourite pastime. 

During the mining boom a couple of years ago, the Reddy brothers would heli-hop between Bellary and Bangalore even for lunch or dinner. But things have not been the same for them over the past year and they are increasingly hitting the roads with their SUVs. Reddy had three helicopters but now owns only one. 

Reddy, who once owed debtors several crores of rupees in the late 1990s, a decade later admitted that he and his wife alone have assets worth over Rs 150 crore, thanks to his mining business. He's spent over Rs 30 lakh just to illuminate the hill adjoining his house in Bellary. 

His conference room, named Kuteera, is meant for political purposes, where a visitor is welcomed with huge portraits of former PM A B Vajpayee, senior leader L K Advani, opposition leader in Lok Sabha Sushma Swaraj and former CM B S Yeddyurappa. Reddy's house is like a fortress: a visitor has to pass three checkposts with scanners and bomb detectors, and gun-toting securitymen are common in his house. 

(Thanks : TOI)

உண்மைக்கு என்றைக்குமே வலிமை உண்டு. அதை அன்னா ஹசாரே தற்போது நிரூபித்தார். காந்தியின் ”சத்திய சோதனை” புத்தகத்தை படித்த போது, அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு என்று நினைத்தேன். ஆனால் அதே சத்தியமும், உண்மையும் இன்று காங்கிரஸ் அரசை கிடுகிடுக்க வைத்தன.

நேர்மையாக தொழில் செய்பவர்கள் எவராலும் குறுகிய காலத்தில் முன்னுக்கு வருவது என்பது நடக்கக் கூடிய ஒன்று அல்ல. கிடுகிடு வளர்ச்சி என்பது சட்டத்திற்குப் புறம்பாக வந்தால் இப்படிப்பட்ட சம்பவங்களையும் “சத்தியம்” நடத்தியே தீரும்.

ஏழு நட்சத்திர வாழ்க்கை நடத்தியவர்கள் என்றாலும் செய்த பலனை அனுபவித்தே ஆக வேண்டும். 

* * *

Monday, September 5, 2011

குழந்தைகளைக் கொல்லும் உணவுகள்


( இக்குழந்தைகளைப் போல பிறக்கப்போகும் உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் நோயைப் பரிசளிக்க விரும்புவீர்களா? )


இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. நாகரீகம் என்ற பெயரில் மார்க்கெட்டுகளில் விற்றுக் கொண்டிருக்கும் உணவுகள் எந்தளவுக்கு மனிதர்களின் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை உணர முடிந்தது. அதை மூலைக்கு மூலை இருக்கும் மருத்துவமனைகளே சாட்சியம் காட்டுகின்றன. 

அந்தக் கட்டுரையில் தவறான உணவுப் பழக்கங்களால் இந்தியர்களளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் மெட்டபோலிக் சிண்ட்ரோம் என்றுச் சொல்லக்கூடிய இதய நோய்கள், வலி, சர்க்கரை வியாதி மற்றும் ஜெனடிக்ட் பிரச்சினைகளைப் பெறுவதாய் சொல்லி இருக்கின்றார்கள். 

ஒரு லட்சம் பிறந்த குழந்தைகளை ஆராய்ச்சி செய்த போது அதில் 1% குழந்தைகள் மேற்சொன்ன இன்பார்ன் மெட்டபோலிக் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

இந்திய மக்களை மீடியா மூலம் மூளைச் சலவை செய்து, இறக்குமதி செய்யப்பட்ட மேலை நாட்டு நாகரீக உணவுப் பொருட்களால், இந்தியாவின் எதிர்கால சந்ததியினர் நோயுள்ளவர்களாய் ஆக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் இந்திய மருந்துச் சந்தையில் பெரிய பெரிய மருந்துக் கம்பெனிகளை வெளி நாட்டு பகாசுரக் கம்பெனிகள் விலைக்கு வாங்குகின்றன.

நாகரீகத்தின் பெயரால் இந்திய மக்கள் தங்கள் சந்தோஷத்தை மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையும் நோயில் தள்ளிக் கொண்டிருக்கும் அவலத்தை என்னவென்றுச் சொல்வது.

பர்கர், பீட்சா, குளிர் பானங்கள், பாக்கெட் உணவுப் பொருட்கள் போன்றவையெல்லாம் இந்திய மக்களுக்கு நோயைத் தந்து கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் இந்திய மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து வருகின்றார்கள்.

பெரும்பாலும் கணிணித் துறையில் இருப்போரே மேலை நாட்டு உணவுப் பொருட்களை அதிகம் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவ்வுணவுகளால் ஜெனடிக்ட் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆரோக்கியமான உணவுகள், பெரும்பாலும் சைவை உணவுப் பொருட்களே உடலுக்கு உகந்தது. இஷ்டத்திற்குச் சாப்பிடுவது, மனதுக்குள் தோன்றும் போதெல்லாம் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவது போன்ற தீய பழக்கங்கள் எதிர்காலத்தைச் சூனியமாக்கி விடும்.

இந்திய மக்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தவிர்த்தால் ஏற்படப் போகும் விளைவுகளை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கோயமுத்தூரில் ஒரு தடவை நண்பருடன் காஃபி சாப்பிடச் சென்றிருந்த போது, கேஷியருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

”ஞாயிறுகளில் வீட்டில் யாரும் சமைப்பதே இல்லை போல சார்,  கூட்டம் அள்ளுது, எங்களால் சமாளிக்கவே முடியவில்லை” என்றார்.

சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி ஹியர் ஹோட்டலில் உட்கார இடம் கிடைக்காமல் வரிசையில் நின்று கொண்டிருப்பதை அவ்வப்போது பார்ப்பது உண்டு.

குடும்பங்களின் சந்தோஷங்கள் இப்படியான ஹோட்டல்களில் நிறைவு பெறுவது வருங்கால சந்ததியினருக்கு நல்லதல்ல என்றுமட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன எழுத? 

* * *

Thursday, September 1, 2011

பிள்ளையார்



மனைவியோ நண்பனோ இருவரிடம் கூட சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது. அவ்வேளைகளில் நமக்கு உற்ற தோழனாக வருவது “கடவுள்”. மனதுக்குள் கிடந்து அழுத்தும் சில உணர்வுகளை வாய் விட்டுப் பேசியாக வேண்டும். அவ்வாறு பேசினால்தான் மன அழுத்தம் தீரும். இல்லையென்றால் “டாஸ்மாக்கு” போக நேரிடும். முன்னோர்கள் மனிதனுக்கு இது போன்ற ஒரு துணை தேவைதான் என்பதற்காகத்தான் கடவுளை உருவாக்கினோர்களோ என்று சில சமயம் நினைக்கத் தோன்றும். பிள்ளையார் கூட எனக்கும் அது போன்ற சில சமயங்களில் உதவிக்கு வருவார்.

சனிக்கிழமை தோறும் வாரா வாரம் திருமணம் ஆன நாளில் இருந்து மனைவியை உழவர் சந்தைக்கு அழைத்துச் சென்று காய்கறிகள் வாங்கி வந்து குளிரகத்தில் வைத்துக் கொள்வோம். அப்படியான நாட்களில் சிங்கா நல்லூர் உழவர் சந்தைக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் வந்தது. மார்கழி மாதங்களில் பிள்ளையார் ஏக போகமாய் இருப்பாய். தோரணம் என்ன? பாட்டு என்ன? படையல்கள் என்ன? அபிஷேகங்கள் என்ன?  அந்தச் சூழலில் பிள்ளையாரைப் பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.

சாலையில் இருந்தபடியே அவருக்கு நடக்கும் அபிஷேகங்களை பார்ப்பது உண்டு. அப்படியான நாட்களில் அய்யர் ”பிரசாதம்” கொண்டு வந்து கொடுத்துச் செல்வார். நான்கு வாரங்கள் தொடர்ந்து பிள்ளையார் பிரசாதம் சாப்பிட்டு வந்தேன். மார்கழி முடிந்து விட்டது. அது தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பும் போது மனைவியிடம் “இன்னிக்கு பிள்ளையார் எனக்காக பிரசாதம் வைத்திருப்பார்” என்று சொல்லிக் கொண்டே தூறல் விழுந்து கொண்டிருந்த அதிகாலையில் வண்டியை முறுக்கிக் கொண்டு உழவர் சந்தை நோக்கிப் பறந்தேன்.

”கோவில் பிரசாதத்திற்கு மட்டும் ஏன் பிரமாதமான டேஸ்ட் வருகிறது என்று புரியாத மர்மமாய் இருக்கிறதே” என்று நினைத்தபடியே சென்றேன்.

பிள்ளையாரைப் பார்த்தால் அம்போவென்று இருந்தார். மனைவியோ “என்னங்க உங்க பிள்ளையார் ஏமாத்திட்டார் போலிருக்கே?” என்றார். சரியான கடுப்பு. மார்கழி மாதம் முடிந்து விழாக்கள் முடிந்து போனதை அப்போதுதான் உணர்ந்தேன்.பிள்ளையாரை ஒரு முறை முறைத்தேன். ”இப்படியா ஏமாற்றுவாய்” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே உழவர் சந்தைக்குச் சென்று காய்கள் வாங்கி திரும்பிக் கொண்டிருந்தோம்.

காமராஜர் சாலையில் இஎஸ்ஐ ஹாஸ்பிடல் தாண்டி வந்தால் சாலையோரப் பிள்ளையார் ஒருவர் வில்வ மரத்தடியில் உட்கார்ந்து அருள் பாலித்துக் கொண்டிருப்பார். அவருக்கும் எனக்குமான உறவு அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்ததில்லை. அவரை வண்டியில் செல்லும் போது பார்ப்பதோடு சரி. 

இந்தப் பிள்ளையார் கோவிலின் முன்பு ஒரே கூட்டமாய் இருந்தது. வண்டியை மெதுவாக செலுத்தினேன். யாரோ ஒருவர் என்னிடம் வந்து கொழுக்கட்டை, பொங்கல், பழம் வைத்திருந்த தட்டை நீட்டி, ”சார் இந்தாங்க பிரசாதம்” என்றுச் சொல்லி நீட்டினார்.

ஜாடை காட்ட, பின்னால் உட்கார்ந்திருந்த மனைவி கையில் வாங்கிக் கொண்டார்.

பிள்ளையாரைப் பார்த்தேன். அவர் என்னிடத்தில் ஏதோ சொல்வது போன்று தோன்றியது. 

* * *

Wednesday, August 31, 2011

பின்னூட்டம் தேவையா?


(மகள் நிவேதிதா தம்பி மகன் ஜெய குருதேவ் உடன்)

ஒருவரின் மனதுக்குள் தோன்றிய உணர்வானது, எழுத்தாய் கைகளின் வழியே பதிவாய் மாறுகிறது. பதிவர்களின் பதிவுகளை படிப்பது என்பது பலரின் நினைவுகளில் மிதப்பது போல. பலரின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் பதிவுகள் இருக்கின்றன. அதில் நல்லது எது, கெட்டது எது என்பதை பகுத்தறிவதெல்லாம் படிக்கும் வாசகனின் மன நிலையைப் பொறுத்தது.

ஒவ்வொரு பதிவர்களும் காலத்திற்கேற்ப, அவ்வப்போது உருவாகும் மன நிலைக்கேற்ப, உணர்வுகளுக்கேற்றவாறு எழுதுவார்கள். சிலர் தவமாய் எழுதுவார்கள். சிலர் உண்மையை மட்டும் எழுதுவார்கள். சிலர் நகைச்சுவையாய் எழுதுவார்கள். சில கோபமாய் எழுதுவார்கள். சிலர் ஆற்றாமையால் எழுதுவார்கள். சில குஷி மூடில் எழுதுவார்கள். இது போன்ற எண்ணற்ற வகைகளில் பதிவுகள் வெளிவரும். ஒவ்வொரு பதிவுகளையும் படித்து விட முயல்வேன். 

வாசகனுக்கு படிப்பதில் இருக்கும் இன்பம் தான் முக்கியம் என்று கருதுகிறேன். பின்னூட்டம் போடுவதில் கவனம் செலுத்தினால், பல வகைப்பட்ட பிற பதிவர்களின் பதிவுகளை இருக்கக்கூடிய காலத்துக்குள் படிக்க இயலாமல் தவறவிட நேரிடும். படிக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட ஆரம்பித்தால் காலம் ஓடிப் போய் விடும்.சில முக்கிய பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்தே ஆக வேண்டும். அது வேறு விஷயம். 

ஒரு சகோதரர் நீங்களும் பிறர் தளத்தில் பின்னூட்டம் போடுங்கள் என்று எழுதி இருந்தார். நான் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கருத்துக்கள் சொல்வதில் நான் கவனம் செலுத்துவதில்லை. 

பின்னூட்டம் என்பது ஆரோக்கியமான வகையில் இருக்க வேண்டுமென்றும், அவசியமென்றால் மட்டுமே எழுத வேண்டுமென்றும் நினைப்பவன் நான். 

ஆகவே நான் படிக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பதிவர்களுக்கு இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது “ நீங்கள் என்ன எழுதினாலும் படிக்கும் வாசகனாய் கோவை எம் தங்கவேல் என்ற ஒருவர் இருப்பார்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களின் உணர்வுகளை படித்துக் கொண்டிருப்பேன் எப்பொழுதும்.

எனக்குத் தேவையான அத்தனை தகவல்களையும் நான் பதிவர்களிடமிருந்தே பெறுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

* * *

Monday, August 29, 2011

செய்நன்றி



திருமணத்திற்கு முன்பு தனியாக வசித்து வந்த போது மோகன் என்ற பையனை என்னுடன் தங்க வைத்து, பாலிடெக்னிக்கில் படிக்க வைத்துக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து சமையல் முடித்து, குளித்து, சாப்பிட்டு விட்டு ஆஃபீஸுக்குச் செல்வேன். அவனும் என்னுடனே வந்து கல்லூரிக்குச் செல்வான். விசுவாசத்திற்கு பெயர் போனவன்.

ஜாதகத்தை நம்பலாமா இல்லையா என்பது ஒரு பக்கமிருந்தாலும் என் அனுபவத்தில் ஜாதகம் மாபெரும் புதிராய் இருக்கிறது. கல்யாணம் செய்ய பத்து நாட்கள் இருக்கும் முன்பே என் நண்பரின் உறவுக்காரரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னுடைய ஜாதகத்தை பார்த்த அந்த உறவுக்காரர் ”இன்னும் சரியாக பத்து நாட்களில் நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ உங்களுக்கு திருமணம் நடந்து விடும்” என்றார். 

”அதெப்படி என் விருப்பமே இல்லாமல் திருமணம் நடக்கும், எனக்கு ஐடியாவே இல்லையே?” என்றேன்.

“அப்படி திருமணம் நடக்கவில்லை என்றால், அன்றோடு நான் ஜாதகம் சொல்வதையே நிறுத்துவேன்” என்றுச் சவால் விட்டார்.

சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த பத்தாவது நாளில் எனக்கு திருமணம் நடந்தது. ஜாதகத்தில் அதையெல்லாம் கண்டு பிடிக்க முடியுமா என்று எனக்கு குழப்பமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.

திருமணம் முடித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தோம். என்னுடன் மோகனும், இவனின் நண்பனான டிரைவரும் மட்டும் தான் வந்தனர். மறு நாள் காலையில் வரும்படி காவல்துறையினர் கேட்டுக் கொள்ள மறு நாள் மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்றால் அங்கு மனைவியின் உறவினர்கள் நான்கைந்து காரில் வந்திருந்தனர். ஒரே கூட்டம். 

நான் பயப்படவும் இல்லை, பதட்டப்படவும் இல்லை. அமைதியாய் காருக்குள் உட்கார்ந்திருந்தேன். 

என் நெருங்கிய உறவுக்காரர் என்னிடம் வந்து, ”அந்தப் பெண் அவரின் அம்மாவுடன் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டார், வாங்க கிளம்புவோம் , இனி இங்கிருந்தால் போலீஸ் நம்மை ஜெயிலுக்குள் தள்ளி விடும்”என்றார்

“அவள் அப்படியெல்லாம் போகமாட்டாள்” என்றுச் சொல்லி வர மறுத்தேன். பேசாமல் சென்று விட்டார். அவர் கவலை அவருக்கு. எங்கே எனக்குத் திருமணம் ஆகி விட்டால், அவருக்கு கிடைக்க வேண்டிய சொத்துப் போய் விடுமே என்று பயந்தார் போலிருக்கிறது. அது உண்மையாகப் போனது வேறு கதை.

அடுத்த நொடி காருக்குள் இருந்து இரண்டடி கத்தியுடன் மோகன் இறங்கினான். 

“சார் பத்து நிமிடம் அமைதியாய் இருங்கள். அனைவரையும் கொன்று விட்டு, மேடத்தைக் கூட்டி வருகிறேன்” என்று கிளம்பினான். கூடவே டிரைவர் பெரிய இரும்புத்தடியை எடுத்துக் கொண்டு இறங்கினான். பதறி தடுத்தேன்.

அதற்குள் ஒரு ஏட்டு எங்கள் அருகில் வந்து, “அப்பெண் அவர்களுடன் வர முடியாது என்று சொல்லி விட்டார், அமைதியாய் உட்கார்ந்திருந்திருங்கள்” என்றுச் சொல்லி விட்டுச் செல்ல, அதன் பிறகு தான் இருவரும் அமைதியானார்கள்.

சிறிது நேரம் சென்ற பிறகு அவரவர்களும் கலைந்து செல்ல, காவல் நிலையத்தில் எங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டது. என் நெருங்கிய உறவினர் யாரும் வந்து வாழ்த்தவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. எனக்கு எல்லா உதவிகளையும் செய்து, ஏட்டாக இருந்து தற்போது ரிட்டயர்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி திரு செல்வம் அவர்களை தற்போது நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.

கோவிலில் மாலையை மோகனை எடுத்துக் கொடுக்க சொன்னேன். என் கண்களைப் பார்த்துச் சிரித்தான். 

”கத்தி எங்கேடா?” என்றேன்.

வெட்கத்துடன் முகம் தாழ்த்தினான்.


* * *

மேலும் ஒரு சம்பவம் மோகனைப் பற்றி: 

திருமணம் முடித்து பட்டிக்காட்டில் இருவரும் தங்கி இருந்தோம். ஒவ்வொரு நாள் போவதும் பெரிய போராட்டமாய் இருந்தது. எங்களின் கஷ்டத்தைப் பார்த்த மோகன், கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த என்  வீட்டிற்கு போய் டூவீலரில் டிவியைத் தூக்கி கொண்டு வந்து கேபிள் கனெக்‌ஷனை கொடுத்து விட்டுச் சென்றான். இன்றைக்கு நினைத்தாலும் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும். இவனும், இவனது நண்பனும் சேர்ந்து இக்காரியத்தைச் செய்தனர். கையிலேயே டிவியைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான். அப்படி வரும் போது அவனுக்கு என்ன வலி வலித்திருக்கும் என்று யோசித்தால் மனசு அப்படியே நெக்குறுகிப் போய் விடும். அவனது நினைவாய் இன்னும் அந்த டிவியை தூக்கிப் போடாமல் வைத்திருக்கிறேன்.

தலைப்புச் சரியாக இருக்கிறதா?

* * *

Wednesday, August 24, 2011

காதல் மறுப்போரைத் தூக்கில் போடுங்கள்

இந்தப் பதிவு காதல் நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்ட அன்புள்ளங்கள் ஸ்ரீதேவிக்கும், கார்த்திகேயனுக்கும் சமர்ப்பணம்.

காதலிப்பது மரணிக்கவா? 

இல்லையில்லை. மரணத்திற்கே மரணத்தை தருவதற்காக காதலர்களே ! 

காதலர்களே காதலிக்கின்றீரா கலீல் ஜிப்ரானைப் படியுங்கள். காதல் என்றால் என்னவென்று தெரியும். 

அன்புக் காதலர்களே, இதோ கலீல் ஜிப்ரானின் அலைகளின் காதலைப் பற்றிய ஒரு கவிதையை உங்களுக்கு தருகிறேன். இப்பூவுலகில் மனிதர்கள் கடல் அலையைப் போல வந்து வந்துச் செல்கிறார்கள். வருவதும் போவதும் நிற்பதே இல்லை. காதலும் அதுபோலே !

அலையின் காதல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; 
நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். 
நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; 
சட்டென பிரிகிறேன்; 
பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து 
வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, 
அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன்.
அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்;
என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் 
காதலின் விதிகளை ஓதுகிறேன். 
அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது 
நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். 
அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை 
அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். 
அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி 
பல முறை நான் நடனமாடியிருக்கிறேன்.
அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து 
அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை 
என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். 
நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை 
சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன்.
அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன்.
அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை
மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை 
எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து 
வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். 
அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். 
என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க
நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். 
ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். 
நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது.
என்றாலும் நான் காதலியாயிற்றே? 
காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

* * *

கவிதை கிடைத்த தளம் : http://tamil2000.blogspot.com/ ( நன்றி சாம்பசிவம் )

Tuesday, August 23, 2011

சோத்பீ கர்லோஸ் - சில நினைவுகள்

சரியாக நினைவில் பதியாத ஏதோ ஒரு நாளில் “தி ஈரோப்பியன் ரிச்செஸ்ட் பீபிள்” என்ற புரோகிராமை டிராவல்ஸ் அண்ட் லிவிங்கில் பார்த்துக் கொண்டிருந்தேன். கர்லோஸ் சோத்பீ இண்டர்னேஷனலின் டைரக்டர் பேசிக் கொண்டிருந்தார்.

ரியல் எஸ்டேட் பிசினஸ், ஐரோப்பாவிலேயே பெரும் கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர் என்று தலைப்பு. மொட்டைத்தலை, இடுங்கிய கண்கள், எப்போதும் குறுகுறுப்பாய் பார்க்கும் பார்வை, கீச்சுக் குரல், கசங்கிய உடைகள் என்று பார்ப்பதற்கு “கோமாளியாய்” இருந்தார்.ஆனால் அவரைச் சுற்றிலும் இருந்த ஆட்கள் “பர்ஃபெக்ட் எஃபெக்டில்” இருந்தனர்.

எதைப் பற்றியும் கவலையே படாத மனநிலை. ஜாலியாய் பிசினஸ் என்று கலக்கினார். ஒரு பிசினஸ் முடித்ததும் அவர் சொன்னது “மை எர்னிங் ஈஸ் ஃபிப்டி தவுசண்ட் டாலர்ஸ்”. அதாவது 23 லட்ச ரூபாய்.

தட்ஸ் ஆல். திரும்பத் திரும்ப அதே புரோகிராம் ரிலே ஆனது. பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு மெயிலையும் தட்டி விட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அவரிடமிருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்தேன். படித்தேன். பிரமித்தேன். அவருடனான தொடர்பு சிலகாலம் இருந்தது.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் விதை மனதில் ஊன்றிய நாள் அது. எங்கள் நிறுவனம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். மிகச் சரியான வழிகாட்டுதல்களுடன் அகலக்கால் வைக்காமல் மெதுவாக நடை போட்டுக்கொண்டிருக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ்.

வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரையில் மிகச் சிறப்பான சர்வீஸ் கொடுத்து வருகிறோம். சிலர் தகவல்களை வாங்கிக் கொண்டு கமிஷன் கொடுக்க ”மறந்து” விடுவார்கள். ஆனால் நாங்கள் உழைப்பினை நம்புகிறோம். உழைத்த காசு வீடு வந்து சேரும் என்ற நம்பிக்கை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு. இன்று கிட்டத்தட்ட 3000 ரியல் எஸ்டேட் நண்பர்களின் உதவியுடன் வெற்றிப் படியில் ஏறிக் கொண்டிருக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்.

சொத்து என்பது ஒவ்வொருவருக்குமான கனவு. அது சமூகத்தின் அடையாளம். அங்கீகாரம். அதை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு பெற்றுக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். வீடு, சொத்து என்பவை மனிதனுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தர வல்லது. முகவரி இல்லாதவர்களுக்கு முகவரி பெற ஃபார்ச்சூன் உதவுகிறது. வாடிக்கையாளர்களின் குடும்பத்தில் ஒருவராய் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மாறிவிடுகிறது. அவர்கள் எந்தச் சொத்து வாங்கினாலும் எங்களிடம் கேட்காமல் வாங்குவதில்லை. எந்தச் சொத்தினை விற்றாலும் எங்களிடம் சொல்லாமல் விற்பதில்லை. அதுதான் எங்களின் பலம்.

இன்றைக்கு பில்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உங்களுக்கு இந்தக் கான்செப்ட் வந்தது என்று கேட்டார். கர்லோஸ் நினைவிலாடினார். ஃபார்ச்சூன் பிரிக்ஸ் அதிர்ஷ்டத்தை சொத்து வடிவில் உங்கள் வீடு தேடிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

பிரச்சினையே இல்லாத சொத்தோ, வீடோ வாங்க நீங்கள் அழைக்க வேண்டியது

96005 77755

* * *

Monday, August 22, 2011

பட்டா ஒரு முக்கிய ஆவணமா?


மிகப் பெரிய கோடீஸ்வரர் அவர். எல்லையில்லா பரம்பரையான சொத்துக்கள் குவிந்து கிடந்தன. யாருக்கும் எதற்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லாதவர். யாரோ ஒரு பேராசைப்பட்ட அரசு அலுவலர் ஒருவரால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விற்பனை செய்ய இயலாமல் கிடந்தன அவர் எங்களிடம் வரும்வரை.

இந்தக் கோடீஸ்வரரின் சொத்துக்கு அருகில் அரசின் புறம்போக்கு நிலம் இருக்கிறது. சர்வேயர் வந்து நிலத்தை அளவு செய்து குறிப்பிடும் போது, கோடீஸ்வரரின் சொத்தினைப் பார்த்து ஆசைப்பட்டு, ”எனக்கு கொஞ்சம் காசு கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ”எதற்கு கொடுக்க வேண்டுமென்று ” கேட்டு முடியாதென்றுச் சொல்லி விட்டார் கோடீஸ்வரர். சர்வேயர் இவரின் நில சர்வே எண்களையும் சேர்த்து அரசுப் புறம்போக்கு நிலம் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து விட, அரசும் இவரின் நிலத்துடன் சேர்ந்து அரசு நிலம் என்று அறிவிப்பு கொடுத்து விட்டது. 

இப்பிரச்ச்சினையில் தவறு செய்தவர் சர்வேயர். மேற்படி சொத்தை விற்க முயற்சிக்கும் போது, விஷயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. கோர்ட் படியேறி தீர்ப்பினை வாங்கி விடுகிறார் கோடீஸ்வரர். பட்டா கிடைக்க அப்ளை செய்கிறார். கிடைக்கவில்லை. பட்டா இல்லாமல் யார் தான் இவ்வளவு பெரிய சொத்தினை வாங்குவார்கள்? பிரச்சினை ஆரம்பிக்கிறது.சொத்தின் விலை அடிமாட்டு ரேஞ்சுக்குப் போகிறது. 

ஒரு சொத்து இவருக்குச் சொந்தமானது என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களில்(டாக்குமெண்ட்) பட்டா என்பது மிக முக்கியமானது என்றாலும், ஒரு சொத்தினை விற்பதற்கு அது தேவையானதா என்று கேட்டால் தேவை என்றுதான் சொல்லுவார்கள். அதுதான் நியாயமும் கூட.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு பட்டா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்காது. பட்டா இல்லை என்பதற்காக குறைவான விலைக்கு கேட்பார்கள். சொத்தினை வாங்கிய பிறகு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தால் பட்டா வீடு தேடி வந்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்பிராணிகளுக்கு பட்டா இல்லையா, சொத்தே வேண்டாம் என்று தோன்றும். 

சொத்து வாங்கி விற்கும் போது பத்திரங்கள் மட்டும் மாறி இருக்கும். ஆனால் பட்டா மாறாது. அதற்காக பழைய பட்டாவை வைத்துக் கொண்டு யாரும் சொத்து எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடினால் “உள்ளே” போக வேண்டியதுதான். விவரம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் சிலர் விளையாடலாம். விவரமானவர்களிடம் விளையாட ஆரம்பித்தால் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் சொத்து விற்பனைக்கு பட்டா தேவையா இல்லையா என்பதை.

மேற்கண்ட சொத்தின் டாக்குமென்டுகளை எங்களிடம் ஒப்படைத்த பிறகு, ”முடிந்த விலைக்கு விற்றுத்தாருங்கள்,பட்டா பிரச்சினை இருக்கிறது” என்று சோகத்துடன் சொன்னார் அவர். 

அதற்கடுத்த நாட்களில் மேற்படி விஷயத்தைச் சொல்லியதும் அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பிரச்சினையை எப்படி சரி செய்வது என்றுச் சொன்னோம். எங்களுக்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டு, கம்பீரமாய்ச் சென்றார் எங்களின் வாடிக்கையாளர்.

இது போன்று உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? தயங்க வேண்டாம். அழையுங்கள் எங்களை.

மொபைல் எண் : 096005 77755 


* * *

Thursday, August 18, 2011

சொத்து சம்பந்தமான வழக்குகள் - உயில் பிரச்சினை

சமீபத்தில் எங்களிடம் வந்த கிளையண்ட்டுக்கு ஒரு பிரச்சினை. தனது தங்கை என் மீது சொத்தில் பங்கு இருப்பதாக வழக்குப் போட்டிருக்கிறார் என்றார். வழக்கு விபரங்கள் அனைத்தும் கொண்டு வரும்படி பணித்தோம்.

இவரோடு பிறந்தது மூவர். இருவர் பெண்கள். ஒருவர் ஆண். இவரின் அப்பா இறக்கும் முன்பே இவருக்கும், இவரின் சகோதரருக்கும் உயில் எழுதி வைத்திருக்கிறார். அப்போது இவரின் சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் வேறு இருப்பதையும், அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய தாய் மாமன் சீரை சகோதரர்கள் இருவரும் இணைந்து செய்ய வேண்டியது என்றும், பெண்கள் இருவருக்கும் சொத்தில் பங்கு இல்லை என்றும் உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதன் பிறகு சகோதரர்கள் இருவரும் அந்த உயிலை ரெஜிஸ்டர் செய்து, அதன்படி பாகப்பிரிவினை செய்து கொண்டனர். கிளையண்ட்டின் அண்ணன் தன் பாகத்தை பத்து வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்து விட்டார். கிளையண்ட் தற்போது விற்க முனையும் போது இளைய சகோதரி சொத்தில் பங்கு இருக்கின்றது என்று கேஸ் போட்டு விட்டார்.

கிளையண்ட்டிடம் 100% சேலஞ்ச் செய்து சொத்தினை விற்குமாறு சொன்னோம். அதன்பிறகு சந்தோஷத்துடன் சென்றார்.

அதே போல பட்டாவினால் மிகப் பெரிய சொத்து ஒன்று இதுகாறும் விற்பனை செய்ய இயலாமல் போனது. அதுமட்டுமல்ல சென்னையின் பிரதான இடம் கிட்டத்தட்ட ஒரு கிராமமே ஒருவருக்குச் சொந்தமானது. ஆனால் அந்தக் கிராமத்தின் இன்றைய நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத மதிப்பு உள்ளது. எங்கே என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.