குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com

பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்

துல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.

Sunday, November 4, 2012

இதுதான் தமிழகம்


கோவையிலிருக்கும் பூமார்க்கெட் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 65 வயதிருக்கும். வெளுத்துப் போன வெள்ளையுடையில், வெளிர் நிறத்தில் அந்தக்கால ஸ்கூட்டர் ஒன்றில் முதியவரொருவர் வாழைப்பழ வண்டியருகில் வந்து பச்சை நாடன் வாழைப்பழ விலை கேட்டார். 

“டஜன் அறுபது ரூபாய்ங்க” என்றார் கடைக்காரர்.

“ நாற்பதுக்கு தர்ரியா?”

“கட்டாதுங்க”

பெரியவர் ஸ்கூட்டரைத் திருப்பிக் கொண்டு சென்றார். இரண்டு நிமிடத்தில் மீண்டும் வந்தார்.

” நாற்பதுக்கு வருமாப்பா?” என்றார் பெரியவர்

“கட்டாதுங்க, இந்த பில்ல பாருங்க” என்றார் கடைக்காரர்

மீண்டும் ஸ்கூட்டரைத் திருப்பிக் கொண்டு சென்றார். மீண்டும் இரண்டாவது நிமிடத்தில் வாழைப்பழ வண்டியருகில் வந்து நின்றார்.

“சொல்லிக் கொடுப்பா?” 

“கட்டவே கட்டாதுங்க, ஐம்பது ரூபாய்க்கு வேணா தர்ரேங்க”

“சரி சரி கொடு” என்றார்.

கடைக்காரர் வாழைப்பழத்தை எடுத்து கேரி பேக்கில் வைத்துக் கொண்டே 

“எங்கே இருக்கீங்க?” என்று கேட்டார்.

”தேவாங்க செட்டியார் வீதி”

“நானும் தேவாங்க செட்டியார் தானுங்க”

“அப்படியாப்பா, இந்தா உனக்கு வேணுங்கிறதை எடுத்துக் கொண்டு மீதியைக் கொடு” என்றுச் சொல்லிக் கொண்டே நூறு ரூபாய் தாளை நீட்டினார்.
வாழைப்பழக் கடைக்காரர் 60 ரூபாயை எடுத்துக் கொண்டு, மேலும் இரண்டு பழங்களை சேர்த்து கொடுத்து விட்டார்.

”ஏன் இரண்டு பழங்களை கூடுதலாய் கொடுத்தீர்கள்? உங்களுக்கு நஷ்டமாகாதா?” என்று வாழைப்பழக் கடைக்காரரிடம் கேட்டேன்.

“என் ஜாதிக்காரருங்க, அதுவும் பெரியவருங்க” என்றார் கடைக்காரர்.

- உண்மையில் நடந்த சம்பவம் இது.

3 comments:

Ramani said...

ஒரு சிறு நிகழ்வு மூலம் ஒரு பெரிய விஷயத்தைச்
சொல்லிப் போன விதம் மனம் கவர்ந்தது
பார்க்கத் தெரிந்தவர்களுக்கு பார்ப்பதெல்லாம் பாடம் சொல்லும்
என்பது சரிதான்
மனக் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கும் நடக்கும் உண்மை...

"இது நம்ம ஆளு" - இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

Geneva Yuva said...

மனிதனே ஒரு தனி ஜாதிதான் -

Post a Comment