குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com

Thursday, December 11, 2008

வசிய மை

வசிய மை.. வழிக்கு வராத பெண்களை மயக்கி வழிக்குக் கொண்டு வரவும், அடுத்த வீட்டுக் கொல்லையில் மேயும் ஆண்களை முந்தானைக்குள் முடிந்து வைத்துக் கொள்ளவும் உதவும் மை. கிராமப்புறங்களில் பெரும்பாலும் புழக்கத்திலிருக்கும் மைக்குப் பெயர் தான் வசிய மை.

புருஷன் மார்பு அழுக்கை பட்டாணி அளவு எடுத்துக் கொட்டைக் கரந்தை இலைச் சாற்றில் குழைத்துச் சக்கரைச் ஜீராவில் கலக்கி மூன்று வேளை மனைவிக்குக் கொடுக்க மனைவி வசியமாவாள். இது ஒரு விதம். 

முளவாணைச் செடிக்கு சுக்கிரவாரம் செடி மேல் மஞ்சள் ஜலம் தெளித்து அந்த இடத்தைச் சுத்தம் செய்து பொங்கலிட்டு, மஞ்சள் நூல் காப்புக் கட்டி எலுமிச்சை பழம் பலி கொடுத்து தூப தீபங்காட்டி பொங்கலிட்டு நைவேத்தியம் செய்து, அச்செடியின் வடக்குப்பக்கமாகச் செல்லும் வேரை ஒன்றரை அங்குல நீளம் துண்டித்து அதை மஞ்சள் நூல் சுற்றி குங்குமமிட்டு தூபதீபங்கொடுத்து உட்கார்ந்து, “ஓம் வாளை ..... சுவாஹ” ” என்று 108 தரம் சொல்லி மறுபடியும் தூப தீபங்காட்டி ஓர் வெள்ளித் தாயத்தில் அடக்கம் செய்து புருஷனின் வலது கையில் கட்டிக் கொள்ளவும். மேற்படி மந்திரத்தை தினம் ஒரு முறை 108 தரம் ஜெபிக்கவும். இவ்விதம் 7 நாட்கள் ஜெபம் செய்தால் பெண் வசியமாவாள். இது மற்றொரு விதம். 

இப்படி புத்தகத்தில் எழுதியிருக்கின்றார்கள். இதையெல்லாம் செய்தால் வசிய நடக்குமா என்று தெரியவில்லை. 

30-12-2016 அன்று எழுதிய அடிக்குறிப்பு:

மேற்கண்ட எல்லாம் செய்து பெண்ணை வசியம் செய்து என்ன ஆகப் போகின்றது என்று தெரியவில்லை. வசியம், மாந்திரீகம் என்றுச் சென்றவர்கள் எல்லோரும் வாழ்வை இழந்து படாத பாடுபடுகின்றார்கள். மாதம் ஒரு தடவையாவது எவராவது போன் செய்கின்றார்கள். வேண்டாத விபரீதங்களை எல்லாம் கொண்டு வந்து விடும் இத்தைகைய எண்ணத்தை உடனடியாக நீக்குங்கள்.

6 comments:

Post a Comment