குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com
Showing posts with label வசிய மை. Show all posts
Showing posts with label வசிய மை. Show all posts

Sunday, September 2, 2012

வசிய மருந்து வேண்டுமா?குரு வாழ்க ! குருவே துணை !!

மனித குலத்தின் பெரும்பாலானோருக்கு ரகசிய உள் ஆசை பார்ப்பதை எல்லாம் தன் வசமாக்க வேண்டும், பார்க்கும் அழகிய ரம்பைகளை எல்லாம் அனுபவிக்கனும் என்பதாகத்தான் இருக்கும். மனிதனாகப் பிறப்பெடுத்த பெரும்பாலானோருக்கு பெண்ணின் மீதும், பொன்னின் மீது ஆசை.

இந்த ஆசையை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டுமென்பதற்காக உருவானதுதான் “வசியம்”.

சிலர் தங்கள் நெற்றியில் கருப்பாய் ஒரு பொட்டு வைத்திருப்பார்கள். பார்த்திருப்பீர்கள். அதை நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் “காரிய சித்தியாகும்” என்றுச் சொல்வார்கள். அது ஒரு மை. அது காரிய வெற்றி தருமா என்பதெல்லாம் அவரவர் சம்பந்தப்பட்ட விஷயம்.

முதலில் உங்களுக்கு வசிய மை செய்வது என்ன? என்று சொல்லி விடலாம்.

கல்கத்தாவில் ஒரு மருத்துவ நண்பர் இருந்தார். அவர் வசியத்தில் கை தேர்ந்தவர். அவரிடம் சிகிச்சைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி, அவர் பார்க்கும் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி “அப்படியே தள்ளிக் கொண்டு போய் காரியத்தை முடித்து விடுவார்”. அதன் பிறகு பிரச்சினை எல்லாம் வருமா என்று யோசிப்பீர்கள். அதெல்லாம் வரவே வராது. இப்படியே ஆயிரக்கணக்கான பெண்களை ”காரியம்” செய்து வந்தார்.

”அவனுக்கு என்னப்பா,  தினம் ஒரு பெண், தினம் தினம் திருமணம்” என்றுச் சொல்லி அவரைப் பார்ப்பவர்கள் எல்லோரும் வயிற்றில் தானாகவே அமிலத்தை சுரக்கச் செய்து கொண்டிருப்பார்கள்.

இப்படியே சென்று கொண்டிருந்தன மருத்துவரின் அழகான வாழ்க்கை. எந்த ஒரு அபசரஸாக இருந்தாலும் சரி, பார்க்கும் பார்வையில் அவர்களை தன் வசப்படுத்தி “காரியத்தைக்” காதும் காதும் வைத்த போல, வாழைப்பழத்தை ஷார்ப்பான கத்தியால் நறுக்குவது போல முடித்து விடுவார்.

மருத்துவ நண்பருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு இவரின் இந்த வசிய வேலை தெரியாமல் எப்படி இத்தனை பெண்களை மடக்கி போடுகின்றான் என்று குழம்பிக் கொண்டு இருந்தார். மருத்துவ நண்பரை சாப்பிட அழைத்து மது பானத்தால் குளிப்பாட்டி ரகசியத்தைக் கேட்க போதையில் உளறி வசிய ரகசியத்தை போட்டுடைத்து விட்டார் மருத்துவர்.

நண்பரும் பின்னர் வேலையில் இறங்கி காரியங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த நண்பருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். அவரிடம் ஏதோ ஒரு சூழலில் இந்த வசிய ரகசியத்தை உளறி வைத்தார் மருத்துவரின் நண்பர்.

இந்த வசிய ரகசியத்தை தெரிந்து கொண்ட மருத்துவ நண்பரின் நண்பரான நண்பர், மருத்துவரின் மனைவியிடம் வசியத்தை உபயோகித்து காரியத்தில் கண்ணாக இருக்க அதை மருத்துவ நண்பர் பார்த்து விட்டார்.

மறு நாள் காலையில் இருந்து மருத்துவ நண்பரைக் காணவில்லை. எங்கே சென்றார்? என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை.

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு வசிய மையோ அல்லது வசிய ரகசியமோ வேண்டுமா?

குறிப்பு : வசியத்தைப் பற்றி எழுதுகிறாயே உனக்கு இது தெரியுமா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. குரு நாதரிடம் கேட்டால் சொல்லித் தருவார். ஆனால் எனக்கு அந்த மாதிரி விஷயத்தில் நம்பிக்கை இல்லையாதலால் விட்டு விட்டேன்.  ஆனால் இந்த வசிய ரகசியம் இருக்கிறதே அது படு ஷார்ப்பானதாம். காரிய சித்தியென்றால் காரிய சித்தி தானாம். ஸ்கட் ஏவுகணை மாதிரி குறி பார்த்து அடித்தால் “டமார்”.


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


கேள்வியும் விளக்கமும் :
கேள்வி : மனிதன் இறந்தால் ஆன்மா பிரிவதாக சொல்கிறோம், அந்த ஆன்மாவிற்கு அழிவு இல்லை என்றும் நம்புகிறோம். விலங்குகள் இறக்கும் போது என்ன நடக்கிறது, அவற்றின் ஆன்மா என்னவாக ஆகின்றன?

பதில் :
அன்பு நண்பரே, வாழ்க நலமுடன், வளமுடன் ! உங்களுக்கு ஒரே ஒரு பாடல் மட்டுமே பதில். படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

- திருவாசகத்தில் மாணிக்க வாசகர்

Friday, May 4, 2012

வசிய மையின் பலன் என்ன?

வசிய மை பற்றி என்றைக்கு எழுதினேனோ தெரியவில்லை, அன்றிலிருந்து இன்று வரையிலும் எனக்கு அது பற்றிய பல வித அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. என் மனைவிக்கு வசிய மருந்து வைத்து விட்டார்கள், என் மகளுக்கு, மகனுக்கு, மாமாவுக்கு, கணவனுக்கு, பிள்ளைக்கு என்று ஏகப்பட்ட விசாரணைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அனைவருக்கும் மிகவும் பொறுமையாய் விளக்கங்கள் கொடுத்து வந்திருக்கிறேன். வசிய மருந்தை உட்கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் அவர்களிடம் சொல்லி, தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் தான் மீண்டும் ஒரு பதிவு வசிய மருந்தைப் பற்றி. வசிய மருந்தினைச் சாப்பிட்டவன் படும் பாட்டினை விட, மருந்து போட்டவன் படும் பாடு இருக்கிறதே அந்தக் கொடுமையை விட மருந்தினை உட்கொண்டவன் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சமே.

எனக்குத் தெரிந்த ஒரு பெண், பணக்கார பையன் ஒருவனைத் திருமணம் செய்து கொள்வதற்காக வசிய மருந்தினை வைத்து அவன் மூளையை மழுங்கச் செய்து அவனையே திருமணம் செய்து கொண்டாள். அவளைப் பற்றிய பேச்சு வந்த போது என் மனைவியிடம் ”அவள் வாழும் போதே நரகத்தை அனுபவிக்கப் போகின்றாள்” என்றுச் சொன்னேன். அதற்கு மனைவி “ போங்கள், அப்படிச் செய்பவர்கள் தான் நல் வாழ்வு வாழ்கின்றார்கள்” என்று சொன்னாள்.

இரண்டு வருடங்கள் சென்றன. அப்பெண் கை கால்கள் சிதைந்து போனது. தினமும் அழுது கொண்டிருக்கிறாள். மகனும் அவள் அருகில் வருவதில்லை, கணவனும் அருகில் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. 

நீங்கள் அன்றுச் சொன்னது பலித்து விட்டது என்கிறாள் என் மனைவி.

தர்மம் நின்று கொல்வதில்லை. நிற்காமல் உடனுக்குடன் கொல்ல ஆரம்பித்திருக்கிறது. எவராலும் அசைக்க முடியாத ஒவ்வொரு சாம்ராஜ்ஜியமும் இன்றைக்கு ஆட்டம் கண்டுபோய் நிற்கின்றது. அழகிகளோடு கும்மாளம் அடித்த விஜய் மல்லய்யாவின் மானம் கிங்ஃபிஷரில் போனது. இது போல இன்னும் எத்தனையோ கதைகளைச் சொல்லலாம்.

சுவற்றில் அடித்த பந்து எறிந்தவரை நோக்கி வருவது தானே இயல்பு?

வராது என்று எண்ணிக் கொள்பவர்கள் முட்டாள்கள் தானே?

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்