குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, September 8, 2012

புளி

குரு வாழ்க ! குருவே துணை !!

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் “ஆறாம் திணை” தொடரில் ஒரு பகுதி இங்கே. புளியில் சமைத்த உணவின் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறார். புற்று நோய் வரக்கூடிய காரணிகளை ஆராய்ந்திருக்கிறார். படித்து மனதில் ஓரத்தில் குறிப்பிட்டு வையுங்கள். உபயோகமாய் இருக்கும்.

சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லும் விகடன் நிறுவனத்தாருக்கும், மருத்துவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் சமுதாயத் தொண்டு மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வளங்களையும் அருளட்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன் (ஆனந்த விகடன்)குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்குச் சமையல் அறையில் பெண்கள் அதிக நேரம் செலவிட்டது அந்தக் காலம். அதே குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அதே பெண்கள், அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவது இந்தக் காலம். 'ஈவது விலக்கேல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவறேல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர் உடனடிக் கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம்.

சமைத்த உணவு, சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் துவங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வொன்றாகத் தொடங்குவது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைக்க, நொதிக்காமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களைச் சேர்த்துதான் 'உடனடியாகச் சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்தைக்கு வரு கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள். அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் புட்டிகளில். இதை வாங்கிப்போய் நீங்கள் எங்கே வைப்பீர்கள்? ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வளவும் சொந்த செலவில் சூனியம்வைத்துக்கொள்ளும் விஷயங்கள்தான்.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும் போது சமைத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்வைத்துச் சாப்பி டலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டி லில்வைப்பது ஆகட்டும்; காய் கறிக் கடையில் வாங்கிய காய்கனிகளைப் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் பிரித்துவைப்பது ஆகட்டும்;  இன்னும் புத்திசாலித்தனமாக இரவே காய்களை வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு சமர்த்தாக ஃபிரிஜ்ஜில்வைத்து, காலையில் சமையல் செய்து வேகமாகக் கிளம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நீங்களே வழிவகுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம். இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டின் தருமோ என்னவோ... கண்டிப்பாக புற்றுநோயைத் தரக்கூடும்.

பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்ல முடியுமா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்லும் குழந் தைகள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாம் நம் வளர்ப்புதான். அழகான பிளாஸ்டிக் டப்பர் வேர் வாங்கி, அதில் சூடான வத்தல் குழம்பைக் கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குழம்பில் மெள்ளக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாதுதான். எப்போதுமே ஒன்றும் செய்யாமல் இருக்குமா என்ன?

புற்றுநோய்க்கான காரணிகளில் ரொம்ப முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையறாக்களும்தான்.

புற்றுநோய் மட்டுமா? சர்க்கரை நோய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநியோகத்துக்கு பி.வி.சி. குழாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று இப்போது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு.

ரொம்பப் பயமுறுத்துவதற்கோ, அதிகப்படியான கற்பனையிலோ இதை எல்லாம் எழுதவில்லை. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை வெளி யிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் மேற் சொன்ன பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது புற்றுநோயை உறுதியாகத் தோற்றுவிக்கும் என்று பொருள். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).

இந்த நேரத்தில், தேசிய உணவியல் கழகம் சொல்லும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான  தகவலைத் தருகிறேன்.

'நீர்க் காய்கறியைக் கூட்டாகவைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும் முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக் கரைசலில் வேக விடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? 'புளியில் வேக வைத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.  நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்று சொல்கிறது தேசிய உணவியல் கழகம்.

நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்... பார்த்தீர்களா?

Monday, July 23, 2012

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும்?

கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றின் முதலாளி எனது நண்பர். எப்போதாவது அவரைச் சந்திக்கும் நேரத்தில் சுவாரசியமான பல விஷயங்களைச் சொல்வார்.

கோவையில் சனி அல்லது ஞாயிறுகளில் ஹோட்டல்களில் காசு வாங்கிப் போடவும், பில் போடவும் நேரமிருக்காது என்றார். பெரும்பாலான குடும்பங்கள் ஞாயிறுகளில் ஹோட்டல்களில் தான் சாப்பிடுகின்றன என்றார். மூலைக்கு மூலை ஹோட்டல்களாகவே இருப்பதன் மர்மம் எனக்கு அப்போதுதான் பிடிபட்டது.

கோவையின் திருச்சி ரோட்டில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் கேண்டீனில் ஒரு நாள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 7000 என்று எழுதி இருந்தது. சுமாராக 10,000 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கேண்டீனுக்கு எதிரே இருக்கும் மருந்துக் கடையில் பில் போடுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும். எந்த மருத்துவரிடமும் டோக்கன் இல்லாமல் செல்ல முடியாது. ஹோட்டல்களில் கூட்டம் கூடக் கூட மருத்துவர்களுக்கு வருமானம் கொட்டிக் கொண்டிருக்கும்.

பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் இல்லாமல் குழந்தைகள் வளர்வது எதிர்கால சமூகத்திற்கு மிகப் பெரும் தீங்கினைத் தரப் போகின்றது. நேற்றைய தினத்தந்தியில் “உஷாரையா உஷாரு” பத்தியில் பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண் மாணவிகள் சிலர் வகுப்பறையில் தண்ணீருடன் வோட்கா கலந்து குடித்திருக்கின்றார்கள் என்றும், வீட்டில் அப்பா தன் நண்பர்களோடு மது அருந்துவதையும், அவ்வப்போது அம்மாவும் மது அருந்துவதையும் பார்த்துப் பார்த்து, அந்த மாணவிகள் மதுவிற்கு அடிமையாக மாறி குடித்து வந்திருக்கின்றார்கள் என்று எழுதி இருக்கிறது.

சென்னையில் இருந்து போனில் அழைத்த பதிவர் ஒருவர், பெண்கள் அழகாய், மினுமினுக்க, தக்காளியாய் பளபளக்க வொயின் குடிக்கின்றார்கள் என்றுச் சொல்லி விட்டு, முடிவாய் இப்போதைக்கெல்லாம் திருமணம் செய்து கொள்வதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது என்றார்.

குறவைமீனும், சின்னஞ்சிறிய கெழுத்தி மீனையும் வைத்து, மாங்காய் போட்டு, அம்மியில் அரைத்த மிளகாயுடன், புளிப்பும் சேர எனது அம்மா வைத்த மீன் குழம்பின் சுவையை இதுகாறும் வேறு எந்த ஹோட்டல்களிலும் நான் சாப்பிட்டதே இல்லை. அம்மாவின் அன்போடு தயார் செய்யப்பட்ட உணவின் சுவையை எந்த ஒரு ஹோட்டலும் எப்போதும் தந்து விட முடியாது. 

பசும்பால் தயிரைக் கடைந்து கொண்டிருக்கும் போது பொங்கி வரும் வெண்ணெய் திரளை வழித்து எடுத்து நடு நாக்கில் வைத்து விடும் அம்மாக்கள் அந்தக் கால அம்மாக்கள் எல்லாம் நினைவுகளோடு நினைவுகளாய் பதிந்து  போய் கிடக்கின்றார்கள். இன்றைய அம்மாக்கள் டிவி பெட்டியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு “டோர் டெலிவரி” ஹோட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காலங்களுக்கு ஏற்ற உணவு எது, காலையில் என்ன உணவு சிறந்தது, மாலையில் என்ன உணவு நல்லது, எந்தெந்தப் பொருளை எந்தெந்த உணவுடன் சேர்த்துச் சமைக்க வேண்டுமென்பதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவே முடியாது. காரணம் உடம்பின் மீதும், உணவின் மீது அக்கறை இன்றி கண்டதைத் தின்று விதி வந்த அன்றைக்குச் சாவோம் என்று பொறுப்பற்று வாழும் வாழ்க்கையை “ நாகரீகம்” என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாகரீகம் என்பதை உடையிலும், ஒப்புக்கும் பெறாத பாவணைகளிலும், உணவுகளிலும் இருக்கிறது என்று நம்புகிறார்கள் இன்றைய மாந்தர்கள்.

மெக்டொனால்டின் ஒரு வருட வருமானம் 23 பில்லியன் டாலர்கள். உலகிலேயே அதிக அளவு இறைச்சியை பதப்படுத்தி, பிராண்டட் பெயரில் விற்கும் இந்த உணவகத்தின் உணவுகள் எதுவும் உடலுக்கு நல்லதைச் செய்வதில்லை என்று பல இணையதளங்களில் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இன்றைக்கும் இந்த மெக்டொனால்டின் விற்பனை உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றதே ஒழிய குறையவில்லை.

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும் என்று இனி வரும் குழந்தைகளுக்குத் தெரியப்போவதில்லை. வளரும் சந்ததிகளுக்கு மெக்டொனால்ட், சரவணபவன்கள் தான் அம்மாக்களாகத் தெரியும். அன்பினைக் கூட நாகரீகத்தின் பெயரால் மாற்றமடைய வைத்த இன்றைய அம்மாக்களின் செயல் மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும்.

- கோவை எம் தங்கவேல்

Friday, May 25, 2012

ஹெல்த் ட்ரிங்க்ஸினால் கேன்சர் வரலாம்


உடம்பு முடியாமல் மருத்துவமனையில் இருப்போரைப் பார்க்க செல்வோர் ஒரு காலத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் இல்லாமல் செல்ல மாட்டார்கள். கண்ணாடி பாட்டிலில் தனக்கே உரித்தான நறுமணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் ஒவ்வொரு நோயாளிகளின் தலைப்பக்கமாய உட்கார்ந்திருக்கும். அந்த அளவுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் ஹார்லிக்ஸ் ஒரு காலத்தில் மக்களிடையே மிகப் பிரபலமாய் இருந்தது. 

என் மனைவியின் சிறு வயதில் தூக்கி வைத்துக் கொஞ்சிய பக்கத்து குழந்தை ஐந்தாவது வயதில் கேன்சரால் இறந்து போய் விட்டது. பால் குடி மறந்ததும் அக்குழந்தைக்கு காய்ச்சிய பசும்பாலில் பிரபலமான (ஹார்லிக்ஸ் அல்ல) ஹெல்த் ட்ரிங் ஒன்றினை கலந்து கொடுத்து வந்திருக்கின்றார்கள். குழந்தையும் நன்றாக கொழு கொழுவென வளர்ந்திருக்கிறது. எல்லோரும் குழந்தையைப் பாரு “சேட்டு வீட்டுக் குழந்தை போல” இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தது.

சாப்பாடு கொஞ்சம், ஹெல்த் ட்ரிங் அதிகமாய் கொடுத்து வளர்க்கப்பட்ட அக்குழந்தை திடீரென தன் ஐந்தாவது வயதில் நோயில் விழுந்திருக்கிறது. டெஸ்ட் செய்து பார்த்த போது கேன்ஸர் பாதிப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எனது குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யும் ஒரு பெண் டாக்டரிடம் ”குழந்தை கள் ஒல்லியாகவே இருக்கின்றார்களே அவர்களுக்கு ஏதாவது ஹெல்த் ட்ரிங்க்ஸ் கொடுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எக்காலத்திலும் குழந்தைகளுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் நிச்சயம் வேண்டவே வேண்டாம், அதற்குப் பதிலாக முட்டை, பால், இறைச்சி, மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுங்கள்” என்றுச் சொன்னார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான பதில் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உணவின் மூலமாகவே கிடைக்க வேண்டும். ஆனால் அது ஹெல்த் ட்ரிங்ஸ் வழியாக கிடைக்கிறது என்றால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் ஆகும்.

சவுத் அமெரிக்காவில் மக்களால் அருந்தப்பட்ட ஒரு ஹெல்த் ட்ரிங்கினால் கேன்ஸர் வந்திருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவ உலகை கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகள் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பதால் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ன விதமான பின் விளைவுகளை உருவாக்கும் என்று கண்டு பிடிக்க முடியாது. அதைப் பற்றிய விழிப்புணர்ச்சி பலர் இறந்த பிறகுதான் உருவாகும். 

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விளம்பர மோகத்தில் திளைப்பதால் வரக்கூடிய பின் விளைவுகளைக் கண்டு கொள்ளாமல் விளம்பரப் படுத்தப் படும் ஒவ்வொரு பொருளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடம்பு நன்றாக இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். நம் தமிழ் கலாச்சாரத்தில் உடல் நோவுக்கு என்று ஏகப்பட்ட பின் விளைவுகள் அற்ற மருந்து உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை அறிந்து கொண்டு உடலைக் காத்து உள்ளத்தை பாதுகாத்து நலமுடன் வாழ்க.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, April 16, 2012

வெயிலில் நில்லுங்கள் வியாதியை துரத்துங்கள்டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நண்பர்களுக்கு உடனடியாக தெரிவித்து விட வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவு. 

விட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து, இந்தச் சத்து கால்சியம் சம்பந்தமான பொருட்களை ஜீரணிக்கவும், அதை வெளியேற்றவும், எலும்புகளுக்கு உறுதியைத் தரவும் உதவுகின்றது. 60 பர்சண்டேஜிலிருந்து 90 பர்செண்டேஜ் இந்தியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் விட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விட்டமின் டியை பால் மற்றும் உணவு எண்ணெயில் சேர்த்தல் நலம் பயக்கும் என்பதாகும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பால், எண்ணெய் பொருட்கள் மனிதனுக்கு கொழுப்பை உருவாக்கும் என்பதாலும், விட்டமின் டி மாத்திரைகள் அவ்வளவு நல்ல பலனை தராது என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டியைப் பெறுவதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.

மனித உடலின் இருபது சதவீத பகுதியை வாரத்தில் இரண்டு முறை பதினைந்து நிமிடம் வெயிலில் காட்டினால் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைத்து விடும். சூரிய ஒளியில் நீச்சலடிப்பது, சூரிய ஒளியில் விளையாடுவது போன்றவையும் விட்டமின் டி உடலில் சேர உதவும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் " Cardio Vascular Disease, Rickets and Osteoporosis" நோய்கள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை என்கிற பதிவின் பின்னூட்டத்தில் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ சில விபரங்கள்.

பானி தண்ணீரில் புளிப்புச் சுவைக்காக சாட் மசாலாவுடன், மோனோ சோடியம் குளுடோ மேட் என்கிற கெமிக்கல்ஸ் சேர்த்து அதிகப் புளிப்புத் தன்மையை ஏற்றுகிறார்கள். அத்துடன் ரசாயனச் சாயங்களும் கலக்கப்படுகின்றனவாம். இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கும் மேல் ஊற வைத்து, அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். அதீத புளிப்புச் சுவை கொண்ட இந்த வகை பானி, அல்சரை உருவாக்கும். அல்சர் இருப்பவர்கள் தொடவே கூடாது. அதுமட்டுமல்ல இப்பானியைச் சாப்பிட்டால் உடனடி வயிற்று வலியுடன், நாள்பட பசியும் அறவே குறைந்து போய் விடும். சாலையோரங்களில் விற்கப்படும் இவ்வகை இன்ஸ்டண்ட் உணவு வகைகள் தயாரிப்பாளர்கள் சாப்பிடும் நபர்களின் ஆரோக்கியத்தை ஒரு கணம் கூட எண்ணிப் பார்ப்பதே இல்லை.

எனது ஆரம்ப காலங்களில் நான் பெரும்பாலும் சற்றே சுத்தமான இடங்களில் இருக்கும் சாலையோரக் கடைகளில் எப்போதாவது சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை மனைவி வெளியூர் சென்றிருந்த சமயம், குழந்தைகளுடன் எனக்கு நன்கு அறிமுகமான நண்பரொருவரின் சாலையோரக்கடையில் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வந்தோம். அதன் பலனாய் மூவருக்கும் வாய்ப்புண் உண்டாகி, தொண்டையில் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது.

விசாரித்துப் பார்த்தால் இட்லி மாவில் புளிப்புச் சுவைக்காக சோடியம் தண்ணீர் கலப்பதாக அறிந்தேன். ஒரு வாளியில் தண்ணீர் போன்ற ஒன்றினைக் கொண்டு வந்து அளவாக கலந்து இட்லி தோசை மாவுகள் விற்பனையாளர்கள் விற்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சில ஹோட்டல்களில் விற்கும் மீன் குழம்பில் இதே சோடியம் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டு வருகின்றனவாம்.

காசு போனாலும் பரவாயில்லை என்று உயர்தரமான ஹோட்டல்களில் தயிர்சாதம், கொஞ்சம் காய்கறிகள் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்கிறார் எனது நண்பரொருவர். இன்னொரு நண்பரோ பேசாமல் பழக்கடையை நோக்கிச் சென்று விடலாம் என்றார். ஆனால் பழங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறதா என்று கேட்டால் மருத்துவ நண்பரொருவர் சொன்ன சில விபரங்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருந்தன. அது என்ன? விரைவில்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Sunday, April 8, 2012

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதைகோவை மசக்காளிபாளையத்திலிருக்கும் ஒரு பானி பூரி ஸ்டாலில் நானும், காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவரும், இயக்குனர் ஒருவரும் ஒரு நாள் பானி பூரி சாப்பிட்டோம். 

ஒரு மணி நேரத்தில் அதிகாரியிடமிருந்து போன் வந்தது. “தங்கம் உங்களுக்கு வயிற்றில் ஏதாவது வலி தெரிகிறதா?” என்றார்.

அவரிடமிருந்து அழைப்பு வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னால் தான் வயிற்றைக் கலக்கி ”ஓட்டு” போட்டு விட்டு வந்தேன். 

“அட ஆமாம் சார்! இப்பத்தான் ஓட்டு போட்டேன்” என்றேன்.

”என்னங்க தங்கம், அதான் தேர்தல் முடிஞ்சிடுச்சே, பின்னே என்ன ஓட்டு அது இதுன்னு ரகளை செய்றீங்க” என்றார்.

“அட ஓட்டுன்னா, இரண்டுக்கு போவுறதுங்க” என்றேன்.

ஒரு நிமிடம் ஆயிற்று சிரித்து முடிக்க. பானி பூரியில் பிரச்சினை இருக்கிறது என்று முடிவு கட்டி மசக்காளிபாளையம் ரெகுலர் விசிட்டை ரேஸ்கோர்ஸுக்கு மாற்றினோம். எதைக் கட்டினாலும் கட்டலாம், வாயைக் கட்ட முடியாது அல்லவா?

இன்று குமுதம் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்து அதிர்ந்தேன். பானி தண்ணீரை புளிக்க வைக்க கலக்கப்படும் கெமிக்கல்ஸ் நோயை உண்டாக்கி விடும் என்று எழுதி இருந்தார்கள்.

ஆகவே நண்பர்களே, இனி பானி பூரி ஸ்டாலைப் பார்த்தால் உங்களின் வயிற்றை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ளுங்கள். நா உள்ளுக்குள் மடங்கி விடும்.

காசைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

பத்து மணி நேரம் பவர் கட் ஆகிறது. இரவுகளில் நான்கு மணி நேரம் கூசாமல் பவர் கட் செய்கின்றார்கள். எப்படித்தான் தூங்குவது என்றே புரியவில்லை. தமிழகம் குடிகார மயமாகி வருவது போதாது என்று மிச்சம் சொச்சம் இருப்போரையும் நோயாளியாக மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, February 29, 2012

ஜனதா சாப்பாடும் கோவை ஸ்பெஷல் சாம்பாரும்
இந்தியாவின் நான்காவது பிரதமர், காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி மூலம் வந்தவர், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் பாரதப் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் இன்று. ஆட்சியில் இருந்த போது, முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சிக்கு பிறகான  ஜன நாயக ஆட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதுமட்டுமன்றி அவர் ஆட்சிக்காலத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கும்படி மிகத் திறமையான ஆட்சியும் கொடுத்தார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு ஹோட்டல்களிலும்,  ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு போடும் படி, ஹோட்டல் தொடங்கியவர்களுக்கு கண்டிஷன் போட்டு அதைச் செயல்படுத்தியும் வந்தார். அனேகர் முகம் சுளிக்கும் யூரின் தெரபி என்ற வைத்தியத்தியமும் அவரால் பிரபல்யமானது.  99 வயது வரை வாழ்ந்த பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம். ஏனென்றால் ஊழல் கறை அற்ற உன்னதமான பிரதமர் அவர்.

இன்று இமாலய ஊழல் செய்யும் சக அமைச்சரைக்கூட என்ன செய்கின்றீர்கள் என்று கேள்வி கேட்கக்கூட முடியாத பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம். செயலற்ற பிரதமரை மட்டுமல்ல அரசு அலுவலர்களைக் கூட மக்களின் ஜன நாயகத்தால் எதுவும் செய்ய முடியாது என்கிற போது, மக்களின் இந்த ஜன நாயகத்தால் என்ன பிரயோசனம் என்பது எனக்குப் புரிவதே இல்லை.

கோவை ஸ்பெஷல் சாம்பார் என்று ஒன்று இருக்கிறது. அதுபற்றி பலருக்குத் தெரியாமலே போய் விடும் என்பதால் அதை நினைவு படுத்துவதற்காக தொடர்கிறேன்.

காயலான் கடைக்குச் சென்றீர்கள் என்றால் உடைந்து போன பல சாமான்கள் கிடக்கும். துருவேறி, உடைந்து, சிதைந்து போய் கிடக்கும் காயலான் பொருட்களை வைத்து தென்னகத்தில் ஓடும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்குச் சென்று வரும் போதெல்லாம் ஏசி கோச்சின் இருக்கைகள் பற்றி பல சிறுகதைகள் எழுத வேண்டுமென தோன்றும். ஒவ்வொன்றும் காலொடிந்து, சீட் கிழிந்து, பசை போல் ஒட்டும் தூசிகளை உப பொருளாய்க் கொண்டு இருக்கை போலத் தெரியும். இருக்கைகளுக்கிடையே அவ்வப்போது கரப்பான்கள் நம்மை வந்து வரவேற்றுச் செல்லும். கரப்பான்பூச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் உச்சஸ்தானியில் அலறும் சத்தம் ரயில் போடும் சத்தத்தை விட அதிகமானாலும் ஏனென்று கேட்க நாதியின்றி போகின்ற போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்கள்.

மேற்கு வங்க முதலமைச்சர் திரு மம்தா பானர்ஜியின் கனவுத் திட்டமான துரந்தோ ரெயில் சேவை பற்றி நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கட்டுரை வந்தது. 625 ரூபாய் கொடுத்து கோவையிலிருந்து சென்னைக்கு நிற்காமல் செல்லும் துரந்தோ ரயிலில் சாம்பாருடன் இலவசமாய் கரப்பான் பூச்சிகளையும் சேர்த்துக் கொடுப்பார்களாம். அதைத்தான் நான் கோவை ஸ்பெஷல் சாம்பார் என்று பெயர் வைத்து அழைக்கிறேன். சாம்பாரில் கத்தரிக்காய் மிதக்கும், முருங்கை மிதக்கும், உருளை மிதக்கும். ஆனால் கோவையிலிருந்து செல்லும் துரந்தோ ரெயிலில் வழங்கப்படும் சாம்பாரில் கரப்பான் மிதக்குமாம்.

கேரளாவிலிருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலும் புத்தம் புதிதாய் மின்னும். ஆனால் தமிழகத்தில் ஓடும் ஒவ்வொரு ரயிலும் காயிலான் கடையில் இருந்து வந்தது போல இருக்கும். இத்தனைக்கும் உள்துறை அமைச்சரிலிருந்து, இணையமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என்று தமிழகத்தில் இருந்து ஏகப்பட்ட அமைச்சர்கள் மத்திய அரசில் இருக்கின்றார்கள். இருந்து யாருக்கு என்ன புண்ணியம்? இது  ஜன நாயக நாடு அல்லவா?
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, January 28, 2012

சரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்

கல்கண்டில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரை உடல் நலத்திற்கு சில நல்ல கருத்துக்களை கொண்டிருப்பதால் அதை இங்கு அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். நன்றி : கல்கண்டு மற்றும் ஜே.டி.எஸ்

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

உடல் எடையைக் குறைக்க சரிவரச் சாப்பிடுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் உங்கள் இடுப்பளவும் குறையும். நீங்கள் விரும்பியதை விட இரண்டு மடங்கு வேகத்தில் உடல் பருமன் குறையவும் வாய்ப்புள்ளது. மென்று சாப்பிடுவதால் பசி எடுப்பதும் குறைவதால் உடல் பருமன் குறைவதும் உறுதி.

உதாரணமாக உணவிற்குப் பிறகு காபி, தேநீர் அருந்தினால் இரும்புச் சத்து உடலில் சேராது என்பார்கள். ஆனால் உணவிற்குப் பிறகு அருந்தும் காபி அல்லது தேநீர் வளர்சிதை மாற்றத்தை 12% கூடுதலாகத் துரிதப்படுத்துவதால் சாப்பிட்ட உணவுகள், குறிப்பாக கொழுப்புகள் தங்காமல் எரிக்கப்பட்டு ஜீரணமாகி விடுகின்றன. சாப்பிட்ட உணவில் கண்டிப்பாக புளி, மிளகாய், ஏலக்காய், இஞ்சி என ஏதாவது ஒன்று இடம் பெற்றிருக்கும். இவற்றில் உள்ள வைட்டமின் சி, தேநீரில் உள்ள (காபியில் உள்ள) இரும்புச் சத்தை அழிக்காமல் ஜீரணிக்க வைத்து விடும்.

எனவே, மதியம் பிரியாணி, பரோட்டா என்று சாப்பிட்டால் ஒரு கப் தேநீர் அல்லது காபி அருந்துங்கள்.

பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், அசைவம் என எதைச் சாப்பிட்டாலும் அவை வேகமாக எரிய நன்கு மென்று சாப்பிட்டு ஒரு கோப்பை தேநீர் அருந்துங்கள். ஆப்பிள், திராட்சை போன்றவற்றை நன்கு மென்று சாப்பிடுங்கள்.

கலோரியை வேகமாக எரிப்பதுடன் குறைவாகச் சாப்பிட வைப்பது கைக்குத்தல் அரிசி, சம்பா ரவை, கேழ்வரகு, சோளம், பருப்புவகைகள். பருப்பு வகை 50% என்ற கணக்கில் சாப்பிட்டால் குறைவாகச் சாப்பிடுவோம். இவற்றில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பும் துத்தநாக உப்பு அதிகம் சாப்பிட்ட திருப்தியைத் தரும். இதனால் கு றைந்த அளவு உடலில் சேர்ந்த உணவும் உடலில் வேகமாக எரிக்கப்படும்.

மூன்றாவதாக சக்தி தரும் உணவுகளையும் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்க்காத கறுப்பு தேநீரிலும் காபியிலும் உள்ள காஃபைன், சாப்பிட்ட உணவுகளை வேகமாக எரிக்கிறது. பால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துங்கள். ஐஸ் கிரீம் சாப்பிடாமலும் பார்த்துக் கொள்ளவும். கிரீன் டீயும் பால் சேர்க்காமல் அருந்த வேண்டும்.


கிரீன் டீயில் காஃபைன் இல்லை. ஆனால், காட்சின்ஸ் என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது தினமும் 80 கலோரிகளை வளர்சிதை மாற்றமடைய விரைவுபடுத்தி எரித்துவிடுகிறது.

கறுப்பு நிற சாக்லெட்டுகளில் காஃபைன், காட்சின்ஸும் இருப்பதால் தினமும் 18 கிராம் அளவே சாப்பிட்டு வரவும். இவ்விரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் கலோரி வேகமாக எரிக்கப்படும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது சாக்லெட்டை சாப்பிடுவது நல்லது.

சாக்லெட்டில் கொழுப்பும் கலோரியும் அதிகம். எனவே 18 கிராமைத் தாண்டக்கூடாது.

நான்காவதாக, உடலுக்கு வெப்பம் தரும் உணவுகளைச் சேர்க்க வேண்டும். சமையலில் இஞ்சி, மிளகு, பூண்டு, கடுகு, கிராம்பு, ஏலக்காய் சேரவேண்டும். இவை கொழு ப்பையும் தீவிரமாக எரித்து விடும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் போல எனத் தினமும் சாப்பிட்டால் இவை வரமிளகாய் துவையல், கறிவேப்பிலைத் துவையல், மிளகு போன்றவை 100 கலோரியை தினந்தோறும் எரிக்கும்.

இத்துடன் கொழுப்பு நீக்கப்பட்ட, பால், தயிர், இரண்டு டம்ளர் சுடுநீர், மூன்று தக்காளி, அன்னாசிப்பழம், 100கிராம் திராட்சை போன்றவையும் உணவில் இடம் பெறுவது நல்லது.

சாதம் ஒரு கரண்டி அல்லது இரண்டு கரண்டி என்று குறைத்துக் கொண்டு மற்ற உணவுகளை சற்று தாராளமாக சேருங்கள். நன்கு மென்றும் சாப்பிடுவதே மிக முக்கியமானது. இதுவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.

- கே.டி.எஸ்.

Saturday, January 7, 2012

மல்லிக்கட்டு ஐந்து ரூபாய்

தை மாதம் வந்து விட்டாலே மல்லித்தழை விலை குறைந்து விடும். மல்லித்தழைக்கு கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும். வளர்ந்து விடும். விளைச்சல் அதிகமாக வருவதால் விலை குறைந்து போய் விடும். கட்டு அஞ்சு ரூபாய்க்கு கீழே விற்றால், கொடுத்த கூலி இரு நூறு ரூபாய்க்கு கட்டுபடியாகாதே என்றார் ஒரு விவசாயி. உண்மைதான், விவசாயி உழுத கூலி கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது. முன்பு ஒரு தடவை கட்டு 25 ரூபாய்க்கு மல்லித்தழை விற்றது. இன்றைக்கு கருவேப்பிலை கிலோ 55 ரூபாய் என்றார்கள்.

மல்லித்தழை என்றவுடன் உங்களுக்கு நல்ல ஒரு சமையல் குறிப்பினை வழங்கிட வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது. மல்லித்துவையல் அல்லது சட்னி என்று இந்தக் குறிப்புக்குப் பெயர் வைத்துக் கொள்வோம்.

ஒரு கைப்பிடி அளவுக்கு சுத்தம் செய்த மல்லித்தழையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு கீற்று இளம் தேங்காய், சிறிய துண்டு இஞ்சி, கொட்டைப்பாக்கு அளவுக்கு புளி, இரண்டு பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்த் மிக்ஸியில் கொரகொரப்பாய் அரைத்துக் கொள்ளவும். மேற்கண்டவற்றை வதக்க தேவையில்லை. அரைத்த விழுதுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் அருமையான இயற்கையான “கொத்தமல்லிச் சட்னி” தயார். சூடாக இரண்டு இட்லியின் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் இச்சட்னியைச் சேர்த்துச் சாப்பிட்டால் அமிர்தம்.

கொத்தமல்லித்தழையினை உணவில் சேர்த்து கொண்டால் என்னபலன் கிடைக்கும் தெரியுமா?

இதயம், மூளை, ஈரல் நன்கு பலப்படும். ரத்தம் சுத்தமாகும். கண்கள் நன்கு பளிச்சிடும். வாய் துர் நாற்றம் நீங்கும். ஆணுறுப்பில் புண்கள் அல்லது கொப்புளங்கள் வந்தால் இதன் நீரைப் பயன்படுத்தினால் புண்கள் ஆறும். அதுமட்டுமல்ல சொர சொரப்பான தோலில் கொத்தமல்லிச்சாறை தேய்த்துக் குளித்து வந்தால் தோல் பளபளப்பாகும். நன்கு பசியெடுக்கும். மேற்கண்ட் சட்னியைச் சாப்பிடுபவர்களுக்கு இத்தனை பலன்களைத் தரும் .

அவசியம் மேற்கண்ட சட்னியைச் செய்து தரச் சொல்லி வாரம் ஒரு முறை சாப்பிட்டு விடுங்கள். மூலிகைகள் எதுவும் அலோபதி மருந்து போல உடனடி பலன் தராது. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் பலன் தரும்.

திருமணமான ஆண்கள் மனைவியை தொந்தரவு செய்யாமல் நீங்களே செய்ய முனையுங்கள்.

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * *

Friday, January 6, 2012

எச்சரிக்கை அயோடின் உப்பு ஆபத்துஎனக்குப் பிடித்த எழுத்தாளர், பேச்சாளர், பிடித்த அரசியல்வாதி திரு பழ.கருப்பையா அவர்கள். எதிலும் நேர்பார்வை, நேர்பேச்சு, பட்டென்று தெரிக்கும் வார்த்தைகள் என்று தூள் கிளப்பும் அவரிடம் எனக்குப் பிடித்தது அவரின் தார்மீக கோபம். அவரின் கோபத்தை நான் பொங்கி வழியும் எரிமலையாய்ப் பார்ப்பேன். கண்ணதாசனைப் போன்ற குட்டை உருவம், எனக்குப் பிடித்த செட்டியார்த்தனமான பேச்சு, நடை என்று உள்ளத்தினைக் கொள்ளை கொண்டவர் திரு பழ.கருப்பையா.

ஒப்புக்கும் பெறாத விஜய் டிவியின் தொடர்களில் “என் பெயர் மீனாட்சி” என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் திரு.பழ கருப்பையா நடிக்கிறார் என்றவுடன், ஒரு நாள் கூட விடாமல் அத்தொடரைக் கவனித்தேன். அவர் வரும் சீனுக்காக காத்திருப்பேன். அந்தளவுக்கு அவரின் எழுத்தின் மீதும் எனக்கொரு ஈர்ப்பு.

அவரின் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.நேற்று முதல் நாள் தினமணியில் வெளியான கட்டுரை ஒன்றினை வாசித்த போது திடுக்கிட்டேன். அயோடின் உப்பால் தெற்கு தமிழர்கள் பெறும் நோய் பற்றி விரிவாக எழுதி இருந்தார். அதை அப்படியே கீழே. நன்றி தினமணிக்கும், ஆசிரியர் திரு.பழ கருப்பையா அவர்களுக்கும்.

பெரிய பதிவாக இருக்கிறதே என்பதற்காக உடனே விண்டோவை மூடிவிடாமல் அமைதியாய்ப் படியுங்கள். உங்களின் நலத்திற்காக, ஏதாவது சிலர் தெரிந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்.

இனி, திரு பழ. கருப்பையாவின் ஆவர்த்தனம்....வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


உப்பைப் பயன்படுத்தாத மக்கள் கூட்டம் உலகில் எங்கும் இல்லை.

உப்பைப்போல், அதையும்விடக் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதும், இன்றியமையாததும் தண்ணீர்!

ஆகவே, மருந்துபோன்ற ஒன்று எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் கட்டாயம் அரசுக்கு இருக்குமானால் ஒன்று அதைத் தண்ணீர் விநியோகத்தில் கலந்து செலுத்தவேண்டும் அல்லது உப்பில் கலந்து செலுத்தவேண்டும்.

ஒவ்வொருவரும் குடிக்கின்ற தண்ணீர் முற்ற முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், எல்லா மக்களும் பயன்படுத்துகிற உப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர முடியும்!

அயோடின்போன்ற இன்றியமையாப் பொருளை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்க உப்பைக் கருவியாக்கி அதில் கலக்குமாறு சட்டம் செய்தனர் மத்திய அரசினர்.

இதைத் தென்னாட்டுக்கும் செய்தது அறிவுடைய செயல்தானா என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

சிலருக்குக் கழுத்தில் கல்போன்ற கடினத்தன்மையுடன்கூடிய கட்டியோடு கழுத்து வீங்கித் தொங்கும்; கைகள் நடுங்கும்; கண்கள் துயில மறுக்கும். அதோடு மட்டுமல்ல; கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிடும்.

யார்யாருக்கும் பசிப்பது நியாயம். ஆனால், சாப்பிடச் சாப்பிடப் பசி அடங்காது என்பது கொடுமை அல்லவா? சாப்பிடுவதையே வேலையாகக் கொண்டவனும் எடை குறைந்து 70 கிலோ, 40 கிலோவாகிக் கரைந்து தென்னை விளக்குமாற்றுக் குச்சிபோல் ஆகிவிடுவான்!

சிலருக்குக் குரல் மாறிவிடும்! சிலருக்குக் குரலே போய்விடும்! கழுத்தினுள்ளே குரல்வளையில் உள்ள நாண்கள் விரிந்து ஒன்றோடொன்று ஒட்டுவதால் பேச்சு வருகிறது. தைராய்டு முற்றிப் புற்றாக மாறிய நோயாளிகளுக்குக் காற்றுதான் வரும்!

தைராய்டு சுரப்பியில் கோளாறு உள்ளவர்கள் இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த நோய் ஆண்களைவிடவும் பெண்களுக்கு மிகுதியாய் இருக்கிறது.

தைராய்டு என்பது ஒரு நாளமில்லாச் சுரப்பி! இந்த நாளமில்லாச் சுரப்பியின் சுரப்புக் குறைபாடு ஹைப்போ தைராய்ட் என்னும் நிலை ஒரு கருவுற்ற பெண்ணுக்கு இருக்குமானால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை அதன் தாக்கம் பெற்றுப் பிறந்து வளர்கையில் மந்தத்தன்மையுடன் வளரும்! மூளை வளர்ச்சி குன்றி இருக்கும்! நினைவுத்திறன் ஏறத்தாழ இருக்காது!

எந்தத் தாயும் வயிற்றிலிருக்கும் குழந்தையின் தேவைக்கேற்பத் தன் உணவை மாற்றிக் கொள்வாள்! வயிற்றுப் பிள்ளைக்குக் கேடுவரும் என்றால் அதற்குக் காரணமான எதையும் தவிர்த்துவிடுவாள்!

அவ்வளவு பொறுப்பான தன்னலமற்ற தாயும் தான் கருவுற்றிருக்கும்போது தனக்கிருக்கும் அயோடின் குறைபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவள் காக்கத் தவறிய இடத்தில் பிள்ளையின் நலத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு மத்திய அரசு நுழைந்தது.

கருவுற்ற தாய்க்கு உள்ள அயோடின் குறைபாடு, அதனால் பிள்ளைக்குப் பாதிப்பு என்பது நடைமுறையில் மிகமிகக் குறைவானது. இதற்காக நாடு தழுவி அயோடின் உப்பைக் கட்டாயமாக்கி இருக்க வேண்டியதில்லை.

அயோடின் என்பது மிக இன்றியமையாததுதான்! இதன் குறைபாடு பத்தாயிரத்தில் ஒரு தாய்க்கு மட்டுமே இருப்பதாக சென்னை, அரசு தலைமை மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி அறுவைத் துறையின் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் கூறுகிறார்.

எந்த ஒரு தாய்க்கு இந்த அயோடின் குறைபாடு என்பதைக் கண்டறிந்து, அவளுக்கு அந்த அயோடினை ஊட்டுவதை விடுத்து, ஒவ்வொரு பத்தாயிரத்திலும் மீதமுள்ள 9999 கருவுற்ற, கருவுறாத, விலக்கு நின்றுபோன தாய்மார்களுக்கும் சேர்த்து அயோடின் கலந்த உப்பைக் கட்டாயமாக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்தது.

தாய்மார்கள் மட்டுமில்லை; தந்தைமார்கள், தனயன்மார்கள், மகன்மார்கள் என்று ஒவ்வோர் இந்தியனுக்கும், அவன் பாலகனாயினும், சிறானாயினும், இளையோனாயினும், முதியோனாயினும் யாராயினும், ஒவ்வொருவருக்கும் உப்பு என்பது சாதா உப்பில்லை; அயோடின் கலந்த உப்பே என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்தப் பணியினை மிதமிஞ்சிய உற்சாகத்தோடு செய்தவர் நம்முடைய திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐயா இராமதாஸின் மகன் மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி! அவர் அப்போது மத்திய அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார்.

முன்பெல்லாம் உப்பு என்றாலே சாதா உப்புதான்! அது பெருவெட்டாக இருக்கும்; உப்பு என்றால் அதில் உப்புக் கரிப்பு இருக்கும். அது கலப்படமற்றது.

அரிசியில் கல்லைக் கலப்பார்கள்; மிளகில் பப்பாளி விதையைக் கலப்பார்கள்; பாலில் தண்ணீரைக் கலப்பார்கள்!

அதனால் நாம் ஒரு லிட்டரில் உள்ள அரை லிட்டர் தண்ணீருக்கும் பாலின் விலையே கொடுக்கிறோம். அரசியல்வாதியின் லஞ்சத்தால் எட்டு அங்குலத் தடிமன் இருக்க வேண்டிய சாலை நான்கு அங்குலமாக மெலிவுற்று விடுவதுபோல! எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி களவு!

இவையெல்லாம் கலப்படச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டியவையே!

ஆனால், உப்பைக் கலப்படச் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தார்களே மத்திய அரசிலுள்ள அறிவாளிகள்! உப்பில் எதைக் கலப்படம் செய்யமுடியும்?

நம் தூத்துக்குடி உப்பளங்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் நிலைபெறுவதற்கே தவியாய்த் தவித்தன!

உப்பில் அயோடினைக் கலக்காவிட்டால், கலப்படச் சட்டத்தின்கீழ் தண்டனை என்றனர். கலந்தால் தண்டனை என்பதுபோய்க் கலக்காவிட்டால் தண்டனை என்னும் நிலை ஏற்பட்டது! இது காலவினோதம்தான்! இந்தச் சட்டத்துக்கு வேறு பெயர் சூட்டியிருக்கலாம்!

இப்போது முந்திய காலம்போல் அல்லாமல் சாதா உப்பாகிய பெருவெட்டு உப்பிலும் தண்டனை அச்சத்தால் அயோடின் கலக்கப்பட்டுவிடுவதால் நாடு முழுவதும் அயோடின் உப்பு மட்டுமே கிடைக்கிறது. சாதா உப்பு மருந்துக்கடையில் மாதிரிக்குக்கூடக் கிடைப்பதில்லை!

இது வடநாட்டுக்குத் தேவைதான்! மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் இந்தியாவின் மையப்பகுதியில் உள்ளோர், வடபகுதியினர் இவர்களுக்கெல்லாம் அயோடின் குறைபாடு இயற்கையாகவே இருக்கிறது. ஆகவே, இவர்களுக்கு அயோடின் கலந்த உப்புத் தேவையாக இருக்கிறது.

ஆனால், கடற்கரையோர மாநிலங்களுக்கு மண்ணிலேயே அயோடின் இருக்கிறது. கடலுணவில், குறிப்பாக மீன் போன்றவற்றில் மிகுதியாகவே அயோடின் உள்ளது. தென்னிந்தியாவில் அயோடின் குறைபாடு உள்ளதாக மெய்ப்பிக்கப்படவில்லை.

இங்கும் சிறிய அளவிலான மலைப்பகுதியினர்க்கு அது தேவையாக இருக்கலாம். மத்திய அரசினர் ஒழுங்காகச் சோதனை செய்யவே இல்லை! இவர்கள் அதீதமான இந்திய ஒருமைப்பாட்டுக் காதலர்கள். வடக்கு நோயுற்றால் தெற்கும் சேர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் என்னும் கொள்கையாளர்கள்!

தார்ப் பாலைவனத்தின் தாக்கம் பெறும் தில்லியில் டிசம்பர் மாதக் குளிர் 3 டிகிரி செல்சியஸ்; உதடு வெடிக்கும்! ஆனால், எதிலும் நிதானமான தமிழ்நாட்டில் குளிர் என்பதே 27 டிகிரிதான்! வடநாட்டுக் கம்பளியை நாம் போர்த்திக்கொண்டால் வெந்துவிட மாட்டோமா? பவானிப் பருத்திப் போர்வை நமக்குப் போதாதா?

நல்லவேளை! ஒரே மாதிரியாகத்தான் போர்த்திக் கொள்ளவேண்டும் என்று இதற்கும் மத்திய அரசினர் சட்டம் செய்யாமல் விட்டார்களே!

பழையகாலச் சாதா உப்பு நமக்குக் கிடைக்காததால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன?

நான்கு அயோடின் மூலக்கூறுகள் சேர்ந்ததுதான் ஒரு தைராக்சின். தைராக்சின் என்பது தைராய்டு சுரக்கும் இயக்குநீர். தைராக்சின் அளவோடு வெளிப்பட வேண்டும். அப்படி இருந்தால் அது நோயில்லை.

அது அளவுக்கு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் நோய்.

அது அளவில் குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்னும் நோய்.

அயோடின் கலந்த உப்பு மட்டுமே நம்முடைய சோற்றில், குழம்பில், ரசத்தில், மோரில், இட்லியில், தோசையில், நாம் உபரியாகத் தின்னும் முறுக்குவரையில் அனைத்திலும் மத்திய அரசின் சட்டத்தால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சேர்ந்துகொண்டு வருவதால், உயர் நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், இந்தக் கட்டுரையை எழுதியவர், இந்தக் கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையினர், இந்த ஆராய்ச்சியைச் செய்த சென்னை, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர், செவிலியர்கள் மற்றும் தென்னிந்திய மக்களில் 35-ல் இருந்து 50 விழுக்காட்டினருக்கு அதிகப்படியான அயோடின் உப்பால் தைரோ டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் சிறிதளவாவது இருக்கும் என்கின்றனர்.

விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அது கூடுதலாக இல்லை என்பது ஆறுதலுக்கு உரியதா? இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பைத் தென்னிந்தியர்கள் தின்றால் முழுவீச்சில் நோய் தாக்கலாம்!

நமக்கு அந்த நோயின் கூறுகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அயோடின் என்பது 70 வயது வரை வாழும் ஓர் நபருக்கு ஒரு தேக்கரண்டி அளவே தேவை. அது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர வேண்டும்!

அயோடினைத் தவிர்த்த சாதா உப்பு என்பதையே நமக்குக் கிடைக்காமல் மத்திய அரசு சட்டம் போட்டுச் செய்துவிட்டதால், அதிகப்படியான அயோடினால் தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியே சிதைவுற்று விடுகிறது.

ஆகவே, தைராய்டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் 10-லிருந்து 17 வயதுவரை உள்ள இளையோருக்கு 35 விழுக்காடு உறுதியாக இருக்கிறது. 50 விழுக்காடாக இருந்தாலும் வியப்பதற்கில்லை என்கிறார் டாக்டர் சந்திரசேகர். ரத்தத்தைப் பரிசோதித்து இதை அறியலாம் என்கிறார். இந்த நோய்க்கூறுகளால் இளைய தலைமுறையின் அறிவு மந்தப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.

மூன்று பிள்ளைகளில் ஒன்று அழிவதற்கு மத்திய அரசின் சொரணை இல்லாத தடித்த தன்மைதானே காரணம்! அந்த ஒரு பிள்ளை நம்முடைய மகனாகவோ, மகளாகவோ இருந்தால்தான் நமக்கு உறைக்குமா?

ஜுவனைல் ஆட்டோ இம்யூன் தைராடிட்டிஸ் என்பது மத்திய அரசின் கொடையால் கிடைக்கும் அயோடின் கலந்த உப்பால் சிறு குழந்தைகளுக்கு வரும் நோய்!

அளவுக்கு மிஞ்சிய அயோடின், தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியைச் சிதைத்துவிடுவதால், சிதைவுற்ற செல்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன உடனே நம் உடம்பிலுள்ள போலீஸ்காரனான இம்யூன் சிஸ்டம், ""எவனோ திருடன் வருகிறான்'' என்று தைராய்டு செல்லுக்கு எதிரான ஆன்ட்டி பாடீஸ்-ஐ உற்பத்தி செய்துவிடுகிறது

ஆன்ட்டி பாடீஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தைராய்டை அழித்துவிடும். முழுவதும் அழித்துவிட்டால் தைராய்டு இயக்குநீருக்கான மாத்திரையை நாம் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

இந்த நோயின் எளியநிலையில் மாத்திரைகள்; உச்ச நிலையில் அறுவை மருத்துவம்; இந்த நோயின் இன்னொரு நிலை 10 விழுக்காடு புற்றுநோயில் போய் முடிகிறது.

தாமாக வருகிற கொடிய நோய் என்றால் அதை "முன்வினை' என்று ஏற்றுக்கொண்டு, வைத்தியம் செய்துகொள்வதோடு, இந்தப் பிறப்பில் புதிய பாவங்களைச் செய்யாமல் இருக்கலாம்!

மத்திய அரசின் யோசனையற்ற, ஆராய்ச்சியற்ற சட்டத்தால் கொடிய நோய் வரும் என்றால், நெஞ்சு கொதிக்கவில்லையா?

விஞ்ஞானத்தில் தவறுகள் நேரும்; திருத்தி முன்னேறுவதை விஞ்ஞானம் அனுமதிக்கிறது!

பத்தாண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டங்கள் தவறாகப் போய்விடுகிறபோது அவற்றைத் திருத்திக்கொள்வதுதான் அறிவுடைமை!

உப்பு குறித்த மத்திய அரசின் கலப்படச் சட்டத்தோடு சேர்த்து முதலில் உப்புக்கென்று உள்ள தனித் துறையையும் கலையுங்கள். இதற்கு ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி வேறு!

வடஇந்தியப் பகுதிகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அயோடின் உப்பைக் கொடுங்கள்! தென்னிந்தியப் பகுதிகளில் தேவைப்படும் நோயாளிகளுக்குத் தவிர, மற்றுமுள்ள பெருவாரியான மக்களுக்கு சாதா உப்பைக் கொடுங்கள்.

சாதா உப்பை எல்லாக் கடைகளிலும் விற்கச் செய்யுங்கள்; அயோடின் உப்பை மருந்துக் கடைகளில் விற்கச் செய்யுங்கள்! சும்மா இருக்கிறவனை நோயாளி ஆக்காதீர்கள்! இருக்கிற துயரம் போதாதா?

உங்களுடைய அயோடின் உப்புச் சட்டத்தால் உற்பத்தி செய்து கொழுப்பவை பெரு முதலீட்டு போன்ற உப்பு தயாரிப்பு நிறுவனங்கள்!

அவை உண்டாக்கும் நோயால் கொழுப்பவை மருந்து நிறுவனங்கள்!

வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


பழ. கருப்பையா

* * * * *
தினமணி இணைப்பு : http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial Articles&artid=532416&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?Thursday, January 5, 2012

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.

பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.

யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்று நோய்”.  நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, January 4, 2012

சிறுநீரக கல் சரி செய்வது எப்படி?

மனிதனின் மனம் நல்ல விஷயத்தைக் கிரகிப்பதை விட தீய விஷயத்தை உடனடியாக கிரகித்துக் கொள்ளும். உண்மையைப் புரிய வைப்பதை விட தீமையை எளிதில் புரிந்து கொள்ளும்.   நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே மனதில் எளிதில் பதிந்து விடும்.

எவ்வளவோ கடவுள் இருக்கின்றன. எவ்வளவோ நீதி போதனைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? மனிதர்களிடம் இருக்கும் எல்லா தீய குணங்களும் தினம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

கடவுளின் பிரதேசம் என்றழைக்கக் கூடிய கேரளா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது பாருங்கள். இவ்வளவிற்கு இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகமிருக்கின்றார்கள் இங்கே. படித்தவர்கள் தான் அதிகம் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். அணுகுண்டைத் தயாரித்தவர் கூட பெரிய படிப்பாளிதானேன்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எய்ட்ஸுக்கு மருந்து டெஸ்ட் நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இது ஒரு நல்ல செய்தி தான் என்றாலும், இந்த எயிட்ஸ் பயத்தில் பல பெண்கள் பாதிப்படையாமல் இருந்தார்கள். இனி மருந்து வந்து விட்டால் பெண்களின் பாடு என்னாகுமோ தெரியவில்லை. அதுவும் தமிழ் நாட்டில் குடிகாரர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

ஆனால் தமிழ் மருத்துவத்தில் எயிட்ஸுக்கு மருந்திருக்கிறது என்கிறார்கள் பலர். ஏன் யாரும் அதைத் தயாரிக்க முயலவில்லை என்பது புரியவில்லை.

பின்குறிப்பு :

சிறு நீரகக் கல் வந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றிய பதிவு ஒன்றினைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

இணைப்பு மற்றும் நன்றி  : http://kathirkamamblogspotcom.blogspot.com/2010/12/10.html

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்

Monday, December 26, 2011

குழந்தைகளை தடம் மாறச் செய்யும் சினிமா( இது நாட்டுச் சுரைக்காய் )


( இது நீளச் சுரைக்காய், சப்பென்றிருக்கும்)வரதராஜபுரம் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிங்கா நல்லூர் டூ ஹோப்ஸ் காலேஜ் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராபிக்கினால் நிற்க வேண்டி இருந்தது. என்னவென்று விசாரித்தேன். அலாஃப்ட் ஹோட்டலில் “விஜய்” வந்திருக்கிறார் என்றார்கள். சாலையின் இருமருங்கிலும் கும்பல்.  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். படக்குழுவினரின் வேன்களுக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வேன்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்தன. சினிமாக்காரர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய புகுந்தோம் என்றால் எதிரிகளைத் தான் சம்பாதிக்க வேண்டும். 

உண்மையைப் பேசக்கூட பெரும் தயக்கம் இருக்கும் காலகட்டம் இது. வாய்மூடி மவுனியாய் இருப்பவன் புத்திசாலி. உண்மையைப் பேசுபவன் “பிழைக்கத் தெரியாதவன்”. 

பதிவர்கள் “ராஜபாட்டை” திரைப்படம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. ஆனால் டிவிக்களில் ”ராஜபாட்டை” திரைப்படம் ஆஹா ஓஹோ என்று ஓடுவதாய் நடிகர் விக்ரம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.விக்ரம் வந்தால் அவரைப் பார்க்க கூடும் கூட்டத்தாரை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை நடிகர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் உண்மை. “ஒஸ்தி” திரைப்படம் ஊத்திக் கொண்டது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் டிவிக்களில் “ஒஸ்தி” பிரமாதமான வசூல் என்கின்றார்கள். மீடியாவைப் பற்றி எழுதிய பதிவை இப்போது நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றும் செயலைச் செய்து வரும் மீடியாக்களின் “தீவிரவாதப் போக்கினை” நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் 15 வயதுப் பெண்ணை, அவரின் உறவினர் தூக்கில் தொங்க வைத்திருக்கிறார். இப்பெண் பலபேருடன் இணைந்து இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ஸில் ஈடுபட்டு, அதை எம் எம் எஸ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதாக இப்பெண்ணைக் கொன்றவர் பேட்டி அளித்திருக்கிறார். கோவையில் பதினைந்து வயதுப் பையன் தன் சக வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு பத்தியில் மன நல மருத்துவர்கள் மாதம் பத்திலிருந்து பதினைந்து கிளையண்டுகள் இது போன்ற கம்ப்ளைண்டுடன் வருகின்றார்கள் என்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சமூக கட்டுப்பாடுகள் மீதான வெடிகுண்டுகளை பிரபல ஹோட்டல்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹாஸ்பிட்டல்களில் கருக்கலைக்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உலகிற்கே முன்னுதாரணமான “தமிழ் கலாச்சாரம்” நாளை இப்படியான சம்பவங்களைப் பார்க்கத்தான் போகின்றது.

ஏன் இப்படி சமூகம் மாறியது? இதற்கு சுட்டு விரலை மட்டுமல்ல கையை மொத்தமாக நீட்ட வேண்டிய இடம் “ சினிமாக்காரர்கள்” மற்றும் “மீடியாக்கள்”. ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

வெள்ளி தோறும் வரதராஜபுரம் சந்தைக்கு முருங்கைக்கீரை வரும் என்பதால் நானும் மனையாளும் அங்குச் சென்றோம். ஆச்சரியமாக குண்டுச் சுரைக்காய் ஒன்றைப் பார்த்தேன். நீளமான பெரிய உருளை வடிவ சுரைக்காய் சப்பென்றிருக்கும்.

ஊரில் அம்மா அழகான சுரை விதையை ஊன்றி வைப்பார்கள். அதன் மீது பிய்ந்து போன சாணி எடுக்கும் தட்டுக்கூடையை கவிழ்த்து வைப்பார்கள். நாளடைவில் வெளிவரும் சுரைக்கொடி படர்ந்து பூ விட்டு, பிஞ்சாய் காய்த்துத் தொங்கும். காலையில் அப்பிஞ்சு சுரைக்காய் ஒன்றினைப் பறித்து பொறியல் செய்து தருவார்கள். சுடுசோற்றில் மோர் ஊற்றி அதனுடன் இச்சுரைக்காயைச் சாப்பிட “அமிர்தம்”. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகியது நாட்டுச் சுரைக்காயைப் பார்த்து. 

சந்தையில் அதைப் பார்த்ததும் அம்மாவின் சமையல் நினைவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டு முருங்கைக் கீரை ஐந்து ரூபாய் என்றார் பாட்டி.

மறு நாள், பிரான் வாங்கி வந்து சுரைக்காயுடன் சேர்த்து மனையாள் குழம்பு வைத்துக் கொடுத்தாள். நாட்டுச் சுரைக்காயுடன் பிரான் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான சுவை.


இந்தச் சுரைக்காய் பற்றி கீழே இருக்கும் முக்கியமான விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

என்ன இருக்கு?

நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.


யாருக்கு நல்லது?

எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.


என்ன பலன்கள்? 

இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.ஒரு சுவைக்காக பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டிய “ நாகரீக” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது வருத்தம் தான் ஏற்பட்டது.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Friday, December 9, 2011

தர்மத்தின் தீர்ப்புகள் - எதிர் விளைவுகள்(காளான் வைத்த பிரட் துண்டுகள்)


(பில்லூர் அணை)

சமீபத்தில் குழந்தைகள், மனைவியுடன் எனக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இந்தக் காய்ச்சலின் அறிகுறி முதலில் தொண்டையில் அழற்சி ஏற்பட்டு, அதன் பிறகு காய்ச்சல் உண்டாகிறது. காய்ச்சல் சரியான பிறகு சளி ஏற்படுகிறது. சளி கொஞ்சம் கொஞ்சமாய் சரியான பிறகு வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவழியாக சரியாகிறது. இதற்குள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது ஒருவரைச் சந்தித்தேன். அவரைப் பற்றியதுதான் இப்பதிவு.

நர்ஸ் ஒருவரிடம் இதுபற்றி விசாரித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றார். நாங்கள் பயன்படுத்துவது பில்லூர் டேம் தண்ணீர். அதை பியூர் இட்டில் வடிகட்டி, நன்கு கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறோம். இருப்பினும் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் மனது சிந்திக்க வைக்கிறது. எவராவது தண்ணீரில் ஏதாவது கலக்கின்றார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது. வேறு வழி இன்றி தற்போது மினரல் வாட்டர் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.  யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. மனிதனுக்கு மனிதனே அழிவு சக்தியாய் மாறிக்கொண்டிருக்கும் சம்பவங்களை நாம் தினம் தோறும் படித்துக் கொண்டு வருகிறோம்.

ஆனால் அன்பே கடவுள், எல்லாக்கடவுளும் அன்பை மட்டும் தான் போதிக்கிறது என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் எல்லாவற்றிலும் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனோ எதனாலும் மாறாமல் மீண்டும் மீண்டும் சக மனிதர்களை அழிக்க முயன்று கொண்டிருக்கிறான். படித்தவன் என்றால் பலபேரைக் கொல்ல முயல்கிறான். படிக்காதவன் என்றால் சில பேரைக் கொல்ல முயல்கிறான். கல்வி அறிவு மனிதனுக்குள் மிருக குணத்தை மீட்டெடுத்து தந்திருக்கிறது.

மருத்துவமனையின் சீஃப்பிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ஹாஸ்பிட்டலின் வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த போது, பெரியவர் ஒருவர் அருகில் வந்து அமர்ந்தார். சில விசாரிப்புகளைத் தொடர்ந்து அவரே பேசிக் கொண்டிருந்தார். “ தெய்வமே இல்லை தம்பி ! “ என்று ஆரம்பித்தார். நான் அவர் பேசுவதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

”மனைவிக்கு நோய், மகளுக்கு நோய், மருமகளுக்கு நோய், எனக்கு நோய்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். ”என் மனைவி எவ்வளவு நல்லவள் தெரியுமா? பசி என்று வந்தால் உடனே உணவு கொடுப்பாள், ரோட்டில் எவராவது பிச்சை எடுத்தால் அவர்களுக்கு 100 ரூபாய் கொடுப்பாள், மகளோ பிறரின் மீது கொள்ளை அன்பைப் பொழிவாள்” என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார்.

”தினம் தோறும் ஹாஸ்பிட்டல் வர வேண்டி இருக்கிறது” என்று சோகத்துடன் தன் குடும்பத்துக் கதையை வேற்றார் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் எந்த ஒரு லஜ்ஜையும் இன்றி. செவனேன்னு கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் ”நீங்கள் எங்கே வேலை பார்க்கின்றீர்கள்?” என்று கேட்டேன். ”இன்னும் ரிட்டயர்ட் ஆக இரண்டு வருடம் இருக்கிறது. ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருக்கிறேன்” என்றார்.

நல்ல மனிதராய் இருப்பார் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு,  ஹெல்த் டிபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டிருக்கும் நண்பரைத் தொடர்பு கொண்டு இவரைப் பற்றி விசாரித்தேன்.

எவருக்கும் எதுவும் தானாக வருவதில்லை, அது அவரவர் செய்யும் வினையின் விளைவு என்பதை அன்று நான் உறுதியாய்ப் புரிந்து கொண்டேன்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமுள்ள பல உணவு சம்பந்தமான கடைகள் எதுவும் ’வாடிக்கையாளர்கள் நலனைக் கருத்தில் கொள்வதே இல்லை, கெட்டுப் போன பொருட்கள், காலாவதியான பொருட்கள், உடலுக்குத் தீங்கு தரும் பொருட்கள் இவற்றை எந்த வித மன உறுத்தல் இன்றியும் விற்பனை செய்து வருகின்றன’. இதனைக் கட்டுப்படுத்தும் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மாதா மாதம் “கையூட்டு” சென்று கொண்டிருக்கிறது. மேலே என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர் கையூட்டுப் பெறுவதில் நம்பர் ஒன்னாம். நண்பர் சொன்னார் “இவரைப் போன்ற ஒருவரை இனிப் பார்ப்பது அரிது”.

அந்த நபர் ஏன் மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன். செய்த வினை நோயின் வடிவிலே வந்து கொண்டிருக்கிறது. சம்பாதிக்கும் பணமெல்லாம் மருத்துவமனைக்குச் செலவழிக்கிறார் அந்த நபர். ஆனாலும் இன்னும் அவர் திருந்தவே இல்லையாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மனைவியை இறக்கி விட்டு, வெளியில் நின்றிருந்தேன். அப்போது ஒரு பணியாள் இரண்டு பிரட் பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து, மேனேஜரிடம் காட்டிக் க் கொண்டிருந்தார். நான் அருகில் நின்றிருந்ததைக் கூடக் கவனிக்காமல், ”அந்த பூஞ்சையை எடுத்து விட்டு, விற்பனைக்கு கொண்டு போய் வை” என்றார். அந்தப் பையன் என்னைப் பார்த்தான். மேனேஜர் என்னைச் சங்கோஜத்துடன் பார்த்தார். என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம் ?

ஏதோ நம்பிக்கையுடன் நாம் வாழ வேண்டி இருக்கிறது. வேறென்ன சொல்ல முடியும். 

- கோவை எம் தங்கவேல்

Tuesday, November 15, 2011

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

கீரீம்,  எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


நேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.

  
குறிப்பு : முடிந்த வரையில் எனது பிளாக்கில் எனது அனுபவங்களையும், நண்பர்களின் அனுபவங்களையும் எழுதி வருகிறேன். படிக்கும் ந்ண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணம். பின்னூட்டத்தை நிறுத்தி விட்டேன். என்னை மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். அல்லது போனில் அழைக்கவும்.

விரைவில் ஹாஸ்பிட்டல்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள உங்களை அறிவுறுத்தும் ஒரு பதிவினை எழுத இருக்கிறேன். இது உங்களுக்கு நிச்சயம் உதவிகரமாய் இருக்கும் என நம்புகிறேன்.

இதைத் தொடர்ந்து லே அவுட்களில் சொத்துக்கள் வாங்குவது பாதுகாப்பானதா என்பதைப் பற்றியும் எழுத உள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

-அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 14, 2011

வெள்ளை மரணம் - பரோட்டா

 
 
 
 
 
நேற்றுக் காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை படித்துக் கொண்டிருந்த போது, பரோட்டா பற்றிய பத்தியை படித்தேன். ஆச்சரியமும், வெறுப்பும் ஒருசேர உண்டாகியது.

நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்  உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும் உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.

மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம். அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன. உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R) இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது. இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம் என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.
 
இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம் எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.

ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய் என்று இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த ஒரு வகை எண்ணெய் பற்றி நாளை எழுதுகிறேன். படித்தவுடன் உங்களுக்கு நிச்சயம் திகில் தான் கிளம்பும். கோவை மட்டுமல்ல தமிழகமெங்கும் கடை விரித்திருக்கும் ஒரு மெடிக்கல் செண்டரில் என் நண்பருக்கு நடைபெற்ற திகில் அனுபவத்தையும் எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் !
 
- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *


Saturday, November 12, 2011

சிவன்-எமன்-உணவு

 (ராமேஸ்வரம் ஆயிரம் கால் மண்டபம்)
 
சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது.  காவிரி புரண்டோடும் இயற்கை கொஞ்சும் அழகிய பூமியான தஞ்சாவூரில் இருக்கும் எனது நெருங்கிய நண்பரொருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பரின் அம்மா, வெகு ஆச்சாரமானவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொல்லியது கீழே.

மனிதர்களின் ஆயுள் முடிந்த பிறகு எமன் வந்து பாசக்கயிற்றை வீசி மேலே அழைத்துச் செல்வானாம். அப்போது ஒவ்வொருவரும் எமனைத் திட்டியும், வைதும், பழி போட்டும், இன்னபிறவும் செய்து கடிந்து கொள்வார்களாம். உனது காலம் முடிந்து விட்டது, வா போகலாம் என்றழைத்தாலே வசைமாரி பொழிவார்களாம். எமனுக்கோ ஒரே அவஸ்தை. நானும் ஒரு கடவுள் தானே. தர்மத்தின் தலைவன் அல்லவா நான். என்னை மட்டும் மக்கள் இப்படி வைகின்றார்களே என்ற ஆதங்கத்தில், சிவபெருமானிடம் மக்கள் ஏன் என்னை மட்டும் திட்டுகின்றார்கள், இதற்கொரு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதன்பிறகு சிறிது நேரம் யோசித்த சிவபெருமான், எமனிடம் இனிமேல் மக்கள் உன்னைத் திட்டமாட்டார்கள் என்றுச் சொல்கிறார். எப்படி என்று உங்களுக்குப் புரிகிறதா?

இன்றைய காலத்தில் ஆக்சிடெண்டில் இறந்து போய் விட்டார், ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்டார், காய்ச்சலில் போய் விட்டார், புற்று நோயில் போய் விட்டார், கிட்னிப் பிராப்ளத்தில் போய் விட்டார் என்றுச் சொல்கிறார்கள். எவரும் எமன் கொண்டு போய் விட்டான் என்றுச் சொல்ல மாட்டார்கள். இங்குதான் பகவானின் சூத்திரம் இருக்கிறது என்றார் நண்பரின் அம்மா.

எமனின் வேண்டுகோளினை ஏற்று மனிதர்களுக்கு நோயை உண்டாக்கினார் சிவபெருமான். அன்றிலிருந்து எவரும் எமனைத் திட்டுவதில்லை என்றார். நோய் ஏன் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். உணவு, காற்று இவற்றிலிருந்து தான் நோய் வருகிறது. ஆக மனிதனுக்கு நோயை அவன் உண்ணும் உணவின் மூலமாக உண்டாக வைத்தார் சிவபெருமான் என்று முடித்தார் அம்மா.

நண்பர் சாப்பிடலாம் வாங்க என்று அழைக்க, சாப்பிடச் சென்றேன்.

வடை, பாயசம், சாம்பார், ரசம், தயிர், உருளைக் கிழங்கு பொறியல், வாழைக்காய் வறுவல், மரவள்ளிக் கிழங்கு பொறியல், கீரை என்ற மெனுவைப் பார்த்தேன். அம்மாவைப் பார்த்தேன். சிவபெருமானும் எமனும் மனதுக்குள் நிழலாடினார்கள்.

- கோவை எம் தங்கவேல்.

Monday, November 7, 2011

கொழுப்பைக் குறைக்கும் மாங்காய் இஞ்சி


எனக்குப் பிடித்த ஊறுகாய் மா இஞ்சி. உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வேன். மாங்காய் இஞ்சி பற்றிய முக்கியக் குறிப்புகள் தேடிக் கொண்டிருந்த போது குமுதம் ஹெல்த்தில் இக்கட்டுரை கிடைத்தது. மாங்காய் இஞ்சியின் மகத்துவம் பற்றித் தெரியாதவர்களுக்கு உபயோகப்படுமே என்பதால் இங்கு பதிவிடுகிறேன். இப்பதிவு படிப்பவர்களுக்கு உபயோகமாய் இருக்குமென்று நம்புகிறேன். நன்றி : குமுதம் ஹெல்த்

இனி மாங்காய் இஞ்சி பற்றிய கட்டுரை

இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.

மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

பயன்பெறும் பாகம்:
இச்செடியின் மண்ணிற்குக் கீழ் உள்ள தண் டுக்கிழங்குதான் நாம் பயன் படுத்தும் மாங்காஇஞ்சி. இதை தாவரவியலில் ரைசோம்  என்று அழைக்கிறார்கள்.

பெயர் வந்த விதம்:
மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்தமாக பெயர் சூட்டியுள்ளார்கள்.

அடங்கியுள்ள சத்துப் பொருள்கள்:
நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன.

மாங்காய் வாசனையின் காரணம்:
மாங்காய் இஞ்சியிலுள்ள மாங்காய் வாசனைக்கான காரணம் இதில் உள்ள சீஸ் - ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருட்கள் ஆகும். இதில் அடங்கி உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் இதற்கு மிக லேசான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒரு வகை ஒலியோரெசின், போர்னியால், ஆர்டர்மிரோன் இவை இஞ்சியின் சுவையை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

’மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள் மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி!
மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது.

வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும்  தன்மை மாங்காய் இஞ்சிக்கு உண்டு. வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். சுருங்கச் சொன்னால் மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும். மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து  சாதத்துடன்   சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும்.

குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து  சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது.

மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.
மாங்காய் இஞ்சி ரெசிபீஸ்

1. மாங்காய் இஞ்சி சாலட் :
மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
2. துவையல் :
மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
3. மாங்காய் இஞ்சி சட்னி:
சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை.
4. மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி :
தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம்.
5. மாங்காய் இஞ்சி கறி :
மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
6. மாங்காய் இஞ்சி ஊறுகாய் :
நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
7. மாங்காய் இஞ்சி தொக்கு :
சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை.
8. மாங்காய் இஞ்சி புலவு :
பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான்.
9. மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு :
மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு.
10. மாங்காய் இஞ்சி பக்கோடா :
சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா. 

* * *

Sunday, September 25, 2011

நவீன அம்மாக்களும் பழமைவாத அம்மாக்களும்

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதைப் பற்றி உங்களிடம் சொல்லி ஆக வேண்டி இருக்கிறது.

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில் 23% சதவீதம் என்கிறது ரிப்போர்ட். 670,000 குழந்தைகள் பிறந்த ஆறு நாட்களுக்குள் இறந்து விடுகின்றனவாம்.16,47,000 ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இறந்து விடுகின்றனவாம். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைந்து விட்டாலும் ஏன் இன்னும் இப்படியான இறப்புக்கள் உண்டாகின்றன என்பதை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

நேற்று, எப்போதும் பிறரைப் பேசவிடாமல், தானே பேசிக் கொண்டிருக்கும் மதிப்புமிக்க திருகோபி நாத் அவர்களின் நீயா நானா புரோகிராம் ஒன்றினை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. இந்தக் கால அம்மாக்கள், அந்தக்கால அம்மாக்கள் என்ற புரோகிராம் அது. இந்தக்கால அம்மாக்கள் எல்லோரும் டிரஸ் கோடினால் பார்வையாளனின் பார்வையை மாற்றிக் கொண்டிருந்தார்கள். நடிகைகள் எல்லாம் தோற்றுப் போவார்கள் போங்கள். அப்படி ஒரு மாடர்ன் டிரஸ் கோட். ஒரு ஆய்வு சொல்கிறது பெண்களின் கவர்ச்சி உடையால்தான் பெரும்பாலான செக்ஸ் சம்பந்தமான குற்றங்கள் நடக்கின்றன என்று. இதை வலியுறுத்துவது போல, இன்றைய வாரமலர் இது உங்களிடம் என்ற ப்குதியில் ஒரு தாய் தனது அனுபவத்தை எழுதி இருந்தார். கீழே இருக்கும் இணைப்பில் கிடைக்கும் அந்த அனுபவத்தை படிக்கலாம்.


இந்தக்கால அம்மாக்களின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் பத்தாம் பசலித்தனமாக இருந்தது. அதற்கு ஒரு உதாரணம் ஒரு அம்மா தன் மகள் அவள் பிரண்டு சாக்லேட் கொண்டு வருகிறாள் என்பதைச் சொல்லி அழுவதால், இவரும் மகளுக்கு சாக்லேட்ஸ் கொடுத்து அனுப்புகிறாராம். இதே ஐந்து வயதுக் குழந்தை ”ஃபக்” பண்ண வேண்டும், எனக்கொரு பையனை ஏற்பாடு செய்து கொடு என்று அழுதால் இந்த அம்மா செய்து கொடுப்பாரா? என்று தெரியவில்லை. இந்தக்கால அம்மாக்கள் அதைச் செய்தாலும் செய்வார்கள் போல.

பெண் என்பவள் பூமி போல என்பார் எனது சாமியார் நண்பர். அந்தப் பூமியில் விளையும் செடிகளான பிள்ளைகள் நலமோடு, வளமோடு இருக்க வேண்டுமெனில் அப்பூமி, நல்ல பூமியாக இருக்க வேண்டும். இந்தக்கால அம்மாகள் வரண்டு போன பாலை வனமாய் இருப்பதை, அந்த புரோகிராம் எனக்கு காட்டியது.

மனிதனுக்கு ஏன் நோய் வருகிறது என்று கேட்டுப்பாருங்கள். எவருமே உணவினைக் காரணம் சொல்லவே மாட்டார்கள். பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள். பிள்ளைகள் தூங்கும் போது இடுப்பில் டயப்பர் கட்டி விடுவதை இன்றைய ஃபேஷனாக இருக்கிறது. அது பல்வேறு வகையான தொற்று நோய்களை உருவாக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

இந்தக்கால அம்மாக்கள் காசுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் பிள்ளைகளின் மீது காட்டுவதே இல்லை. என் வீட்டின் அருகில் இருக்கும் பத்தாவது படிக்கும் பெண், மாலை நேரங்களில் இன்னும் மீசை கூட முளைக்காத பையனுடன் காதல் செய்து கொண்டிருக்கிறாள். அவனும் இவளும் கிசு கிசுவென்று அங்குமிங்கும் பார்த்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். முத்தமிடுகிறார்கள். இவளின் அம்மா காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புகிறார். அப்பாவோ எதைப் பற்றியும் கண்டு கொள்வதில்லை. ஏன் இப்படியாகிறது சமூகம்? யார் இதற்கு காரணம்? என்ன பிரச்சினை?

குழந்தை பிறந்த ஆறு நாட்களுக்குள் இறக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம்? விஷ உணவினைத் தவிர, கேடு கெட்ட உணவுகளால் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? ஆனால் யாரும் அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. உணவு பற்றிய அறிவே எவரிடத்திலும் இல்லை.

என் மகனுக்கு பிள்ளைப் பேறு பணிவிடை பார்த்தது என் அம்மா. மகனுக்கு ஒன்றரை வருடம் வரையில் எந்த நோயும் வந்ததே இல்லை. என் மகளுக்கு பிள்ளைப் பேறு பார்த்தது என் மாமியார். நான்கு மாதத்திலே டாக்டரிடம் செல்ல வேண்டி இருந்தது. இது பற்றிய ஒரு பதிவை முன்பே எழுதி இருக்கிறேன்.

என் அம்மா சீரக ரசமும், முருங்கைக்காய் குழம்பும், உணவுக்கட்டுப்பாடும் கொடுத்து வந்தார். ஆனால் மாமியாரோ குழந்தை பிறந்த இரண்டாவது நாளே சிக்கன் கொண்டு வந்து கொடுத்தார்.

எனது உறவுக்கார பெண்ணின் குழந்தை இறந்தே பிறந்தது? ஏன் தெரியுமா? அவளின் உணவுப் பழக்கம். காலையில் ஒரு செம்பு சுண்டக்காய்ச்சிய பால், இரவில் அதே போல. பத்து இட்லி அதற்குச் சட்னி, இடையிடையே பழங்கள், மட்டன், மீன், இறால், நண்டு என்று அவள் சாப்பிட்டதை கணக்கில் கொள்ளவே முடியாது. உப்பு நீர், பிரஷர், சுகர் என்று அனைத்தும் வர, மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஆனால் அவள் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலையேபடவில்லை. அவளின் கணவனுக்கோ அதைப் பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லை. பிரசவமாகும் சமயத்தில் கூட சூட்டினைக் கிளப்பும் நண்டு வறுவலும், இரால் வறுவலும் சாப்பிட்டிருக்கிறாள். முடிவு குழந்தை இறந்து விட்டது.

அந்தக்கால அம்மாக்களின் கை வைத்தியப் பக்குவங்கள் இன்றைக்கு எந்தப் பெண்களிடம் கிடையவே கிடையாது. எதற்கெடுத்தாலும் “டாக்டர்” வேண்டும். குழந்தையைக் குளிப்பாட்டக் கூட நொச்சி இலை பயன்படுத்துவார்கள் அந்தக்காலத்தில். துளசிசாற்றினை வாரம் ஒரு முறை அம்மா, நான் கதறக் கதற மூக்கினைப் பிடித்துக் கொண்டு வாய்க்குள் ஊற்றுவார்கள். அப்பக்கோவைத் தழையின் சாறு, கற்றாழைச்சாறு என்று என் அம்மா, எனக்கு கொடுத்த தாவர உணவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. சாப்பிடுவது குறைவது போலத் தோன்றினால் “பிரண்டைத் துவையல்” வந்து விடும். நன்கு காய்ச்சியக்கூழில் பழைய சாதம், தயிர் கலந்து நன்கு கரைத்து தம்ளரில் ஊற்றித் தருவார்கள். தொட்டுக்கொள்ள கருவாட்டுக் குழம்பின் கத்தரியை தருவார்கள். மூன்று தம்ளரை முக்கி முக்கியாவது குடிக்க வேண்டும். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் கருவாட்டுக் குழம்பின் கத்தரிக்காய் நான்கு தம்ளர் வரை கொண்டு வந்து விடும்.

விதை நெல் முளை கட்டியதைக் கொண்டு வந்து அடுப்பில் வைத்து சூடாக்கி, அதை உரலில் போட்டு இடித்து அவலாக்கி, புடைத்து அத்துடன் தேங்காய் சேர்த்து தருவார்கள். உடம்பிற்கு ஏதாவது கெடுதி வருமா? சொல்லுங்கள் பார்ப்போம்?

எனக்கு கல்யாணமாகி குழந்தைப் பிறந்தவுடன் கூட, நான் குறைவாகச் சாப்பிடுகிறேன் என்று எங்கெங்கோ தேடி அலைந்து பிரண்டையை கொண்டு வந்து துவையல் செய்து கொடுத்தார்கள். ஒவ்வொரு நோய்க்கும் காய்கறிகள், இலைகள் இருக்கின்றன. சில பக்குவங்கள் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் எந்த வித அறிவும் இன்றி இன்றைய கால அம்மாக்கள் இருப்பதால், தான் அறியாமலே தன் குழந்தைகளைக் கொல்லும் எமனாக மாறி வருகின்றார்கள். ஒரு கோக் குடித்தால் உடம்பு ஆயிரமாயிரம் சம்பட்டி அடிகளை வாங்குவதற்கும் மேலாக அவஸ்தைப் படுமாம். யார் கேட்கின்றார்கள். எங்குப் பார்த்தாலும் கோக் பாட்டில்களைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மக்கள்.

எனது தோழி ஒருத்தியின் மகள் எட்டு வயதில் பூப்படைந்தாள். அக்குழந்தையின் தினசரி உணவு “ பிராய்லர் சிக்கன்”. எத்தனையோ முறை அவ்வுணவு வேண்டாம் என்றுச் சொன்னேன். கேட்கவில்லை. இன்று அக்குழந்தை மனதுக்குள் குமைந்து குமைந்து அழுதுகொண்டிருக்கிறது.

கேடு கெட்ட நாகரீகம் மனிதனைக் கொல்கிறது. அதைத் தான் வாழ்வியல் அர்த்தமாக மீடியாக்கள் காட்டுகின்றன. அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

மாற வேண்டும் இந்த நிலை. மாற வேண்டியது பெண்களும் ஆண்களும்.

* * *
புத்தம் புதிய வீடுகள் இவை. இதே இடத்தில் நான்கு செண்டில் கூட வீடு ஒன்று இருக்கிறது. அது 32 லட்சம் விலையாகும். லோன் வசதியும் இருக்கிறது. டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கிளீன். வீடு வேண்டுவோர் விரைவில் புக்கிங் செய்து கொள்ளவும்.

* * *