குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, April 18, 2009

குயிக் சாம்பார் செய்வது எப்படி ?

அம்மணி குழந்தைகளுடன் கிராமத்துக்குச் சென்று விட்டதால் வீடு சுத்தம் செய்வது, சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம். அம்மு வேறு தினமும் போனில் அழைத்து அப்பா இன்னிக்கு மீன் சாப்பிட்டேன். இன்னிக்கு ரால் சாப்பிட்டேன், இன்னிக்கு கறி சாப்பிட்டேன் என்று சொல்லிச் சொல்லி சிரிக்கிறது. மீனு மேலே விழுந்துடுச்சுப்பா என்றும், அம்மாதான் மேலே போட்டார் என்றும் கம்ப்ளெயிண்ட் செய்கிறது. ரித்தி குளத்தைப் பார்த்து விட்டு அம்மணியிடம் எப்படிம்மா கடல் இங்கே வந்தது என்று கேட்டிருக்கிறான். ரித்தி இப்படி கேட்கிறான் என்று அம்மணி போனில் கதைக்கிறார். ஊரில் குழந்தைகள் சந்தோஷமாய் இருப்பது கண்டு மனது குளிர்ந்து விட்டது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

குயிக் சாம்பார் : இன்றைக்குச் சாம்பார் வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டு முருங்கைக்காய், உருளைக்கிழங்கினை வெட்டி வைத்தேன். புளி எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊறப்போட்டு விட்டு, நூறு கிராம் துவரம் பருப்பை கழுவி குக்கரில் சேர்த்து அத்துடன் ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு பெருங்காயக்கட்டி, பூண்டு பற்கள் நான்கு, ஒரு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஆறு விசில் வரும் வரை காத்திருந்தேன். பிறகு வெந்த பருப்புடன் இரண்டு டீஸ்புன் சாம்பார் தூள், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, புளித்தண்ணீர், பச்சை மிளகாய் இரண்டு, உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பிலேற்றி மூன்று விசில் வரும் வரை விட்டு கடுகு தாளித்து, கருவேப்பிலையுடன் சாம்பாரில் சேர்க்க, மண மணக்கும் முருங்கைக்காய் சாம்பார் தயார்.

கொசுறு : வாழைக்காயை நறுக்கி எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தொடர்ந்து வாழைக்காயையும் சேர்த்து வதக்கினேன். லேசாக அடி பிடிக்கும். கிளறி விட வேண்டும். வெந்தபிறகு மிளகாய்த் தூள் சேர்த்தால் வாழைக்காய் எண்ணெய் வதக்கல் தயார்.

சாதம், சாம்பார், வாழைக்காய் வதக்கல் செய்ய கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. பேச்சிலர்ஸ், மனைவியுடன் சண்டை போட்ட கணவர்கள், சமைக்க சோம்பல் படும் உள்ளங்களுக்கு உதவும் பொருட்டு மேற்படி அனுபவச் சமையல் குறிப்பைத் தருகிறேன்.

இப்படி உடனுக்குடன் செய்யும் குழம்பு வகைகள், பொறியல் வகைகள் பல இருக்கின்றன. வாசகர்கள் விரும்பினால் எழுதுவேன்.

10 comments:

இராகவன் நைஜிரியா said...

வெளி நாட்டில் வாழும் அன்பர்களுக்கும் இது உதவும். வெளி நாட்டுக்கு போகும் போது கொஞ்சம் சாமார் பொடி, மிளகாய்ப் பொடி, எல்லாம் எடுத்துகிட்டு போனால் கஷ்டமேயில்லை.

baskar said...

சுலபமாக செய்யும் அசைவ சமையல்கள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா.......

baskar said...

துணி துவைக்கிறதுக்கும் இப்படி எதாச்சும் குறுக்கு வழி இருந்தா சொல்லுங்க தலைவா?? ரொம்ப கஷ்டமா இருக்கு....

Thangavel Manickam said...

பாஸ்கி, சுலபமாகச் செய்யும் அசைவ முறைகள் பல இருக்கின்றன. அணில் இருக்கே அதைப் பிடித்து வயித்தை கிழித்து குடல் மற்றும் இன்னபிற சமாச்சாரங்களை நீக்கி விட்டு, நெருப்பி சுட்டுச் சாப்பிட்டால் அட...அட.... என்ன அருமையாக இருக்குமென்று எனது நண்பர்கள் சொல்லுவார்கள். அது போலத் தானே அய்யா, பிச்சாவரம் கார்னிவலில் சாப்பிட்டீர்கள் ?

மேலும் ஒரு வழி இருக்கிறது. சமைக்காமல் அப்படியே முழுங்க வேண்டியது தானே....

எனது அசைவ சமையல் குறிப்புகள் எப்படி இருந்தது என்று செய்து பார்த்து சாப்பிட்டு விட்டு பதிலிடுங்கள்.

Thangavel Manickam said...

துணி அழுக்கானால் தானே துவைக்க வேண்டும். துணியை உடுத்தாமல் பீரோவில் வைத்திருந்தாலே போதும். அழுக்குப்படாது பாருங்கள் !

இப்படிப்பட்ட குறிப்பு எல்லாம் தானா தெரிஞ்சுக்கணும்.

ராஜ நடராஜன் said...

சாம்பார்,வாழைக்காய் வதக்கலுடன் ஒரு அப்பளமும் பொரிச்சிருக்கலாம்:)

Thangavel Manickam said...

ராஜ நடராஜன், அப்பளம் எனக்குப் பிடிக்காது. தாங்கள் வீட்டிற்கு சாப்பிட வந்தால் உண்டு.

सुREஷ் कुMAர் said...

//
பேச்சிலர்ஸ், மனைவியுடன் சண்டை போட்ட கணவர்கள், சமைக்க சோம்பல் படும் உள்ளங்களுக்கு உதவும் பொருட்டு
//
இந்த ரிஸ்க் எல்லாம் எடுப்பதில்லை..
பக்கத்துல மெஸ் எதாச்சுக்கும் போய்ட்டா வேல முடிஞ்சுது..
நீங்க கோயம்புத்தூரார் தானே.. நெறையா மெஸ் இருக்குமே.. :)

Thangavel Manickam said...

ஹோட்டலிருந்து சாப்பாடு வீட்டுக்கே வந்தது சுரேஷ். மூன்றாவது நாள் செரிமானப் பிரச்சினையால் காய்ச்சல் வந்து விட்டது. வேறு வழி இல்லாமல் சொந்தச் சமையலில் இறங்கி விட்டேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்றே இட்லி சாப்பிட்டேன். ஜீரணமாகவில்லை. படு பயங்கரமான அனுபவம். விடிகாலை சரசரவென வியர்க்க ஆரம்பித்து விட்டது. வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுத்த பிறகு தான் சரியானது. ஹோட்டல் சாப்பாடு கொடுமை. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் சாப்பிடலாம். தொடர்ந்தால் தொல்லைதான்.

Prakash said...

Rasam eppadi vaikkanum?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.