குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com

Monday, December 8, 2008

மொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா ?டெக்ஸ்டாப் மாடல் கம்ப்யூட்டர் இன்று லேப்டாப்பாக மாறி விட்டது. இன்னும் சிறிது காலத்தில் ”மொபைல்டாப்” கம்ப்யூட்டராக மாறவும் வாய்ப்பிருக்கிறது. மொபைல் டெக்னாலஜியின் வளர்ச்சி அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் எதிர்கால மொபைல்டாப் எப்படி உருவாக்கலாம் என்ற யோசனைதான் இந்தப் பதிவு.

தற்போது இருக்கும் மொபைல் போனில் சிறு மாறுபாடுகளைச் செய்தால் போதும், மொபைல் போனை முழுக் கணிணியாகப் பயன்படுத்தலாம். இதற்கு தேவையான வசதிகள் : இன்பில்ட் இண்டகிரேட்டட் புரஜெக்டர் (INBUILD INTEGRATED PROJECTOR), கீபோர்ட் (KEY BOARD), மெளஸ்(MOUSE), மொபைல் போனுக்கான ஆபரேட்டிங்க் சிஸ்டம் (OPERATING SYSTEM). இந்த வசதிகளை மொபைல் போனில் கொண்டு வந்தால் போதும். அட்டகாசமான கம்ப்யூட்டர் தயார். தற்பொழுது ரேடியோ, டிவி, இணையம் மூன்றினையும் மொபைலில் பயன்படுத்துகிறோம். மொபைலை மொபைடாப் ஆக மாற்றி விட்டால் உள்ளங்கைக்குள் உலகம். அகன்ற திரையில் டிவி பார்க்கலாம். சாட்டிங்க் செய்யலாம். இன்னும் என்னென்னவோ செய்து தூள் கிளப்பலாம். ஆளுக்கொரு கணிணி. ஹெட்போனைக் காதில் மாட்டிக் கொண்டால் போதும். ஆளாளுக்கு தனி உலகம். திரை தேவையில்லை. ஸ்கிரீன் தேவையில்லை. செல்போனிலிருந்து சுவரிலோ அல்லது தரையிலோ செல்போனின் உள்ளிணைந்த இண்டகிரேட்டட் புரஜெக்டர் மூலமாக ஸ்கீரினைக் கொண்டு வரலாம். மொபைல் போனுடன் (தேவையென்றால் இணைத்துக் கொள்ளும் வசதி) இணைந்த கீபோர்ட், மெளஸ் மூலம் கணிணியில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்யலாம். பேப்பர் வடிவில் சுருட்டி வைத்துக் கொள்ளும் அளவுக்கு கீபோர்டுகள் வந்து விட்டன. மெளஸ்ஸும் சிறிய சைஸ்சில் கிடைக்கின்றன. இணைய இணைப்புக்கு 3ஜி டெக்னாலஜி பயன்படுத்தலாம். இதற்கு என்று பெரிய அளவில் செலவு ஏதும் பிடிக்காது. பிரச்சினை என்னவாக இருக்குமென்றால் ஸ்டோரேஜ். இதற்கும் வழி இருக்கிறது. அதிவேக பிராசஸர், மற்றும் ரேம் மெமரியுடன், எஸ்டி கார்ட் மூலம் இப்பிரச்சினையையும் எளிதில் தீர்த்து விடலாம். 3ஜி வந்து விட்டால் இணைய வேகமும் உயரும். ஆக, மொபைல் நிறுவனங்கள் எதிர்காலத்தில் இவ்வகைக் மொபைல் கம்ய்யூட்டரை உருவாக்கியே தீர வேண்டும். இதற்கான விலையினைக் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்குள் அடக்கி விடலாம். பவர் பிரச்சினை இருக்காது. யூபிஸ் தேவையில்லை. இப்படி எவ்வளவோ வசதிகள் தரப்போகும் மொபைல்டாப் எப்போது வரும் ??????

3 comments:

Post a Comment