குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com

பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்

துல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.

Friday, January 4, 2013

சொக்குத்தூள் அல்லது வசியமை


எனக்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான அழைப்புகளில் பெரும்பான்மையானவை “வசியமை” பற்றிய விசாரிப்புகள் தான் அதிகம். ஒருவரை வசியம் செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியும் அதற்கான வழிகள் பல வகைகள் இருக்கின்றன என்கின்றன பல நூல்கள்.

ஏன் வசியமை பற்றி விசாரிக்கின்றார்கள் என்றால், ஒரே ஒரு காரணம் தான். அது பெண்கள். பெண்களின் மீதான மோகத்தின் காரணமாய் வசியம் செய்து அனுபவிக்க நினைக்கின்றார்கள். இது ஒன்றினைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

வளரும் நகரத்து வாசல்கள் மூன்று
காமம் குரோதம் லோபங்கள் என்று
ஆத்மராகத்தை அழிப்பை அவையே
மூன்றையும் விலக்கு மோட்சமே உனக்கு 

- பகவத் கீதை - கண்ணதாசன் உரை ( நன்றி )

சாத்திரம் துறந்து தனிவழி மறந்து
கொண்டதே கோலமாய்க் கொள்பவன் எவனோ
அவனுயர் நிலையை அடைவதே இல்லை
இகசுக மில்லை பரசுக மில்லை
இன்பதுன் பங்கள் இரண்டவன் எல்லை 

என்கிறான் கண்ணன் என்றெழுதுகிறார் தன் கவிதை நடையிலே கண்ணதாசன்.

இப்பூமியில் எத்தனையோ மகான்களும், புனிதர்களும் வாழ்ந்து இருக்கிறார்கள். இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். மனிதனின் வாழ்க்கையே மாபெரும் புதிரானது.அதை எவரும்  புரிந்து கொள்ளவே இல்லை. என்ன சொல்லி என்ன ஆகப்போகின்றது? கொண்டதே கோலமாய் வாழ்பவர்களுக்குத்தான் அத்தனை பிரச்சினைகளும் வருகின்றன. அவர்களே தேடிப்போய் ஆப்பினை அடித்துக் கொண்டு மாட்டிக் கொள்கின்றார்கள்.

டெங்கு என்ற நோய்க்கு மலைவேம்புச் சாறு, பப்பாளி இலைச்சாறு போதும். மேற்படிச் சாறுகள் டெங்கு கிருமிகளை வளரவிடாமல் தடுக்கிறது என்று அறிவியல் ஆராய்ச்சி சொல்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வந்திருந்தது. ஆனால் மனிதர்கள் என்ன செய்தார்கள்? அலோபதி மருந்தையே உட்கொண்டு செத்தார்கள். இன்று ஒரு செய்தியைப் படித்தேன். எய்ட்ஸ் கிருமியை வளரவிடாமல் தடுக்கும் மருந்தினை மருத்துவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்கிறது அச்செய்தி. இம்மருந்து இதற்கு முன்பு பூமியில் இருந்தது தானே. மனிதன் இப்போதுதான் அதைக் கண்டுபிடித்து இருக்கிறான். எல்லாவற்றிற்கும் பூமியில் எல்லாமும் இருக்கிறது. உலகில் மறைந்து கிடப்பவை எண்ணிலங்காதவை. அதை அறியாமல் தெரிந்த சிலவற்றினால் மனிதர்கள் அதுதான் உண்மை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். இப்படியான முடிவுக்கு வருவது அதிமேதாவித்தனம். இந்த அதிமேதாவித்தனம் வந்து விட்டாலே புதிய விஷயங்களை அறிந்து கொள்வது இயலாத ஒன்றாகி விடும்.

சொக்குப்பொடிக்கு வருவோம்.

மூலிகைகள் செய்யும் வித்தைகள் எண்ணற்றவை. ஓட்டப்பந்தயங்களில் வெற்றி பெற ஒரு எளிதான வழி உண்டு. ஒரு மூலிகையை மென்று வாயில் அடக்கிக் கொண்டால் எத்தனை தூரம் வேண்டுமானாலும் விடாமல், மூச்சிறைக்காமல் ஓடிக் கொண்டே இருக்கலாம். மற்றொரு மூலிகை இருக்கிறது. அம் மூலிகைக்கு வேரே இருக்காது. அம்மூலிகை இரவில் கிழங்கு இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து அங்கிருந்து தண்ணீரை உறிஞ்சி பசும் பச்சையாய் காட்சி அளிக்கும். வேறொரு மூலிகை இருக்கிறது. அம்மூலிகை மனித வாடை பட்டாலே பூமிக்குள் ஓடிப் போய் ஒளிந்து விடும். இன்னொரு மூலிகை இருக்கிறது. அதை எடுத்து எந்த இடம் பாழாக வேண்டுமோ அங்கு புதைத்து விட்டால் அந்த இடம் பாழாய் போகும். அடுத்ததொரு மூலிகை இருக்கிறது. அதைக் கையில் கொண்டு சென்றாலே எதிரில் வருபவன் கப்சிப்பென்று உட்கார்ந்திருப்பான். இப்படியான மூலிகைகள் பலவற்றை எடுத்து, அதற்கு தேவையான சேர்க்கைகளைச் சேர்த்துச்  செய்வதுதான் சொக்குப்பொடி எனும் வசிய மருந்து. இம்மருந்து நல்லவனவற்றுக்குத்தான் உபயோகப்படுத்தப்பட வேண்டுமே தவிர, தீய காரியங்களுக்குப் பயன்படுத்தினால் மேட்டர் ஓவர். ஒழிந்தான் அத்தோடு அவன்.

தற்கால உலகில் இம்மருந்தினால் பாதிக்கப்பட்டோர் மிக அதிகம். காசுக்கு ஆசைப்படும் பலர் ஒரு சில மூலிகைகளை வைத்துக் கொண்டு பல குடும்பங்களில் பெரிய பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றார்கள். அவர்களுக்கு விதி இருந்தால் வழி கிடைக்கும்.

3 comments:

Post a Comment